சனி, 2 மே, 2009

கார்த்திக் மீது செங்கல் வீச்சு - விருதுநகரில் பரபரப்பு

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து மாட்டிக்கொண்ட கார்த்திக் தினம் தினம் யாரிடமாவது சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் அதிகபட்சம் கார்த்திக் வரும் சீனெல்லாம் ஓரளவுக்கு காமெடியாக இருக்கும். அது போல இப்போது அவர் அரசியல் பிரவேசமும் கூட மிகமிகக் காமெடியாக அமைந்துவிட்டது தான் சிறப்பு. பிஸ்வாஸ் அவர்கள் கார்த்திக்கை வாஷ் அவுட் ஆக்கிவிட்ட பிறகு கூட இருந்த ஜால்ராக்களின் பேச்சைக்கேட்டு நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒரு லட்டர் பேர்டினை ஓப்பன் செய்தார்

காசு இருந்தால் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விடலாம் என்று யாரோ கொடுத்த மொக்க ஐடியாவை வைத்துக்கொண்டு களமிறங்கிவிட்டார் கார்த்திக்.அரசியல் அரிச்சுவடியே தெரியாத கார்த்திக் ஒருமுறை தலைவர் பதவியின் வாழ்த்து கோச சுகம் கண்டு விட்டதால் தான் மீண்டும் தலைவர் ஆனால் தான் தாக்குப்பிடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து நேரே பிரிண்டிங் பிரஸூக்குச் சென்றதன் விளைவு தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்டர் பேர்டு கிடைத்தது

நகைச்சுவை நடிகர்களும், நகைச்சுவைக் காட்சிகளும் இருந்தால் தான் ஒரு படம் சுவாரஸியமாக இருக்கும். அதே போல அரசியலுக்கும் கார்த்திக் போன்றவர்கள் இருந்தால் தான் வில்லத்தனமான காட்சிகள், சண்டைக் காட்சிகள் நிறைந்து எரிச்சலைக் கிளப்பி போய்கொண்டிருக்கிற அரசியல் களம் களை கட்டும். அந்த வகையில் இன்று நடந்த நகைச்சுவைக் காட்சி தான் இந்த செய்தி

தமிழகத்தின் லட்டர்பேடுகள் ஒன்றினைந்து "தேசியம் காணத கூட்டணி" என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்கினர். அந்தக் கூட்டணியில் தமிழக பாஜகா பரிதாப நிலையில் அவர்களுடன் சேர்ந்து கலம்காண்கின்றது தான் பெரிய சோகம். இந்தக்கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் வரிப்புலி வைக்கோவுக்கு மிகச்சவாலாகப் போட்டியிடும் கார்த்திக் கடந்த சில நாட்களாக தன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாடளும் மக்கள் கட்சியில் ஒரே தலைவரும் ஒரே தொண்டருமான அவரை ஆதரித்து அவரே பிரச்சாரம் செய்வதற்காக விருதுநகர் தொகுதிக்கு இன்று காலை சென்றார்

திறந்த வேனில் நின்றபடி ஒவ்வொரு கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்துகொண்டு வந்தார். ஓரிடத்தில் வரும் போது எதிரே வந்த விவசாயியைப் பார்த்து தனக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டிருக்கிறார். இவர் பேசுவதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர் தன்னைத் திட்டிகிறாரோ என நினைத்த அந்த விவசாயி சட்டென்று அருகே கிடந்த செங்கல்லை எடுத்து கார்த்திக்கை குறிபார்த்து வீச, சட்டென்று விலகிக்கொண்ட கார்த்திக், "ஆஹா என்னடா இது இந்த ஊர்ல சின்ன விசயத்துக்கெல்லாம் கல்லைத் தூக்குறாய்ங்கே என்று நொந்தவாறு அவரிடம் இதக் கண்டு நா ஒன்னும் பீதியாகமாட்டேன், பேச்சி பேச்சாத்தான் இருக்கனும் என்று சொல்லியவாறே தன் வண்டியை நகர்த்தியிருக்கிறார்

இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்சியடைந்த நாமக வின் தற்காலிகத் தொண்டர்கள் அந்த நபரை பிடித்துக் கசக்கிப் பிழிந்து விட்டனர். பின் அவரை பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர் ஒரு அதிமுக தொண்டர் என தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட இன்னொரு தொகுதிக்கு ஆள்கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் கார்த்திக்குக்கு இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்தது  அவருக்கு பெரும் பதட்டத்தை அளித்துள்ளது. என்னை நிச்சயம் வெல்ல முடியாது என்று புரிந்து கொண்டவர்கள் ஆள் வைத்து என் மீது செங்கல்லை எறிகிறார்கள். யார் நினைத்தாலும் என் வெற்றியைத் தடுக்கமுடியாது என ஆவேசமாகப் பேசினார்.இதுக்கு மேல என்னால முடியல.,, கொஞ்சம் இருங்க அந்தப்பக்கமா போயி சிரிச்சிட்டு வாரேன்.

4 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

கடைசி வரிகளைப் பார்த்து நானும் அந்தப் பக்கமா போய் சிரிச்சிட்டு வாரேன்.

பெயரில்லா சொன்னது…

ஐயோ சிரிப்பு அடக்க முடியல ..
நிஜமான காமெடி .

அன்பரசு சொன்னது…

யாருல இந்தக் கோமாளி? சிப்பு சிப்பா வருது.. அய்யோ அய்யோ!

பெயரில்லா சொன்னது…

kaipulla vaiko mannai kavvuwan......