செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரனின் உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை ரானுவத்தால் சுட்டுக்கொல்லப்பட பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இலங்கைத் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்கு முன் அடையாளம் காணப்பட்ட பிரபாகரனின் சடலக் காட்சிகளை இலங்கை ஊடகங்கள் ஒளிபரப்பியது. அதுமட்டுமின்றி அது பிரபாகரனின் உடல்தான் என டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவரது அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட்டது.இந்தச் சம்பவத்தை அறிவித்த பொன்சேகா உலகத்தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டியுமே சிலர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தகவல் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தி காட்டுத்தீ போல அனைத்துபகுதிகளுக்கும் பரவியது. இந்த செய்தியைக் கேள்வியுற்று இலங்கை முழுவதும் மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அரசக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இந்த நிகழ்வுக்கு பிறகு  போர் வெற்றி தொடர்பாக நாட்டு மக்களுக்கு தகவல் தெரிவிக்க இலங்கை பாராளுமன்ற சிறப்புக்கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டு உரையாற்றினார். 

அவர் கூறியதாவது,

இது நமது நாடு. நாம் பிறந்த நாடு. நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எல்லாரும் மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். நமக்குள் இனியும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது. நாம் எல்லாரும் சுதந்திரமாக வாழ்வோம்.கடந்த 40 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் ஏராளமான குற்றத்தில் ஈடுபட்டனர். ஏராளமானவர்களை படுகொலை செய்தனர். சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்களை அதிக அளவில் கொலை செய்தனர்.

 அவர்களுடன் கடந்த 40 ஆண்டுகளாக சிங்கள ராணுவம் போரிட்டு வந்தது. இந்த போர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டபோர்.விடுதலைப்புலிகளிடம் இருந்து ஒன்றும் அறியாத அப்பாவி தமிழ் மக்களை காப் பாற்ற வேண்டிய கடமை யும் பொறுப்பும் அரசுக்கு இருந்தது. அத்தகைய அப்பாவி தமிழ் மக்களை மீட்டு காக்கும் கடமையின் போது சிங்கள படை வீரர் கள் பலர் உயிர் நீத்தனர். இப்படி தியாகம் செய்து விடுதலைப்புலிகள் தோற் கடிக்கப்பட்டுள்ளனர். 

உலகில் மிக மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை அழித்துள்ளோம். விடு தலைப்புலிகளுக்கு எதிரான இந்த வெற்றி ஒட்டு மொத்த தேசத்தின் வெற்றி. இந்த நாட்டு மக்களின் வெற்றி. இந்த வெற்றி மூலம் நாம் சாதித்துள்ளோம்.இலங்கையில் ஈழத் தமிழர்கள் உள்பட எல்லாருக்கும் முழு பாதுகாப்பு கொடுக்கப்படும். இது எங்கள் அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும். இலங்கையில் உள்ள எல்லாருக்கும் சம உரிமை கொடுக்க விரும்புகிறேன். 

எங்கள் நாட்டு மக்களை எப்படி நடத்த வேண்டும் என்று வேறு எந்த வெளிநாடும் எங்களுக்கு சொல்லக்கூடாது. தமிழ் மக்களை நாங்கள் பாதுகாப்போம். அது எங்கள் கடமை.இந்த தேசத்தில் எல்லாரும் சம உரிமை பெற்று வாழ வேண்டும். எல்லாரும் பயமின்றி வாழ வேண்டும். இது எனது எதிர்பார்ப்பும் கூட. 

நாம் அனைவரும் இனி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். சுதந்திரமான, ஐக்கிய இலங்கையை நாம் ஏற்படுத்த வேண்டும்.ராஜீவ்காந்தி, பிரேமதாசா, லட்சுமண் கதிர்காமர் ஆகியோரை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். அவர்களை இன்று நாம் முழுமையாக வென்றுள்ளோம்.விடுதலைப்புலிகளின் தீவிரவாத செயல்களில் இருந்து நாங்கள் இந்த நாட்டை முழுமையாக விடுவித்துள்ளோம். இப்போது இந்த நாடு முழுவதுமாக நமது அரசாட்சியை கொண்டு வந்துள்ளோம். 

இனி நாம் ஒன்றுபட்ட ஒரு இலங்கையை உருவாக்குவோம். இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் செய்யப்படும்.இது சவாலான பணி. இதையும் சிறப்பாக செய்து முடிப்போம் என்று உறுதி கூறுகிறேன்.விடுதலைப்புலிகளை இந்த நாட்டில் இருந்து அகற்றிய முப்படை அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு பேசிய மகிந்த ராஜபக்சே முதலில் தமிழில் தன் பேச்சினைத் துவங்கி பிறகு முழுக்க முழுக்க சிங்களத்தில் உரையாற்றினார்.

ஆனால் இவர் சொன்னதில் எந்த அளவிற்கு உண்மையாக நடந்துகொள்வார், தமிழ் மக்களுக்கும் சமஉரிமை கிடைக்குமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரபாகரனின் சடலம் குறித்த வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக்கவும்

5 கருத்துகள்:

ravindar சொன்னது…

நம் சகோதரன் பிரபாகரன் வீர மரணம் அடைந்து விட்டார். இது நமக்கு நம் தமிழ் இனத்துக்கு சோகத்தையும்,வேதனை,துயரம்,அதிர்ச்சி அனைத்தையும் ஏர்படுத்தி உள்ளது.

நம் சகோதரன் பிரபாகரன் நம் தமிழ் இனத்துக்காக தன் மகனயும் இழந்தார் தற்போது அவரும் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

நம் தமிழ் இனம் இருக்கும் வரை நாம் என்றும் அவரை வணங்க வேண்டும்.

நம் தமிழ் இனத்துக்காக தன் உயிரை விட்ட அவறையும் அவருடன் உயிரை இழந்த அணைத்து போராளிகளுக்காக நாம் கடவுள் இடம் பிராத்தனை செய்வோம் அவர்கள் அத்மா சாந்தி அடையட்டும்.

பெயரில்லா சொன்னது…

//அரசக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்//
இது உண்மையில்லை. உண்மை என்னவெனில் தங்களை பிடித்த தரித்திரம் தொலைந்தது என்று மகிழ்கிறார்கள். பிரபாகரன் கொல்லபட்டதை நம்பாதது மாதிரி தான் உண்மைகளை தமிழ்மணத்தில் பலர் நம்புவதில்லை.பொய்கள் தான் உலா வருகின்றன.

பெயரில்லா சொன்னது…

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே
ellam valla eraivanai vaendikondirukkum pala kodi Thamilargalil oruvan

( Nile Raja )

பெயரில்லா சொன்னது…

பெயரில்லா சொன்னது…

ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவிலிருந்து ராஜீவ் காந்தி ஆத்மா வரை இனி சாந்தியடையும்

நெல்லைத்தமிழ் சொன்னது…

தாங்கள் நெல்லைத்தமிழின் இவ்வார நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். நன்றி.