செவ்வாய், 5 மே, 2009

அந்த நாள் இதே மே மாதத்தை மறக்கமுடியமா?

மறக்கமுடியுமா? 1991 மே 21 ம் திகதி திருப்பெரும்புதூர் அப்படியொரு சம்பவம் நடக்கப்போகிறது எனத் தெரியாமல களை கட்டியிருந்தது. மேடையலங்காரம் முதல் நடைபாதைப் பூக்கள் வரை சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி தன் கடைசி நாள் அது தான் எனத்தெரியாமல் தனது அக்மார்க் புன்னகையை சிந்தியபடி வந்துகொண்டிருந்தார். தன் கடைசி நாள் அதுதான் எனத்தெரிந்தும் சதிகாரப் பெண் ஒருத்தி ராஜீவ் காந்திக்காக காந்திருந்தாள் பாதையிலே. அருகே வந்தார் ராஜீவ்.

குட்டிப்பெண்ணொருத்தி தன் எழுதிய கடைசிக்கவிதையை ராஜீவிற்குப் படித்துக் காட்டி இறுதிப் பாராட்டைப் பெற்றுக்கொண்டாள். சதிகாரி கையில் சந்தன மாலை.அது தான் தன் இறுதி மாலை எனத்தெரியாமல் அதியும் ஏற்றுக்கொண்டார் ராஜீவ். அப்போது தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.அந்த இடமே அதிர்ந்த வேட்டுச்சத்தம்.., எங்கும் மரணஓலம் ஒரே புகை மண்டலம். பூக்கள் சிரித்த இடங்களில் இரத்தமும் சதையுமாக சகதியாக காட்சியளித்தது. எங்கே ராஜீவ்?..எங்கே ராஜீவ்?.. எனத் தேடியதில் சிதைந்தகாலோடு கிடந்த ஷூ.,,,ஆம் ராஜீவ் அணிந்திருந்த அதே ஷூ. 

முன்னர் பிரதமராக இருந்த ராஜீவ் இலங்கைக்கு அமைதிப்படை என்ற பெயரிலே அனுப்பிய இந்திய ரானுவத்தினர் செய்த அராஜகங்கள் குறித்துக் கொதித்துப் போயிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அதற்கு காரணம் ஒட்டுமொத்தமாக ராஜீவ் தான் என்று முடிவு செய்து அவரைத் தமிழக மண்ணிலே சிதைத்து உலக அரங்கில் தமிழகத்தைத் தலைகுணிய வைத்தார்கள். காலங்கள் உருண்டோடின. சோனியா காங்கிரஸின் தலைவரானார். தனது பழைய நினைவுகளை மறந்ததாகவும் மன்னித்துவிட்டதாகவும் சொல்லியிருந்த சோனியா இன்று இலங்கை நடத்தும் ஒரு பயங்கர இனப்போருக்கு என்னென்ன உதவிகள் செய்கிறார் என்பதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சே ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார். 

ஒரு இன அழிப்பு போரைக்கண்டு மனம்புழுங்கிக் கொண்டிருந்த தமிழக மக்கள் அந்தப் போரை நடத்துவதே இந்தியா தான் என்று ஆதாரங்களோடு பிரச்சாரம் செய்யும் செல்வி ஜெயலலிதா பக்கம் தங்கள் முகத்தைத் திருப்ப ஆரம்பித்ததால் தேர்தல் ஜூரம் கண்டு கலைஞருக்கு காய்ச்சலே வந்து விட்டது. 

திமுக காங் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என ஆருடம் கணிக்கப் பட்டுவிட்ட நிலையில் தனது கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வதற்காக‌  சோனியா காந்தி  நாளை மதியம் 2 மணிக்கு சென்னை வருகிறார்.  முதலில் புதுச்சேரி சென்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். அதன் பிறகு மீண்டும் 6 மணிக்கு சென்னை வந்து தீவுத்திடலில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தீவுத்திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பிரச்சினை காரணமாக விடுதலைப்புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து வரலாம் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தவிர பழ.நெடுமாறன் தலைமையிலான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் பாரதிராசா தலமையிலான சினிமா போர்ப்படையினர் சார்பிலும்  சோனியாவுக்கு எதிராக போராட்டம் நடக்கலாம் என்றும் உளவுத்துறை  கருதுகிறது. 

இதன் காரணமாக சோனியாவுக்கு 5 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. விமான நிலையத்தில் இருந்து தீவுத் திடலுக்கு வழக்கமாக சோனியா காரில் தான் வருவார். ஆனால் இந்த முறை பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில்  வந்திறங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 

தீவுத் திடல் அருகே நேப்பியர் பாலம் பக்கத்தில் உள்ள அடையார் ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர்  தளத்தில் சோனியா வந்திறங்கி அங்கிருந்து பொதுக் கூட்ட மேடைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து  வரப்படுகிறார். இதற்காக குண்டு துளைக்காத கார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந் துள்ள சிறப்பு கமாண்டோ படையினர் வழி நெடுக நிறுத்தப்படுகிறார்கள்.

கடல் வழியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக கடலோர காவல் படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. நம் மண்ணில் மீண்டும் எந்தவித அசம்பாவிதமும் நடவாமல் திருமதி சோனியாகாந்தி பாதுகாப்பாய் திரும்பிச் செல்ல நாமும் பிராத்திப்போம். 

–C.I.D சிங்காரம்

அடுத்து வருவது: குலுங்கக் குலுங்க சிரிக்கவைக்கும் கலைஞரின் உண்ணாவிரத நகைச்சுவைகள் 2ம் பாகம். சிரிக்கத் தவறாதீர்கள்

6 கருத்துகள்:

Thankabalu சொன்னது…

'சனியாள்' சோனியா

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Karthikeyan G சொன்னது…

//அந்த நாள் இதே மே மாதத்தை மறக்கமுடியமா? //

ஈஸியா மறக்கலாம்..

அப்பாவி சொன்னது…

நிச்சயம் மறக்க முடியாது. தனது ஊழலை மறைக்க அப்பாவிகளை கொன்று குவித்த ஒரு ரத்த காட்டேரிக்கு மரணதண்டனை குடுக்கப்பட்ட நாள்.
ஆனால் அதில் இறந்த அப்பாவிப் பொதுமக்கள் பாவம்.

சுந்தர் சொன்னது…

அதான் சோனியா , வரலையா