சனி, 23 மே, 2009

பொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்

பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் கூறி வரும் நிலையில் இன்று காலை பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக வந்தத் தகவல் மேலு ம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்திக்கடல்பகுதியில் பிரபாகரனுடன் சேர்த்து பொட்டுஅம்மான் சூசை ஆகிய முக்கியத் தளபதிகளையும் கொன்றுவிட்டதாக பரப்புரை செய்த சிங்கள ரானுவம் பிரபாவின் உடலை மட்டும் தான்  அடையாளம் காட்டியது. ஆனால் அது பிரபாவின் உடல்தானா என்பதில் பலவிதமான ச‌ந்தேகங்கள் நிலவிவருகின்றன. 

பிரபாவைப்போல ஒருவரின் உடலைக்காட்டிய சிங்கள ராணுவத்தால் பொட்டு அம்மான் மற்றும் சூசை ஆகியோரின் உடலைக்காட்ட முடியவில்லை. ஒருவேளை அதுமாதிரி டூப்ளிகேட் கெடக்கலயோ என்னவோ. இந்த நிலையில் இன்றுவெளியான பரபரப்புத் தகவ‌லில் பொட்டுஅம்மன் உயிரோடு இருப்பதாகவும் அவர் இலங்கையின் கிழக்கு மாகானத்தில் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சிலரோடு இருப்பதாகவும் அவர் மீண்டும் புலிகள் இயக்கத்தை ஒருங்கிணைக்க ஆரம்பித்து விட்டார்  என்றும் கூறப்படுகிறது. 

சிங்களர்களின் தற்போதைய விருந்தாளி கருணா அளித்த இந்தத் தகவலில் சிங்கள ராணுவம் பொட்டுஅம்மனைக் கோட்டைவிட்டு விட்டது எனக் கூறியிருக்கிறார். ஏற்கனவே பிரபாவும் உயிரோடு இருப்பதாக புலிகள்  இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ள கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தப் பொட்டு அம்மான் விவகாரம் மேலும் பீதியை கிளப்பியுள்ளது.   

இலங்கை   உளவுத்துறை ராஜபக்சே அரசுக்கு அளித்த ரகசியத் தகவலில் பிரபாகரன் தப்பிவிட்டார் என்றும் அவர் பாதுகாப்பாக மலேசியா அல்லது தாய்லாந்து நாட்டில் இருக்கலாம் என்றும் அது ரகசியத் தகவலைப் பகர்ந்துள்ளது. அந்தத் தகவலை உறுதிசெய்யுமாறும் தற்போது யுத்தசூனியப் பிரதேசங்களில் இருந்து அரசக் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள  தமிழர்களை முழுக்க முழுக்க கண்காணிக்குமாறும் உளவுத்துறைக்கு ராஜபக்சே உத்தரவிட்டதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

எனவே நேற்று முந்தினம்  நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அறிவித்த அந்த செயல்திட்டங்கள் வெறும் காகித மாலையாக ஆகிவிடுமோ என கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி சிங்களவர்கள் மகிழ்சிக்கழிப்பில் இருக்கும் இந்த நேரத்தில் தன் ஆட்சியைப் பாதுக்காத்துக் கொள்ள அல்லது ரினீவல் செய்துகொள்ள விரைவில் தேர்தல் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. 

நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்த பொன்சேகா பிரபாகரனின் உடலை எரித்துவிட்டதாகவும்,அந்தச் சாம்பலை இந்துமாக் கடலில் வீசி  எறிந்துவிட்டதாவும் கூறியிருக்கிறார். ஆனால் இன்று பொட்டுஅம்மான் உயிரோடு இருப்பதாக வந்துள்ள செய்தியால் குழம்பிப் போயுள்ள இலங்கை ராணுவமும் அரசும் ஒருவேளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலவும்செய்தியும் உண்மையாக இருக்குமோ என ஆராயத் தொடங்கியுள்ளார்கள்.

அதே நேரம் இந்தியா கோரியுள்ள பிரபாகரனின் மரண அறிக்கைச் சான்றிதழை வழங்குவதற்கும் தயக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது.   எது எப்படியோ இனியாவது அந்த மக்களின் நல‌ன்கள் காக்கப்படவேண்டும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த‌  எதிர்பார்ப்பு.

2 கருத்துகள்:

Kripa சொன்னது…

You are posting really great blogs... Keep it up...

We have just launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

பெயரில்லா சொன்னது…

http://news.yahoo.com/s/ap/20090524/ap_on_re_as/as_sri_lanka_immortal_rebel