ஞாயிறு, 10 மே, 2009

சோனியா வருவது வீணய்யா!

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சோனியாவும், முதல்- அமைச்சர் கருணாநிதியும் இன்று மாலை ஒரே மேடையில் பேசுகிறார்கள்

தீவுத்திடலில் குண்டு துளைக்காத மேடை மற்றும் பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக எலெக்ட்ரானிக் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.தீவுத்திடலை சுற்றிலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து தீவுத்திடல் வரையிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் படகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் சென்னை வந்துள்ளனர். இவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் தீவுத்திடல் பகுதியை சுற்றிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவுத்திடல் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.சென்னை பிரசாரத்தை முடித்து விட்டு இன்று இரவே சோனியா டெல்லி புறப்பட்டு செல்கிறார்

சோனியாவை வரவேற்க திரளவேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

சோனியா சென்னை தீவுத்திடலில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு 10-ந்தேதி மாலை 3.00 மணிக்கு வருகிறார். அவரது வருகை தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பு முனையை உருவாக்கும் என்பது நிச்சயம்.  (நிச்சயமா! தமிழக மக்களுக்கு காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற  ஒரு விழிப்புணர்சியை ஏற்படுத்துவார்கள்

இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருந்து நாள்தோறும் உழைத்து வரும் சோனியாகாந்தியை வரவேற்கும் நமது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் எழுச்சிமிகு நிகழ்ச்சி புதிய ஏற்பாடாக வரலாற்றில் பதியட்டும். (பாதுகாப்பு அரண் தமிழர்களுக்கா?) 

சோனியாகாந்தியும் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் அனைத்து மக்களின் நலனுக்கும் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் நிறை வேற்றி வரும் தமிழினத் தலைவர் முதல்- அமைச்சர் கருணாநிதியும் சிறப்புரையாற்றவிருக்கும் அக்கூட்டம் சரித்திரத்தில் முத்திரை பதிக்கட்டும். ( நிச்சயம் முத்திரை பதிக்கும். இது போன்ற ஒரு தோல்வியை சரித்திரமே கண்டிருக்காது என்ற நிலையில்) 

எறும்பென செயலாற்றும் இணையற்றமறவர்களின் அற்புத சங்கமமாய் அமைந் துள்ள காங்கிரஸ், தி.மு.., விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன், முஸ்லீம் லீக், திராவிடர் கழகம், எம்.ஜி.ஆர். கழகம், புரட்சி பாரதம் மற்றும் தோழமைக் கட்சிகளின் துடிப்பான சகோதர, சகோதரிகள் பெருந்திரளாக அணிவகுத்து அவரவர் கட்சிகளின் கொடிகளை ஏந்தி அலை அலையாய்10-ந்தேதி மாலை 3 மணிக்கு தீவுத்திடலில் குவிய வேண்டும். (கருப்புக் கொடி ஏந்தியவர்களும் குவிய வாய்ப்புள்ளது தலைவரே!) 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாக்கலாம் மக்கள் என்ன முடிவெடுக்கப் போறாங்கன்னு.

2 கருத்துகள்:

ttpian சொன்னது…

அவமானம்!
நான் ஒரு கையாலாகாத, தமிழன்!
இருப்பதைவிட இறந்து போகலாம்!

கிரி சொன்னது…

//பாக்கலாம் மக்கள் என்ன முடிவெடுக்கப் போறாங்கன்னு//

அதை நினைத்தால் தான் கொஞ்சம் கலவரமா இருக்கு ..

கலைஞர் செய்திகளையும் சன் செய்திகளையும் பார்க்கும் மக்கள் என்னவென்று முடிவு செய்வார்களோ!