புதன், 13 மே, 2009

கார்த்திக் வேட்பாளர் ஜகா வாங்கினார்

தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த கார்த்திக் கட்சியின் வெற்றியை அவரது தொண்டரே கெடுத்துவிட்டார். வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக விரைவில் வெற்றிக்கணியை எட்ட இருந்த கார்த்திக்கின் நாதியற்ற மக்கள் கட்சி சாரி நாடாளும் மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி பார்வதி கார்த்திக்கை எதிர்த்து களம் இறங்கியுள்ளார் அல்லது இறக்கப்பட்டுள்ளார். கார்த்திக் ஒரு ஏமாற்று பேர் வழி. அவர் தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்கவே கட்சி நடத்துகிறார். அதனால் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் தேனி தொகுதி போட்டியிலிருந்தும் விலகி கொள்கிறேன் எனவும் தேனி தொகுதியில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பார்வதி தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் என்னிடம் ரூ. 5 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக அவர் ஒரு கொடி, ஒரு பேட்ச் ஏன் ஒரு டப்பா கூடத்தரவில்லை அது மட்டுமில்லாம‌  தேர்தல் நிதியாக வந்த ரூ. 1 கோடியையும் அவரே வைத்துக் கொண்டார். (தேர்தல் நிதி 1 கோடி சேர்ந்ததை கின்னஸுக்கு அனுப்பலாம்)

தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்கவே அவர் கட்சி நடத்துகிறார். இதனால், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் நான் வகிக்கும் மாநில மகளிர் அணி தலைவர் பதவியையும், எனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். மேலும் தேர்தலில் இருந்து விலகி கொள்கிறேன் அது மட்டுமின்றி இன்றையத் தேர்தலில் கார்த்திக் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார். யாரு எவ்ளோ மீட்டரு போட்டாங்களோ?