வியாழன், 7 மே, 2009

சமூகசேகவர் கன்னட பிரசாத் மீண்டும் கைது

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை மட்டுமின்றி தன் குடும்பத்தையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்த  கன்னடபிரசாத்தை காவல்துறை மீண்டும் கைது செய்திருக்கிறது. கோடம்பாக்கத்தையே குத்தகைக்கு எடுத்து குஜால் பிஸினஸ் செய்துகொண்டிருந்த பிரசாத்தின் மெனுகார்டில் இல்லாத நடிகைகளே இல்லை. அதுபோல அவரது கஷ்டமர் லிஸ்டில் இல்லாத பெரும்புள்ளிகளே இல்லை.  காவல்துறை உயரதிகாரிகள்,முக்கிய அரசியல் பிரமுகர்கள் அவர்களின் புதல்வர்கள் என அனைவருமே சந்தாதாரர்கள் அதிலே சிலர் ஆயுள்மெம்பர்கள். 

தமிழ்நாடுகேரளாஆந்திராகர்நாடகா என அவரது சேவை விரிந்த குலோபல் நெட்வொர்க். நடிகைகள்,துணை நடிகைகள்டான்ஸ் கேர்ள்ஸ்  என படியும் பார்ட்டிகள் அனைவரையும் வைத்து மிகபிரம்மாண்டமாக தொழில் செய்து கொண்டிருந்தார். இந்தியாவில் முதன்முறையாக MLM (Multi Level Marketing) முறையை தொழிலில் அறிமுகப்படுத்தியது இவர்தான். அதாவது முதலில் ஒரு நடிகை உறுப்பினராகச் சேருவார்.பின்னர் அவரால் முடிந்த அளவிற்கு நடிகைகளைச் சேர்த்து விடுவார். அதனடிப்படையில் அவருக்கு கீழ் இணையும் நடிகைகளின் சம்பாத்தியத்திற்கு ஏற்ப மேற்கண்ட நடிகைக்கு மாதாமாதம் கமிஷன் செல்லும். 

சினிமாவில்  நடிக்கும் ஆசையோடு சென்னைக்கு வந்த கன்னட பிரசாத் கோடம்பாக்கத் தெருக்களில் அலைந்து திரிந்து கடைசியாக‌ அந்த மூன்றெழுத்து பிரம்மாண்ட நிறுவனத்தின் தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்புக்கேட்டார். அதற்கு அவர் உனக்கு  வாய்ப்புத் தருகிறேன்ஆனால் நீ எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். ப்ரியமான நடிகையை எனக்கு புக்பண்ணித் தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். நடிப்பதற்காக‌ மட்டுமல்லாமல் கடும் பசியால் எதையும் செய்யத் தயாராக இருந்த அவர் நேராக அந்த நடிகையை  அனுகினார். அவரும் சம்மதம் தெரிவித்து விட முதல் முயற்சியிலேயே வெற்றிகண்டார் பிரசாத். பின்னர் அதே நிறுவன இயக்குனர் அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் கொடிகட்டிப் பறந்த அந்த சகோதரிகளை எனக்கு நீ ஏற்பாடு செய்து தரவேண்டும் எனக் கேட்டார். ஏற்கனவே முதல்முயற்சியில் வெற்றியைடைந்த பிரசாத் இம்முறை மிகத்தைரியமாக‌ அந்த நடிகைகளை அனுகினார்.முதலில் மறுப்புத் தெரிவித்த அவர்கள் பிரசாத்தின் பிரமாதமான பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு படிந்துவிட்டனர். அதுவும் அக்கா நடிகை மட்டும் தான் முதலில் சம்மதித்தாராம். அவரே பேசி தனது தமக்கையை சம்மதிக்க வைத்தாராம். தன் முயற்சியில் வெற்றிகண்டார் பிரசாத்.

ஒரு குறிப்பிட்ட நாளில் சகோதரிகள் இருவரும் தயாரிப்பாளைரை சந்தித்து தங்கள் சேவையை போட்டிபோட்டுக் கொண்டு செய்து காதல்  பரிசுகளை அள்ளித்தெளித்தனர் .ரொம்ப நாள் காத்திருந்து சந்தர்ப் பம் கிடைக்காமல் இன்று இரண்டுமே அமைந்து விட்ட மகிழ்சியில் அந்த  நிறுவன அதிபர் ஒரு 1000 ரூபாயை எடுத்து பிரசாத்தின் கைகளில் தினித்தார். பத்து நாள் பட்டினி கெடந்தவனுக்கு பெரியமேடு பாய்கடை பிரியாணி கெடச்ச கதயா இந்தப் பணம் பிரசாத்தை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. நடிப்புத் தொழிலைவிட இது தான் பிரமாதமான அழியாத் தொழில் என முடிவு செய்த பிரசாத் இனிமேல் நடிப்பு சான்ஸ் தேடுவதை விட இந்த சான்ஸ் தேடுவது தான் சிறந்தது என முடிவு செய்தார்.அவரின் தேடல் மற்றும் முயற்சி காரணமாக அவர் டேட்டா பேஸில் இல்லாத ஆட்களே இல்லை என்ற நிலைக்கு உயர்ந்தார். 

ஒரு முறை அவரை காவல்துறை கைது செய்ய வந்த போது இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்துகொண்ட அவர் தன் வீட்டில் தூக்கில் தொங்குவது போல நடித்தாராம். அந்த நேரத்தில் அவர் வீட்டில் ஒரு முக்கிய கஷ்டமருடன் இருந்த அந்த கடல் ராசி பெயர் கொண்ட இரண்டெழுத்து  நடிகை போலீஸ் வந்த‌ தகவல் அறிந்து அறைகுறை ஆடையோடு வீட்டின் பின்பக்கமாக சுவர் வழியாக ஏறிக்குதித்து அங்கிருந்த ஒரு ஓனிக்ஸ் குப்பைத் தொட்டிக்குள் ஒழிந்து கொண்டாராம். அவர் தூக்கில் தொங்குவதைக் கண்ட காவல்துறை நமக்கேன் வம்பு என வந்தவழியாக சத்தமில்லாமல் திரும்பிவிட்டதாம். பின்னர் வெளியே வந்த அந்த நடிகை அவரை லெப்ட் ரைட் வாங்கினாராம். இனிமேல் ஸ்டார் ஓட்டல் பார்ட்டிகளுக்கு மட்டும் தான் கால்சீட் என கத்திவிட்டு சென்று விட்டாரம். அதைக்கண்டு தெளிவடைந்த பிரசாத் அதன்பிறகு ஸ்டார் ஓட்டல் அப்பாயிண்மென்டுகளை மட்டும் கவணிக்க ஆரம்பித்தார்.

நல்ல நிலையில் போய்க்கொண்டிருந்த தொழில்   யார்கண் பட்டதோ 2007-ம் ஆண்டு தமிழக காவல்துறை வழங்கிய‌  சிறந்த கலை'மாமா'மணி விருதுக்கு கன்னட பிரசாத்  திடீரெனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் கன்னட பிரசாத், அவரது காதலி குஷூம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னட பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார். குஷூம் ஜாமீனில் வெளியே வந்து எஸ்கேப்பாகி விட்டார். காவல்துறை விசாரணையில் அவர் அளித்த பல திடுக்கிடும் தகவல்களைக் கேட்டு  காவல்துறையினர் மயக்கமே போட்டு விட்டனர். காரணம் அவ்வளவு பேருமே முக்கியப் புள்ளிகள், விஜபி, விவிஐபிகள் . இந்த நிலையில் தங்கள் பெயர் வெளிவராமல் இருக்க மொட்டை போடுவதாகவும்,  திருப்பதிக்கு நடந்தே வருவதாகவும், அலகு குத்தி காவடி எடுப்பதாகவும் ப‌ல நடிகைகள் வேண்டிக்கொண்டனர். சில நடிகைகள் தங்கள்  பாலிடிக்ஸ் கஷ்டமர்களுக்கு போன் போட்டு தங்கள் பெயர் வெளியே வராமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். 

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டார் பிரசாத். சிறையில் ஏகப்பட்ட அனுபவங்களைப் பெற்ற பிரசாத் அங்கிருந்து கொண்டு அடுக்கடுக்காக புத்தகங்களை எழுதித் தள்ளினார். அதுமட்டுமில்லாது பல புதிய புதிய டிரிக்குகளை கற்றுக்கொண்டு   2008 ம் ஆண்டு வெளியே வந்தார். 

ஒரு செல்போனும் நிறைய முயற்சியுமே மூலதனமான இந்தத் தொழிலை மீண்டும் புதுப்பித்தார். அவரது பழைய கஷ்டமர் டேட்டாபேஸ்களைத் தொடர்புகொண்டார். புது வீடு,புது போன் போன்ற டீடெயில்களுடன் விசிட்டிங் கார்டுகளைப் போட்டு மீண்டும் தொழிலை  சூடுபறக்க நடத்தினார். மீண்டும் தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. சமீபத்தில் தான் அவரது மிகமுக்கியமான பார்ட்டி ஒருவருக்கு மிக நீண்ட நாள் கழித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 'மாமன்' சீர் எடுக்கத் தயாராகிய நிலையில் மீண்டும் 2009 ம் ஆண்டுக்கான சிறந்த கலைச்சேவை விருதுக்கும் அவரையே தேர்ந்தெடுத்தது காவல்துறை. 

அதனை முன்னிட்டு அவரை மீண்டும் அமுக்கிக்கொண்டு வந்துள்ளது காவல்துறை. நான் தெரியாமத் தான் கேக்குறேன் இவ்ளோ பெரிய புரோக்கர் மாமா ஒரு வருசம் என்ன பண்ணுனான்னு தெரியாம இப்ப போயி அவன புடிக்கிதே காவல்துறை. இது நாள் வரை அவனை கவணிக்கவே இல்லயா? ., “காதல் சடுகுடு படத்தில் கற்பழித்த குற்றத்திற்காக விவேக் மைனர்குஞ்சு அந்த ஊர் மைனரை சுட்டுவிடுவார். பஞ்சாயத்தில் அவரது அப்பா கேட்பார்

"டேய் என்னடா  செஞ்சே" 

"மைனர் குஞ்ச சுட்டுட்டேன்"  

"எங்கடா சுட்ட"   

“அதான் சொன்னனே" 

அது போல இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்காமல் கூட்டிக்கொண்டு போய் புழல் சிறையில் வைத்து கோழிக்கறிச் சோறு போட்டால் அதைத் தின்னுட்டு மறுபடியும் அந்த தொழிலைத் தான் இன்னும் தைரியமா செய்வார்கள். 

தண்டனைகள் கடுமையானாத் தான் குற்றங்கள் குறையும்

6 கருத்துகள்:

சித்து சொன்னது…

"தண்டனைகள் கடுமையானாத் தான் குற்றங்கள் குறையும்"

மிகச் சரியான கருத்து. இவன் ஒரு குழந்தைங்க அங்க மும்பைல உக்காந்து ஒருத்தன் சொல்றான் பாருங்க, இந்த குற்றச் சாட்டு எல்லாமே பொய் நான் நிரபராதின்னு. நம்ம நாட்ட காப்பாத்தவே முடியாது.

pappu சொன்னது…

உலகத்திலயே பழமையான தொழில் விவசாயமா, விபச்சாரமா ன்னு பட்டி மன்றம் வைக்க வேண்டிய காலத்தில ஐயகோ! மனிதருள் 'மாமா'ணிக்கம் பிரசாத் சிறை வைக்கப் பட்டாரே!

உருப்புடாதது_அணிமா சொன்னது…

//"சமூகசேகவர் கன்னட பிரசாத் மீண்டும் கைது"///


என்னது?? சமூக சேவகர கைது பன்னிட்டாங்களா??

போராட்டம்..போராட்டம்...

உருப்புடாதது_அணிமா சொன்னது…

///இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்காமல் கூட்டிக்கொண்டு போய் புழல் சிறையில் வைத்து கோழிக்கறிச் சோறு போட்டால் அதைத் தின்னுட்டு மறுபடியும் அந்த தொழிலைத் தான் இன்னும் தைரியமா செய்வார்கள். தண்டனைகள் கடுமையானாத் தான் குற்றங்கள் குறையும்////


அது எப்படிங்க?? அஜால் குஜாலா முழுசா எழுதிட்டு கடைசியில நாலு வரி இப்படி எழுதி சமூக சேவகர இப்படி சொல்லிட்டீங்களே...

இது நம்ம ஆளு சொன்னது…

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

prasath சொன்னது…

verry good person cannot be arrested how it happened
he only helps and get fess for that
the girls coming to him are like that
by
prasath.k93@gmail.com