ஞாயிறு, 17 மே, 2009

சிதம்பர வெற்றி ரகசியம் என்ன?

300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தோற்றுவிட்டதாக செய்திகள் உறுதிசெய்யப்பட்டன. ஆனால் திடீரென்று மறுகூட்டலுக்கு உத்தரவிடப்பட்டு 3300 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. என்ன நடந்தது? அதே போல திருச்சியில் சாருபாலா தொண்டைமான் தன் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார் என தெரியவந்த போது திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. அதிமுகவினரின் போராட்டத்தால் மீண்டும் துவங்கப்பட்டு அவர் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு பணபலம் ஆள்பலத்துக்கும் மத்தியில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு செல்வி ஜெயலலிதா நன்றி தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்

13.5.2009 அன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தி.மு.க.வின் பணபலம், படை பலம், அதிகார பலம் ஆகியவை ஜனநாயகத்தை வென்றுவிட்டன. ஜனநாயகம் அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. 

இந்த தேர்தலில் தி.மு.க.வினர் பரவலாக பணப்பட்டுவாடா செய்தது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றது, பல வாக்கு சாவடிகளை தி.மு.க.வினர் கைப்பற்றியது உட்பட பல்வேறு முறைகேடுகளை, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டின. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதையே இந்த தேர்தல் உணர்த்துகிறது.வாக்கு எண்ணிக்கையிலும் தி.மு.க.வினரின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. 

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில், கழக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளிவந்த பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில், சில தில்லுமுல்லு வேலைகள் மூலம் தற்போது சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 

தி.மு.க.வினரின் இவ்வளவு அத்துமீறல்களையும், அராஜகங்களையும் மீறி, என் மீது நம்பிக்கை வைத்து, எனது வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். 

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நன்றி தெரிவித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில் 

நடைபெற்ற 15-வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் திமு.க. காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக தொகுதிகளுக்குள் செலுத்திய பண நாயகத்தால், பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. அதையும் மீறி அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த கூட்டணி 13 தொகுதிகளில் பெற்றுள்ள வெற்றி, ஜனநாயகத்துக்கு சூட்டப்பட்ட மகுடம் ஆகும். 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பணத்தை வழங்கினர். வாங்க மறுத்த வீடுகளுக்கு உள்ளும் பணக்கவர்கள் திணிக்கப்பட்டன. பல இடங்களில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்களிலும் காவல்துறையின் துணையோடு பணம் வழங்கப்பட்டது. 

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே இதை அறிந்த நான், அன்று செய்தியாளர்களை சந்தித்த போது எனது நேர்மைக்கும், நான் ஆற்றிய பணிகளுக்கும் உரிய வாக்குகள் எனக்கு கிடைக்காது. அ.தி.மு.க கூட்டணி பலத்தால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடும் என்று சொன்னேன். 

இந்த களத்தை இழந்தாலும் எதிர்வரும் களங்களை வெல்வோம் எனும் நம்பிக்கையுடன், தமிழ்நாட்டின் நலன் காக்க, ஈழத்தமிழர் இந்திய ஜனநாயகத்துக்கு வலுவூட்ட ம.தி.மு.க. பயணத்தை நெஞ்சுரத்தோடு முன்பைக்காட்டிலும் முனைப்புடன் தொடருவோம் எனத் தெரிவித்து கொள்கிறேன்  என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

தமிழக மக்கள் முடிவு என்பது நிச்சயம் நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்ற கருத்தை நாமும் மணதில் கொண்டு வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர்களிக்கு வாழ்த்துச் சொல்லுவோம். அது மட்டுமின்றி தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இதுவரை கிடப்பில் போடப்பட்டு தேர்தல் முடிந்தபின் ஓப்பன் செய்து கொள்ளலாம் என்ற கோப்புகளை மறுபடியும் திறந்து ஜனநாயகக் கடமையாற்றுவார் என் நம்புவோம். உதாரணமாக ஒக்கனேக்கல் கூட்டுக்குடி நீர்த்திட்டம். 

எல்லாம் ஓக்கே, பணம் இருக்கு அப்டிங்கிற ஒரே ஒரு காரண‌த்துக்காக மட்டுமே எங்க வீரத்தளப‌தி ரித்தீஸயெல்லாம் டெல்லிக்கு அனுப்பி அழகு பாக்குற தெறம எங்கத் தலைவர் கலைஞரை விட்டா வேற யாருக்கு இருக்கு சொல்லுங்க‌

பாரத சமுதாயம் வாழ்கவே!

5 கருத்துகள்:

கிரி சொன்னது…

//இந்த தேர்தலில் தி.மு.க.வினர் பரவலாக பணப்பட்டுவாடா செய்தது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றது, பல வாக்கு சாவடிகளை தி.மு.க.வினர் கைப்பற்றியது உட்பட பல்வேறு முறைகேடுகளை, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டின. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதையே இந்த தேர்தல் உணர்த்துகிறது.வாக்கு எண்ணிக்கையிலும் தி.மு.க.வினரின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது//

அம்மா ஆட்சியில் கராத்தே தியாகராஜன் உட்பட பலர் சென்னையில் மேயர் தேர்தலில் அராஜகமாக நடந்து கொண்டது நினைவிற்கு வந்து தொலைக்கிறது..

//எல்லாம் ஓக்கே, பணம் இருக்கு அப்டிங்கிற ஒரே ஒரு காரண‌த்துக்காக மட்டுமே எங்க வீரத்தளப‌தி ரித்தீஸயெல்லாம் டெல்லிக்கு அனுப்பி அழகு பாக்குற தெறம எங்கத் தலைவர் கலைஞரை விட்டா வேற யாருக்கு இருக்கு சொல்லுங்க‌?//

:-)))))))))

mayavi சொன்னது…

ippadi innum 5 varushathukku polambukaa.... nilayana achii vendurm endru ottu potta makkaluku nandri...

ungala ellam partha pavama irukku... hahhahahaa...

mayavi சொன்னது…

Ramarajan delhi pogum pothu neegha paal karaka poitingala..???

பனங்காட்டான் சொன்னது…

சைக்கிள் கேப்பில் அண்ணன், நாளைய மத்திய நிதி அமைச்சர் JK. ரித்தீஸ் எம்.பி அவர்களைத் தாக்கியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் ரசிகக் கண்மணிகள் தமிழகமெங்கும் காலவறையற்ற உண்ணும்விரதத்தில் ஈடுபடுவார்கள் என் எச்சரிக்கிறோம்.
இவண்
செயளாலர்
JKR பேரவை
இராமநாதபுரம் நகர் கிளை

பெயரில்லா சொன்னது…

ராஜா கண்ணப்பன் முப்பது அஞ்சு கோடி பணம் வாங்கி விட்டு சிதம்பரம் வசம் சரணடைந்து ஜெயாவுக்கு அல்வா கொடுத்து விட்ட தாக சொல்கிறார்கள். கண்ணப்பன் செயலை பார்த்து ஜெயா கோபத்தின் உச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள் ..