செவ்வாய், 26 மே, 2009

நிதின் குமாரி கற்பழித்துக் கொலையா?

சென்னை JJ நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்து வந்தவர் நிதின் குமாரி. விமான பணிப்பெண்ணான இவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிதின் குமாரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. நிதின்குமாரியின் சொந்த ஊர் பீகார். இவரது தந்தை விஜயபிரசாத், தாய் உஷா, தங்கை நிஸ்தா மற்றும் உறவினர்கள் பீகாரில் இருந்து சென்னை வந்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் நிதின் குமாரியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நிதின்குமாரியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால் பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.

நிதின்குமாரிக்கு மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.அது மட்டுமின்றி பீகாரை சேர்ந்த ராஜாத்சிங் என்ற தொழில் அதிபரை காதலித்து வந்துள்ளார். அதே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வசதி படைத்த பணக்காரர்கள் சிலருடனும் நிதின் குமாரிக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.எனவே இவர்களில் யாராவது நிதின்குமாரியை சந்திப்பதற்காக வந்திருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

நிதின்குமாரியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து ஏராளமான எண்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் வரை நிதின்குமாரி யார்- யாரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இவரிடம் யாரெல்லாம் பேசியுள்ளனர் என்பது பற்றிய விவரங்களை திரட்டிய போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதின்குமாரிக்கு பெங்களூரிலும் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமின்றி விடுமுறை நாட்களில் இவர் தன் ஆண் நண்பர்களுடன் டிஸ்கொத்தே பார் என உல்லாசமாகக் கழித்திருக்கிறார்.அவர்களில் யாருடனாவது ஏற்பட்ட பழக்கத்தில் ஏதேனும் தவறு நடக்க முயற்சித்து அந்த முயற்சியில் நிதின்குமாரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா ? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நிதின்குமாரியின் பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

நிதின்குமாரியின் உடல் உறுப்புகளான சிறுகுடல், இறைப்பை போன்றவை சென்னையிலேயே ரசாயன பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் வந்த பின்னர்தான் நிதின் குமாரி எப்படி கொலை செய்யப்பட்டார் என்கிற விவரம் தெரியவரும்.விமாணப் பணிப்பெண்கள் இதுபோல

உல்லாசத்தில் ஈடுபடுவதும்,மது அருந்துவதும், ஆண் நண்பர்களோடு பழக்கம் வைத்துக் கொள்வதும் அவ்ர்களுக்கு சாதாரண விசயம் என்றும் அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதாகவும், கொலையாளியை மிகவிரைவில் பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமான‌ப் பணிப்பெண் கொலையான சம்பவத்தால் மற்றய விமானப் பணிப்பெண்கள் எல்லாம் தங்களின் அப்பாயின்மெண்டுகளை கொஞ்ச நாளைக்கு ஒத்திவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

itellam poyi sera vendiaythu than, feel panna neraiya visayam eruku, ethellam ponnunu feel panna avasaiyam ella, ethumathiri ullathallem poyi sentha sari

கலையரசன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நெல்லைத்தமிழ் சொன்னது…

நெல்லைத்தமிழ் திரட்டிக்கு நன்றி தெரிவித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// நெல்லைத்தமிழ் கூறியது...
நெல்லைத்தமிழ் திரட்டிக்கு நன்றி தெரிவித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.//

நன்றிக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

Dont character assassinate the dead person.