சனி, 23 மே, 2009

தலைவருக்கே தார் போட்டுவிட்ட காங்கிரஸ்

“என்னதான் 40 இல்லாட்டியும் 28 க்காவது கொஞ்சம் பாத்துசெய்யப்படாதா சர்தார்ஜி என எப்படி முடியுமோ அப்படியெல்லாம் பேசிப்பார்த்துவிட்டார் கலைஞர். ஆனால் அவரின் கணிவுப்பேச்சை கண்டுகொள்ளாமல் தன் பிடியில் உறுதியாக இருந்துவிட்டார் பிரதமர் மண்மோகன். இதனாலேயே தலைவர் கலைஞர் பதவிஏற்பு விழாவில் கூட கலந்து கொள்ளாமல் அவசர அவசரமாக பிளைட் புடிச்சி ஊருக்கு ஓடியாந்துட்டார். 

கடந்த 19ந் தேதி எப்படியாவது தகவல் தொழில் நுட்பத்தையும்,கப்பல் சாலையும் பேரம்பேசி புடித்துவிடவேண்டும் என்று டெல்லி சென்ற கலைஞர், 20ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமது கட்சிக்கு எத்தன மந்திரி சீட்டு வேனும், என்னென்ன இலாகாக்கள் வேனும்னு ஒரு லிஸ்ட குடுத்துருக்காரு. அதை பாத்த பிரதமரு அரைமயக்க நிலையில் "நான் அரசாங்கத்தை நடத்தனும் சாமி, நீங்க சொன்னத நான் கேட்டா நாளைக்கே என்ன கொண்டு போயி ஏதாவது ஒரு ஊர்ல பாவ்பஜ்ஜி விக்க உட்டுருவாய்ங்கே அப்டின்னு அழாத கொறயா சொல்லியிருக்காரு. இங்கிலீஸ்ல‌ அவரு சொன்னத அப்டியே அழகுத் தமிழில் வருங்கால அமைச்சர் கனிமொழி தனது அப்பாக்கு மொழி பெயர்த்து சொன்னாங்களாம். 

பிரதமரின் இந்த வார்த்தைகள் கேட்டு அதிர்ச்சியடைந்த கலைஞர் பிரதமரைப் பார்த்து "சாயங்காலம் ஆனா புதுசு, சாயம் போனா பழசுன்னு" நிறுபிச்சிட்டீங்களே என தமிழில் சொல்லியவாறு வெளியேறியிருக்கிறார். அவர் சொல்லிய பழமொழியில் ஏதோ (இரட்டை) அர்த்தம் ஒளிந்திர்ப்பதை உணர்ந்த பிரதமர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் டீகே டீகே ஜி என மழுப்பியவாறு டாட்டா காட்டி விட்டார். 

தன் கோரிக்கைக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது என்று தெரிந்ததும் அவர் சென்னைக்கு திரும்ப முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோர் மீது ஊழல்குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர்களுக்கு அமைச்சர் பதவி சாத்தியமில்லை எனவும் பிரதமர் கூறியதாகத் தெரிகிறது. அது மட்டுமின்றி அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு காபினெட் பொருப்பு கேட்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். உட்டா வீரத்தளபதி ரித்தீஸூக்கே கேபினட் கேப்பாங்க போலிருக்கே என பொலம்பித் தள்ளினார் ஒரு காங்கிரஸ் பார்வையாளர். 

காங்கிரசிடம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள லடாய் அவ்விரு கட்சிகளுக்கிடையேயான உறவை பாதிக்குமா என்று பிரதமரிடம் கேட்ட போது, "இது தற்காலிகமானது. அவர்கள் எங்கள் மதிப்புமிக்க சகாக்கள். அவர்கள் மீண்டும் திரும்புவார்கள், எங்களை விட்டால் அவர்களுக்கு யார் இருக்கிறார்கள்,குடும்பம்னா செல பிரச்சினை வரத்தான் செய்யும்" என்று சிரித்துக்கொண்டே மன்மோகன் சிங் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நடந்தவற்றிற்காக வருந்துவதாக தெரியவில்லை. பாலுவையும், ராஜாவையும் அமைச்சரவையில் சேர்க்க மாட்டோம் என்று தாங்கள் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

டி.ஆர்.பாலு தலைமையில் சாலை போக்குவரத்து துறை செயல்பாடு குறிப்பிடும்படியாக இல்லை எனவே தான் அந்த இலாகாவை காங்கிரஸ் கட்சி வைத்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சி எங்களுக்கு உரிய பங்கையும், மரியாதையையும் அளிக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

3 கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய ஒரு இணை அமைச்சர் பதவி, 2 இணை அமைச்சர்கள் பதவி ஆகியவற்றை தர காங்கிரஸ் முன் வந்துள்ளது. அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர் நலன், ரசாயனம் மற்றும் உரம் ஆகிய இலாகாக்களை தர தயாராக இருக்கிறோம். அவர்கள் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் திமுக கேட்டபடி கப்பல் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, எரிசக்தி, ரெயில்வே ஆகிய துறைகளை அளிக்க காங்கிரஸ் சத்தியமா அவர்களுக்கு கொடுக்க முன்வரவில்லை என்பது முக்கியச் செய்தி. 

ஏரு ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்புடுமாம்.

3 கருத்துகள்:

Suresh Kumar சொன்னது…

அழகிரி , கனி மொழி , தயாநிதி மாறன் இவங்க மூன்று பேருக்கும் மந்திரி பதவி கொடுக்க வில்லையென்றால் தமிழகம் கொந்தளிக்கும் . தமிழகம் கொந்தளிச்சா நான் உண்ணாவிரதம் இருப்பேன் நான் உண்ணாவிரதம் இருந்த உடன் பிறப்புகள் பேருந்தை கொளுத்துவார்கள் இதெல்லாம் நடக்க முன்னால நான் கேட்டதை குடுத்திடுங்கோ . எனக்கு எவன் எப்படி செத்தாலும் பரவாயில்லை என் குடும்பத்துக்கும் கிடைக்க வேண்டிய மந்திரி பதவி சரியா வரணும் - கருணாநிதி கம்பனி முதலாளி கலைஞர்

வான்முகிலன் சொன்னது…

அய்யா தயவுசெய்து அவரு கேட்குற தொறைய கொடுத்துடு்ங்க. இல்லாட்டி எங்க நிலம?

பெயரில்லா சொன்னது…

Hahahaha,Well done Soniya-ji,karunanithi robed 10000 million rupee from past government through Rasa,and bought vote from that money in this election,.but hahahaha karunanithi got jujubi from soniya.sonia got two mango from one stone.