
விஜய்னாலே வில்லங்கம்னு ஆயிப்போச்சி. அது என்னமோ தெரிய பீல்டுல இவ்வளவு நடிகர்கள் இருக்கும் போது விஜய்க்கு மட்டும் தான் ஸ்பெசல் கவனிப்பு ஆராதனை நடக்கிறது. இத்தனைக்கும் விஜய்க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் கொடி புடிச்சி கோசம் போடும் அதே ரசிகர்களே படம் நல்லா இல்லாட்டி டாஸ்மாக்ல சரக்க போட்டுட்டு சகட்டுமேனிக்கு திட்றதும் உண்டு. இந்த சிறப்பு விஜய்க்கு மட்டும் தான் அமைந்திருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கில்லி படத்த ஹிட் குடுத்ததிலிருந்து அவர் தன் பாணியை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. மசாலாப்புளி பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சியும், சிவகாசியும் நல்லா போனாலும் போனது அதிலிருந்து விஜய் அதே ரவுடி பாணி வேடங்களை ஏற்க ஆரம்பித்தார். விஜய்யைப் போலவே உங்களுக்கும் ஹிட் தர்றேன்னு கூட்டிகிட்டு போயி அஜீத்தை அதள பாதாளக் கிணற்றில் தள்ளி விட்ட பேரரசு, மீண்டும் தான் எழுதி வைத்திருந்த இன்னொரு மொக்கை கதைக்கு மறுபடியும் விஜய்யை அனுக அத்தோடு அவரை வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டார் விஜய்.
உடைந்து தொங்கிய மார்க்கெட்டை மீண்டும் துக்கி நிலை நிறுத்த அவரது பழைய ஐடியாவான மகேஷ்பாபு படங்களை ரீமேக் செய்ய முடிவு செய்தார். (நல்ல வேலை நந்துவும் குமரனும் பிழைத்தது) அந்த நேரத்தில் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட போக்கிரி படத்தை டைட்டிலை கூட மாற்றாமல் அப்படியே தமிழில் ஜெராக்ஸ் எடுத்தார் பிரபுதேவா. ஏற்கனவே கேசினோவில் போக்கிரி படத் தெலுங்கு பதிப்பைப் பார்த்துவிட்ட சினிமா விளிம்பிகள் தேவியில் போக்கிரியை வேண்டா வெருப்பாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். காசைக் குடுத்துட்டமே! சரி பரவாயில்ல ஏசியிலயாவது உக்காந்துட்டுப் போவோம்னு முடிவு செஞ்சாங்க ரசிகரல்லாத பொதுமக்கள்.
அதுவும் வேலைக்காவாமல் போகவே மறுபடியும் தரணி தான் லாயக்கு என மறுபடியும் தரணியிடம் தூது விட ஆரம்பித்தார். அவரும் வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என கூறியிருந்த நேரத்தில் தான் அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டி உதயநிதியை ஒன்பது மேகங்களோடு அனுப்பிவைத்தாள். குருவி தௌஸன்ட் வாலா சரவெடி என்றார்கள். ஆனால் அதுவும் நமுத்துபோன ஊசி வெடியானது. ஆனால் மேற்கண்ட எல்லாப் படங்களும் நூறு நாள் ஹிட் என அவர்கள் தங்கள் சொந்தக் காசை வைத்து போஸ்டர் ஒட்டியும் பேப்பர்களில் விளம்பரம் செய்ததும் தான் சிறந்தக் காமெடி. அது சரி தியேட்டர் நம்மளுதா இருந்தா சந்திரமுகி படத்தையே 800 நாள் ஓட்டலாமில்லையா! அது மாதிரி தான் இதுவும்.
இந்த நிலையில் மீண்டும் பிரபுதேவா மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கதையை விஜய்யிடம் கொண்டு வந்தார். டைட்டில் சாங்கே “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என பாடலோடு ஆரம்பித்த கதையைக் கேட்டு அசந்து போனார் விஜய். அதுதான் சூப்பர் டூப்பர் ஹிட் வில்லு. ஆனால் படம் வெளியான பின்புதான் அந்த அச்சம் என்பது மடமையடா என்ற வரிக்கே அர்த்தம் தெரிந்தது. அதாவது இந்தப் படத்தின் கதையைக் கேட்டு அஞ்சிய தயாரிப்பாளருக்காகத்தான் அந்தப் பாட்டு போடப்பட்டது என்று பின்னர் தான் நம்மாள் கணிக்க முடிந்தது.
படத்தின் வெற்றி ரேட்டிங்கைக் கேள்விப் பட்டு ஊர் ஊராக நகர்வலம் போன போது தான் திருச்சியிலே திருவிழா நடந்தது. குருவி படத்திலயாவது வேகமா பறந்து வந்து ஓடும் டிரைனில் ஏறுவார். அந்த சீனெல்லாம் சாதாரனம் என சொல்லும் அளவிற்கு வில்லு படத்தில் கப்பலில் இருந்து குதிப்பதும், கார்கள் கூட்டமாக வெடிக்கும் போது கூலாக நடந்து வருவதும் போன்ற பயங்கர காமெடி சீன்கள் வைக்கப்பட்டது. எப்படா மாட்டுவாரு விஜய்னு காத்திருக்கும் கண்மணிகள் இரவு பகலாகத் தேடி வில்லு படத்தை முழுமையாக ஒரிஜினல் பிரிண்டாக இணையத்தில் விட்டு இதய சாந்தி அடைந்தார்கள்.
இந்த நிலையில் தன் பழைய அடிகளையெல்லாம் துடைத்து தூரத்தூக்கிப் போட்டுவிட்டு வேட்டைக்காரனில் வேகமாக நடிக்க ஆரம்பித்தார் இளைய தளபதி. அவருக்காக மட்டுமின்றி வில்லுபடத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட அவரது ரசிகர்களை குத்து குத்துன்னு குத்தி குலுங்கி குலுங்கி ஆடவைக்க இரவு பகலாக உழைத்து வேட்ட வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் பரம்பரைடா என்ற பாடலை போட்டு ராஜமுந்திரியில் இந்தக்காட்சியை சூட் செய்தார்கள்.. அவ்வளவு சீக்ரெட்டாக போட்ட பாட்டு இன்னும் ஆடியோ ரிலீஸே நடக்காத நிலையில் இணையத்தில் வெற்றி நடை போடுகிறது. யாரோ புண்ணியவான்கள் கடைசிவரைக் கூடவே குத்தவைத்திருந்து அவர்கள் அசந்த நேரத்தில் ஆட்டயப் போட்டுகிட்டு வந்து இணையத்திலே இணைத்து விட்டார்கள்.
பாவம் விஜய் என்னதான் செய்வார்.,எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று எல்லோரிடமும் புலம்பித் தீர்க்கிறாராம். அவரை அவரது நலவிரும்பிகள் சிலர் திருநல்லாறு சணீஸ்வரன் கோயிலுக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு அப்பறமா வேட்டைக்காரன் ஆடியோவை ரிலீஸ் பண்ணுங்க என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்களாம். சரி போய்த்தான் பாப்பமேன்னு முடிவுல இருக்காரம் தளபதி. இன்னும் சிலர் அதெல்லாம் தேவையில்லை வழக்கம் போல அந்த ஷாவோடு அமெரிக்காவுக்கு ஒரு டிரிப் அடித்துவிட்டு வாருங்கள் என அட்வைஸ் குடுக்கிறார்களாம். இது கூட நல்லாத்தான் இருக்குன்னு அதையும் மைன்ட்ல வச்சிருக்காராம்..
என்னவோ. எப்பா விஜய் ரசிகர்களா! தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா! முன்னயாவது டேய்னு கத்தினாரு. இந்த தடவை அடி பின்னிடுவாரு. எப்டியெல்லாம் இம்சையக் குடுக்குறாய்ங்கே!
6 கருத்துகள்:
super pa எப்டி இப்டில்லாம்
super pa எப்டி இப்டில்லாம்
me the first
இந்த பாட்டு எந்த இணைய தளத்தில் இருந்து ஆட்டாயியை போடா முடியும்
// என்னவோ. எப்பா விஜய் ரசிகர்களா! தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா! முன்னயாவது டேய்னு கத்தினாரு. இந்த தடவை அடி பின்னிடுவாரு. எப்டியெல்லாம் இம்சையக் குடுக்குறாய்ங்கே! //
ஆத்தாடி...
வேட்டைக்காரன் பரம்பரைடா...
லீக்காயிடுச்சி விஜய் பாட்டு!
Unavu udai uraividam uzhavanukku
kidaikkanum avan anupavicha micham meedhi
aandavanukku padaikkanum
download vettaikaran songs here....
கருத்துரையிடுக