புதன், 27 மே, 2009

காத்துல வெண்ணை எடுக்கும் கலைஞர்

போனதடவை 40 சீட்ட‌ வச்சிக்கிட்டு நாளை நமதே நாற்பதும் நமதேநம்மள கவனிப்பதும் நல்லதே என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உண்டு இல்லைன்னு பண்ணி டில்லியிலே ரூம் போட்டு தங்கியிருந்து டார்ச்சர் கொடுத்தாரு கலைஞரு. வைக்கோல்கட்ட முன்னாடி போற வண்டியில கட்டி பின்னாடி வர்ர மாடுகள ஏமாத்தி அழைச்சிகிட்டு போற சூட்சமத்த நடைமுறைப் படுத்தினாரு தலீவர் கலைஞரு. மக்கள் 40 க்கும் கொடுத்த அங்கீகாரத்த நல்ல முறையில பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் கவணிக்க! மக்களுக்கு நல்லது செய்ய வேண்டி வளம் கொழிக்கும் துறையா பாத்து கூடயப் போட்டு அள்ளுனாரு. ஐடிசாலை மற்றும் கப்பல்னு சீட்டுக்குலுக்கிப் போட்டு எடுத்து வாங்கிக்கிட்டு வந்து போன தடவ யார் யாரு என்னென்ன செஞ்சாங்கங்கிறது நாட்டு மக்களுக்கு நல்லாவே தெரியும். 

அந்த மாதிரி இந்த முறையும் 40 தொகுதிகளையும் புடிச்சாத்தான் நல்லது நடக்கும்னு சொல்லி மக்களிடம் ஓட்டுக்கேட்டாரு கலீஞரு. அது எப்டி தெரியுமா ஓட்டுக்கேட்டாருஅவரு மொகத்த பாத்தா எவ்ளோ பெரிய கொடூரமணம் படச்சவனும் இறக்கப்பட்டு ஓட்டுக்களை அள்ளிக் கொட்டிடுவான். அந்த வகையில் தலைவர் கலைஞர் அவ்ளோ ஜோரா தன்னோட பிரச்சாரத்தப் போட்டாரு. உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி கெளப்பிஉட்டு அங்க ஒரு கூட்டத்தக் கூட்டி காமெடி பண்ணுனாரு. ஆனா என்னத்த சொன்னாலும் நம்மக்கூடிய உட‌ன்பிறப்புகள் தலைவரோட கண்ணீரக்கண்டு கலங்கிப்போயி ஓட்டுகள குத்தி குமுறிட்டாங்கள்ள. 

அந்த நேரத்தில் அதாவது எலக்சன் நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்களெல்லாம் ஒரு பக்கம் சீரியலைப் பார்த்து அழுகஆண்களெல்லாம் தலைவர் எழுதுன கவிதைகளையும் கடிதங்களையும் படிச்சி படிச்சி அழுது வடிக்க தமிழகமே கண்ணீர் கடலில் மிதந்து தான் போனது. அதிலும் தலைவர் எழுதிய தீலீபன் கல்லறைக்குப் பக்கத்திலே என்ற கடிதம் மிகவும் மக்களை பாதித்து. இப்போதலைவர்கிட்ட போயி திலீபன்னா யாருன்னு கேளுங்கதிலீபனா யாரு அது?விடுதலப் புலியா அப்டின்னு  கேட்டாலும் கேப்பாரு. இவ்வளவு தளந்து போயி இருந்த இலங்கைத் தமிழர் விசயமாக டெல்லிக்கு போயி பேசுனா என்னஅப்டின்னு கேட்டதுக்குஅதெல்லாம் டாக்டர் எங்கயுமே அசையக்கூடாதுன்னு சொல்லிட்டாரு அப்டின்னு அடிச்சிவுட்டார் தலீவர். எலக்சன் முடிஞ்சி ரிசல்ட்டு வந்ததும் அடுத்த பிளைட்ட புடிச்சி ஓட்டமா ஓடிப்போயி சீட்டு பேச்சி வார்த்தைக்குப் ‍போயிட்டாரு. 

அது மட்டுமில்லாம தேர்தல் நேரத்தில் பேட்டி கொடுக்கும் போது இருந்த அந்த தளர்ச்சி அந்த முடியாமை இப்போது இல்லை. மிக சுறுசுறுப்பாய் காணப்படுகிறார். சீட்டு பேச்சிவார்த்த இழுபறி ஆனதோட மட்டுமல்ல தலீவரு கேட்ட சீட்டும் அவங்க குடுக்க மறுத்ததால சொல்லாம நைசா கெளம்பி வந்திட்டாரு. நல்லா யோசிச்சிப் பாருங்க. பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ஒரு கூட்டணிக் கட்சியின் தலைவர் இல்லாவிட்டால் உலகம் என்ன பேசும்கலைஞர் கொடுத்த டார்ச்சர தாங்கமுடியாம போன காங்கிரஸ்காரங்க தமிழக காங்கிரஸ்காரங்களத் தூண்டிவிட்டு இன்னொரு விதமா மேட்டர போட்டாங்க. 

மத்திய காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் இத்தனை அமைச்சரவை பதவிகள் வேண்டும்இந்தந்த துறைகள் வேண்டும் என்று கேட்டு கலைஞர் குடுமிப்பிடி சண்டை போட்டு வரும் நிலையில்,தமிழக மக்களுக்கு நல்லது செய்யவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும் தமிழக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்பதில் தவறு இல்லை என்று தமிழக ஆட்சியில் காங்கிரசுக்கும் இடம் தர வேண்டும் என இந்தப் பக்கம் திரியக் கிள்ளிப் போட்டுவிட்டார்கள்

முந்தைய‌ காலங்களில் இது குறித்து தமிழக முதல்வர் கலைஞர் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரசார் மந்திரி சபையில் பங்கு கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.எனவே முதல்வர் கலைஞர் தமது கட்சிக்கு டெல்லி சென்று உரிமையுடன் மந்திரி பதவி பெற முயற்சி செய்வது போல்தமிழக காங்கிரஸாரும் அவரிடம் அமைச்சர் பதவி கேட்டுப் பெற கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாவட்ட நிர்வாகங்கள் போர்கொடி உயர்த்தியுள்ளன‌. 

ஆனாகாள மாட்டுல பால் கறந்துகாத்துல வெண்ணை எடுக்கிற தலைவர் கலைஞர்கிட்ட ஆட்சில பங்குகேக்குற மேட்டரு எல்லாம் கதைக்கு ஆவாது என்பது சாமானியர்களாகிய நமக்கே தெரியும் போது தமிழக காங்கிரஸாருக்கு தெரியாமையா இருக்கும். எல்லாமே ஒரு செட் அப் தான். 

பனமரம் படுத்தா பன்னி கூட ஏறி பம்படிக்குமாம்.

4 கருத்துகள்:

Raja சொன்னது…

தலை காத்துல வெண்ணை மட்டும் எடுக்குற ஆள் இல்லை முடிஞ்சா பெட்ரோல் கூட எடுப்பாரு :)))

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழ்ர்ஸ்

அஹோரி சொன்னது…

உடன்பிறப்புக்கள் கோவிச்சிக்க போறாங்க . ஏன் இப்படி எல்லாம் எழுதுறீங்க ? 'முத்தமிழ் வித்தவர்' ர பாராட்டி தான் எழுதணும் , இல்ல எழுதவே கூடாது. புரிந்ததா ?

abcd சொன்னது…

eambaa nee kidandhu vehura...

nee eluthuratha rendu per virumbi padithaal nee solradhu ellam nadakkumnakiradhu kattayam illa. pothikkittu iru.. sariyaa..

avar anupavam un vayasai vida 3 madangu... nee konjam adangu.