புதன், 13 மே, 2009

என்ன செய்தார்கள் தமிழக மக்கள் ? C.I.D - சிங்காரம்

கிட்டத்தட்ட ஒரு மாதமாய் காப்புக்கட்டி கெடாவெட்டி குதூகலமாய் நடந்து கொண்டிருந்த தேர்தல் திருவிழாவின் கடைசி நாள் இன்றோடு முடிந்துவிட்டது. சைக்கிள் டயர்களின் தடம் மாட்டு வண்டிகளின் இரும்புசக்கரங்களின் தடங்கள் அன்றி வேறு தடங்களே அறிந்திராத குக்கிராம மக்கள் கூட டாட்டா சியாரா  என்றால் என்னசுமோ என்றால் என்ன என்று தெரிந்து கொண்டார்கள். இவ்வளவு குதூகலாமாய் போய்க்கொண்டிருந்த இந்தத் தேர்தல் திருவிழா இன்றோடு நிறைவடைந்ததால் பலருக்கு வருத்தம். குறிப்பாக பத்திரிக்கைத் துறை நண்பர்களுக்கும் என்போன்ற வலைப்பதிவர்களுக்கும் ரொம்பவே வருத்தம் காரணம்இந்த தேர்தல் திருவிழாவால் நல்ல நிலையில் ஓடிக்கொண்டிந்த வண்டிகள் இனிமேல் பாரம் தாங்காத மாடு போல அங்கங்கே படுத்துக் கொள்ளும்செய்திகளைத் தேடித்தேடி சேகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். மிகச்சிரமம். 

இந்த நேரத்தில் விஜய டி.ஆர் பற்றியோ கார்த்திக் பற்றியோ ஏன் நம்ம மன்சூர் அலிகான் பற்றியோ ஒன்னுக்குமே உதவாத டுபார்கூர் மேட்டர்களை எழுதினாலும் நம்ம வாசகர்கள் அந்த நேரத்தில் வாக்காளர்களாக மாறி ஓடி ஓடி படிப்பார்கள். அது மட்டுமின்றி இந்த நேரத்தில் அவர்கள் பாத்ரூம் போன செய்தி கூட மிகப்பிரபலமாக ஆகிவிடும். ஆனால் இனிமேல் அப்படியெல்லாம் நடக்காது. 

என்ன செய்திகளைக் கொடுத்தாலும் மக்கள் அந்தளவிற்கு கவணம் செலுத்த மாட்டார்கள். சாதரண நாட்களில் வெளிவரும் தலைவர் கலைஞரின் கடிதத்திற்கும் தேர்தல் காலங்களில் வெளிவரும் கடிதத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும். மற்ற நாட்களில் மை கொண்டு எழுதும் கலைஞர் தேர்தல் நாட்களில் கண்ணீரை மையாக மாற்றி எழுதுவார். அவர் எழுத்த படிச்சா கல் நெஞ்சக்காரனும் கண்ணீர் விட்டு கதறிவிடுவான். அந்தளவிற்கு எழுதுவார் எழுதுவார் எழுதிக்கொண்டே இருப்பார். எலக்சன் முடிஞ்ச பிறகு செலக்டிவ் அம்னீசியா வந்தமாதிரி மற்றதையெல்லாம் மறந்து விடுவார்.

நடந்து முடிந்த தேர்தலின் சாதக பாதகங்களை இப்போது அலசுவோம் :

1) இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை இந்த தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்காது என்று முதலில் உளவுத்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையிலேயே கலைஞர் மீண்டும் காங்கிரஸோடு கூட்டு வைத்தார். முன்பு அது தான் உண்மையாகவும் இருந்தது. ஆனால் போகப்போக காட்சிகள் மாற ஆரம்பித்தன. ஈழ மக்களுக்காக உணர்வாளர்கள் போராட்டங்கள் வெடிக்கவும் பல தீக்குளிப்பிற்குப் பிறகும் தமிழக மக்கள் ஓரளவிற்கு உணர ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி இந்த மாற்றத்தை தலைவர் கலைஞரும் உணர ஆரம்பித்தார். 

2) நீண்ட நாட்களாக இலங்கை பிரச்சினையை எதிர்த்து வந்த செல்வி ஜெயலலிதா அங்கு தேவையில்லாமல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உணர்ந்து தன் முடிவிலிருந்து மாறி ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தார். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழமே ஒரே தீர்வு எனவும் பகிரங்கமாக மேடைகளில் பேசியும்இந்தியாவின் கபில்சிபல் முதல் இலங்கையின் கோத்த‌பய ராஜ‌பக்சே வரையில் அனைவருக்கும் தக்க பதில் கொடுத்து வாயை அடைத்தார். இதன் காரணமாக ஜெயலலிதாவின் செல்வாக்கு மிக வேகமாக உயர ஆரம்பித்தது. உலகத் தமிழர்களின் அனைத்து அமைப்புகளிடமும் இருந்து நன்றிக் கடிதமும் பாராட்டுக் கடிதமும் குவிய ஆரம்பித்தது.

3)ஈழத்தமிழர் விடயத்தில் கலைஞரின் செல்வாக்கு வேகவேகமாக குறைய ஆரம்பித்தது. எந்த ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு எதிரியாகத் தோன்றினாரோ அவரது நடவடிக்கைகளைக் கண்டு மக்கள் பூரித்துப்போயினர். இதனால் தான் அவசர அவசரமாக கலைஞர் உண்ணாவிரதம் இருக்கப் போய் அதுவும் காமெடியாக முடிந்துவிட்டது.

4)மக்கள் முன்பு கொதித்துப் போய் பின்னர் மறந்து போயிருந்த பஸ்கட்டண உயர்வை திடீரென குறைத்தது திமுக அரசு. இதனால் பழைய விசயமெல்லாம் ஞாபகம் வந்த மக்கள் உடணடியாக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பலையை காட்ட ஆரம்பித்தனர். 

5) மிக பிரம்மாண்டமாக கூட்டணி அமைத்துவிட்ட அதிமுகவிற்கு எதிராக கலைஞரால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஏற்கனவே வெறுப்பிலிருக்கும் காங்கிரஸ்ஏதோ பரவாயில்லை திருமாஒன்னுக்குமே உதவாத லட்டர் பேடு முஸ்லீம் லீக் என அனைத்துமே சொங்கியும் சோடையும் தான். இந்த நிலையில் ஓரளவிற்கு முஸ்லீம்களின் வாக்குவங்கியை கையில் வைத்திருக்கும் மனித நேய மக்கள் கட்சியை தடாலடியாக கழற்றி விட்டதால் முஸ்லீம்கள் மத்தியிலும் கலைஞர் வெறுப்புக்குள்ளானார். 

6) கடைசியாக நேற்று இரவு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பற்றிய ஒரு வீடியோ நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஆனால் சென்னையையே தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கும் அவர்கள் கண் நேரத்தில் பறந்த உத்தரவு காரணமாக பல இடங்களில் மக்கள் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டது. இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்படி என்னதான் இலங்கைத்தமிழர்கள் மீது கலைஞருக்கு வெறுப்போ தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியால் கொஞ்ச நஞ்ச மக்களின் ஆதரவையும் கலைஞர் இழந்தார் என தான் சொல்ல வேண்டும். 

7) கள்ள ஓட்டுப் போடுவதையே குலத்தொழிலாகக் கொண்ட திமுகவினர் இன்று மத்திய சென்னையில் பல்க் ஓட்டுப் போடுவதற்காக குவிந்தனர். இதைத் தடுத்த மமக தொண்டர்களை மிகக் கொடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்தச் செய்தி உடணடியாக அனைத்து ஊர் தமுமுக கிளைகளுக்கும் தெரிவிக்கப் பட்டு திமுகவிற்கு வாக்களிக்க இருந்தவர்களும் அறவே வாக்களிக்காத நிலை உருவாகியது. 

ஆக தமிழமக்கள் இன்று என்ன செய்தார்கள் என்ற செய்தி இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அப்போது தெரியும் எல்லாருக்கும், தமிழக மக்கள் யாரை வெறுத்தார்கள் என்பது.

எந்தப் பிரச்சினையை கலைஞர் உதாசீனப் படுத்தினாரோ, எந்த இலங்கை பிரச்சினை தன் வெற்றியை பாதிக்காது என தூக்கி எறிந்தாரோ அந்த இலங்கை பிரச்சனை தான் இந்தத் தேர்தலில் மிக அதிகமாக எதிரொலித்தது. எப்போதுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சதி செய்யும் ஒரு கூட்டத்தின் ஓட்டு பற்றி யாருமே கவலை கொள்ளத் தேவையில்லை. அந்த ஓட்டு கூட கலைஞருக்கு கிடைக்காது. 

எப்படியாவது செல்வி ஜெயலலிதாவின் உறுதுணையோடு நிச்சயம் மத்தியிலே ஒரு ஆட்சியமைந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். அட்லீஸ்ட் இந்த ஆயுதம் வழங்கல், பயிற்சி கொடுத்தல், இலங்கைக்கு வட்டியில்லா கடனை வாரி வழங்கி அதாவது காயமடைந்தவர்களுக்கு மருந்து போடுகிறேன் என்று வெளியே சொல்லிக்கொண்டு அந்த மக்களின் குரல்வலையை கடித்து ருசி பார்ப்பவர்களும் அதற்கு ஆதரவாய் இருந்து கொண்டு நானே காப்பாளன் என்று கூறிக்கொள்பவர்களும் முழுமையாக நீக்கப்பட்டாலே போதும். ஆனால் கடைசிவரை ஈழம் கன‌வாகவே போய்விடக்கூடாது. 

இது தான் தருனம். இதை விட்டால் நீ மீண்டும் அடிமையே! 

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.......

10 கருத்துகள்:

seik mohamed சொன்னது…

keep it

வெண்காட்டான் சொன்னது…

nandri poruthirunthu paarpoom. makkal nalla saithi sollvarkal endu.

கிரி சொன்னது…

//ஒன்னுக்குமே உதவாத டுபார்கூர் மேட்டர்களை எழுதினாலும் நம்ம வாசகர்கள் அந்த நேரத்தில் வாக்காளர்களாக மாறி ஓடி ஓடி படிப்பார்கள்//

ஹா ஹா ஹா

//இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை இந்த தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்காது என்று முதலில் உளவுத்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையிலேயே கலைஞர் மீண்டும் காங்கிரஸோடு கூட்டு வைத்தார். முன்பு அது தான் உண்மையாகவும் //

இப்பவும் அது தான் உண்மை என்றே நினைக்கிறேன்

//எப்போதுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சதி செய்யும் ஒரு கூட்டத்தின் ஓட்டு பற்றி யாருமே கவலை கொள்ளத் தேவையில்லை. அந்த ஓட்டு கூட கலைஞருக்கு கிடைக்காது//

நான் அப்படி நினைக்கவில்லை

பெயரில்லா சொன்னது…

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// பார்சா குமார‌ன் //

ரொம்ப நன்றி சார். தொடந்து இணைந்திருங்கள்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//வெண்காட்டான் //

நிச்சயம் சொல்வார்கள். காத்திருப்போம் காலம் மாறும்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// கிரி //

//இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை இந்த தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்காது என்று முதலில் உளவுத்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையிலேயே கலைஞர் மீண்டும் காங்கிரஸோடு கூட்டு வைத்தார். முன்பு அது தான் உண்மையாகவும் //

இப்பவும் அது தான் உண்மை என்றே நினைக்கிறேன்

//எப்போதுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சதி செய்யும் ஒரு கூட்டத்தின் ஓட்டு பற்றி யாருமே கவலை கொள்ளத் தேவையில்லை. அந்த ஓட்டு கூட கலைஞருக்கு கிடைக்காது//

நான் அப்படி நினைக்கவில்லை

ஓக்கேண்ணே உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// கலையரசன் //

நன்றி தலைவரே! உங்க கடைக்கும் வந்திருக்கோம்ல‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//பெயரில்லா //

ரொம்ப நன்றி சார். தொடந்து இணைந்திருங்கள்

பெயரில்லா சொன்னது…

காசேதான் கடவுளடா , என மக்கள் நிருபித்து உள்ளனர்