வியாழன், 28 மே, 2009

பிரபாகரன் உயிரோடு பிடிக்கப்பட்டாரா?

பிரபாகரனின் மரணத்தில் நிலவும் சர்ச்சை இன்றுவரை முடிவுக்குவந்தபாடில்லைஅவர் இறந்துவிட்டார் என்பது மட்டும் உறுதிசெய்யப்பட்டுவிட்டது.ஆனால் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லதுபோரின் போது மரணமடைந்தாரா என கேள்விகள் எழுந்து அதற்கே இன்னும்விடை காணப்படாத நிலையில் ற்போது உலவும் மற்றொரு செய்திஅதிர்ச்சியடைய வைக்கிறதுஅது என்னவென்றால் வன்னி போர்க்கலத்தில்உக்கிர போர் நடந்துகொண்டிருந்த போது அங்கே இருந்த கரும்புலிகள் தங்கள்உடலில் கிலோ கணக்கில் வெடிமருந்துகளை கட்டிக்கொண்டு இலங்கைபடையினரை நோக்கி தாக்குதல் நடத்தியதாகவும் இந்த சந்தர்பத்தினைப் பயன்படுத்தி பிரபாகரன் தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களை எதிர்கொண்ட ராணுவம் பிரபாகரனையும் கண்காணிக்கத் தவறவில்லை. ஒரு வேனில் ஏறி பிரபாகரன் தப்ப முயன்றதாகவும் அந்த வேனை சுற்றி வளைத்த ராணுவத்தினர் அதன் இயக்கத்தை செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் பிரபாகரன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை சுற்றிவளைத்துப் பிடித்த ராணுவம் அவரைக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிரபாகரனை ராணுவக் கொட்டடியில் அடைத்து மிகக் கடுமையான சித்தரவதைகள் செய்யப்பட்டிருக்கின்றன

அவரை நிர்வாணமாக்கி கொடுமை செய்திருக்கிறார்கள் கொடூர மணம் படைத்த இலங்கை ராணுவத்தினர். அது மட்டுமின்றி அவருடைய நகங்களைப் பிடிங்கியதாகவும் அதன் பின்னரே அவரை நிர்வாணக்கோலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றனர் என்றும் கூறப்படுகிறது. அவரது தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததால் அவரது தலைப்பாகம் தெறித்து விழுந்திருக்கிறது. அதன் பின்னர் அவரது உடலை அருகே இருந்த நீரோடைச் சேற்றில் வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே அவரது உடலை கழுவி உடையணிவித்து வீடியோ எடுத்து ஊடகங்களுக்கு கொடுக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த சித்தரவதையின் போது எடுக்கப் பட்ட படங்களை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தும் ராணுவத்தில் இருந்த யாரோ சிலர் இந்தப் படங்களை வெளியிட்டு விட்டனர்

இந்த நிலையில் உயிரோடு இருப்பதாகக் கருதப்பட்டபிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்துவிட்டார்கள் என விடுதலை புலிகளின் வெளி விவகார தலைவர் பத்மாநாபன் தன்னிடம் கூறியதாக இலங்கை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்துவிட்டதாக அந்த அமைப்பின் வெளிவிவகார பிரிவு தலைவர் பத்மாநாபன் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் சொல்வதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அவர்கள் போர் பகுதியில் இருந்திருந்தால் நிச்சயமாக உயிர் தப்பியிருக்க முடியாது

பிரபாகரன் அரசியல் தீர்வை ஏற்க மறுத்துவிட்டார். அவரால் தான் 1 லட்சம் தமிழர்கள் இறந்துள்ளனர். பல கோடி கணக்கில் சொத்துக்கள் நாசமாகியுள்ளது என்று கூறியிருக்கிறார் கருணா. இப்படி நாளும் ஒவ்வொரு செய்திகள் வெளியாகி வருவதால் உலகத் தமிழ்மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என புலம்பெயர் தமிழர்கள் தங்கள் உறுதியை இழந்துவிடவில்லை. இன்னமும் பிரித்தானியா பாராளுமன்றம் முன் நடத்தப்படும் ஆர்ப்பாட்டாங்களும் போராட்டங்களும் தொடந்து கொண்டுதான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: