புதன், 6 மே, 2009

சோனிய வருகை ரத்து! பேதியா? பீதியா?

ஒரு பக்கம் அஇஅதிமுக கூட்டணியை ஆதரித்து அந்தக் கூட்டணித் தலைவர்கள் தமிழகத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் தங்கள் பிரசாரத்தை புயல் வேகத்தில் மேற்கொண்டிருக்கும் நிலையில் திமுகவிற்கு ஆதரவு திரட்டவோ சூறாவளி பிரச்சாரம் செய்யவோ யாருமில்லாத நிலையில் கட்சி அலுவலகங்கள் தூங்கிக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை மற்றும் புதுவையில் இன்று மாலை பிரசாரம் செய்வதாக இருந்தார்.இதற்காக புதுவை உப்பளம் விளையாட்டு மைதானத்திலும், சென்னையில் தீவுத்திடலிலும் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. விமான நிலையத்திலும் பொதுக்கூட்ட மேடையிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். 

தீவுத்திடலைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் இன்று காலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.சோனியா பாதுகாப்புக்கு டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் சென்னையில் முகாமிட்டு இருந்தனர். 

இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர். இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தை ரத்து செய்துவிட்டார். 

இதுதொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி  அளித்த   காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத்.., 

சென்னையில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று இரவு சென்னை வந்தேன். தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதியை ஆஸ்பத்திரியில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். 

அப்போது டாக்டர்கள் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்றும் தெரிவித்தனர்.சென்னையில் முதல் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியாகாந்தி, கருணாநிதி ஆகிய இருதலைவர்களும் சேர்ந்து பிரசாரம் செய்வதாக இருந்தது.

உடல்நிலை காரணமாக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இன்று நடக்க இருந்த பிரசார பொதுக்கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார். (பின்னர்னா எலக்சனுக்கு பின்னரா?) 

 தேர்தலுக்குப்பின் இடது சாரிகள் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறாரே அது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை பாதிக்காதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், பாராளு மன்ற தேர்தலை  பொறுத்தவரை அதிக இடங்களைப்பிடிக்கும் கட்சி தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியைத்தான் மற்ற கட்சிகள் ஆதரிக்கும். தேசிய ஜன நாயக கூட்டணியை அல்ல. தமிழகத்தில் 39 தொகுதியிலும், புதுவையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார். (உங்களோட ஒரே காமெடிதான் போங்க) 

பி.கு:அன்னை சோனியா சென்னைக்கு வந்து கலைஞரை சந்திக்காத காரணத்தால் மேலே உள்ள பழைய படத்தைப் பார்த்து, அவர் கலைஞரை சந்தித்தாகவும் பிரச்சாரம் செய்ததாகவும் நினைத்துக் கொண்டு அவங்களுக்கு ஓட்டுப்போடுங்க அய்யா..,,,சாமி..,

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Ellam Naadagam

நவீன் சொன்னது…

தமிழனை தொட்டவன் செத்தான்

நெல்லைத்தமிழ் சொன்னது…

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதியை ஆஸ்பத்திரியில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். \\\\

சோனியாஜீ ஆஸ்பத்திரிக்கு வருவாங்களா..

ஈழ தமிழன் சொன்னது…

நன்றி தமிழக சகோதரர்களே,
புலிகளின் ஆயுத போராட்டம் மறைந்தாலும் எமக்கு ஈழம் நிச்சயம் கிடைக்கும் உன்ன்களின் பேராதரவுடன்.

ஈழ தமிழன்.

மணியன் சொன்னது…

கழுதை+ தூள் :)

ஈழ தமிழன் சொன்னது…

திருத்தம்...

நன்றி தமிழக சகோதரர்களே,

புலிகளின் ஆயுத போராட்டம் மறைந்தாலும் எமக்கு ஈழம் நிச்சயம் கிடைக்கும் உங்களின் பேராதரவுடன்.

ஈழ தமிழன்.

தண்டோரா சொன்னது…

பின்னிட்டிங்க கபாலி..டாஸ்மாக்ல சந்திப்போமா?

சங்கொலி சொன்னது…

http://www.mdmkonline.com/news/latest/sonia-meeting-cancelled-in-chennai.html

கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

சோனியா :
கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

மக்களை நாம் சேர்ந்தே சந்திப்போம் ! நான் மட்டும் மக்களை சந்தித்து செருப்படிவாங்கவேண்டும் நீங்க ஆஸ்பத்திரியில் எ சி ரூமில் அதை டி வி ல பாக்கணுமா?

எந்த ஊரு ஞாயம் இது ?

-----
செய்தி இங்கே:


சென்னை : சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்.., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் , தி.மு.க., அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்துள்ளனர்.

-தோழர்
www.mdmkonline.com

பெயரில்லா சொன்னது…

கொஞ்சம் பொறுமையாக இரு கழுதை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமே உணர்த்தும் பாடம் என்ன வென்று தெரியும்

பெயரில்லா சொன்னது…

நாளைய செய்தி.
திடீரென்று சோனியா நேற்றே வந்து பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுப் போய் விட்டார். கலைஞரும் உடன் இருந்தார். விஷயம் தெரியாததால், கூட்டத்தில் யாருமே (சாட்சிக்கு) இல்லை.

Senthilkumar சொன்னது…

அன்னை சோனியா? யாருக்கு அன்னை? ரொம்ப அவமானம். இனிமேல் அன்னை என்ற புனித வார்த்தையை கேவலப்படுத்த வேண்டாம்.

90 வயசு காங்கிரஸ்காரனும் அன்னை என்று சொல்லுவான்.

பெயரில்லா சொன்னது…

This Thinnai post in 1999 still stands true. Jimmy Gandhi - hilarious - have a look at this post

http://www.thinnai.com/?module=displaystory&story_id=79912032&format=html

பெயரில்லா சொன்னது…

கருனாநிதிக்கு புடுங்கிகிட்டு போகுதாம் உண்மையா?