இன்னிக்கி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இரண்டு அறிக்கைகள் விட்டுள்ளார்.இரண்டுமே வழக்கம் போல கலைஞரைக் காய்ச்சும் களையங்கள் தான்.
அந்த அறிக்கைகளில் "சென்னை சட்டக்கல்லூரி பிரச்சினை தீருவதற்கான எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும்,வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 40 ரூபாய் விற்கின்றது என்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவோ திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின்சார உற்பத்தியை பெருக்குவதில் இந்த திமுக அரசு தோல்வியையே தழுவியுள்ளது. மின்சார உற்பத்தியை பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு கட்டப்பஞ்சாயத்து பேசுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் அரசமைப்பு கடமைகளை கவனிப்பதற்கு நேரமே இல்லை என்றும் கூறியுள்ளார். "தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே இலவச டி.விக்கள் வழங்கப்படுவதாகவும்,கலைஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மதுரை தொகுதியில் நிற்க இருப்பதால் அங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களுக்கு தற்போதே தலைக்கு ரூ 5000 பணம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் எங்க ஊரு பக்கம் இன்னும் பணமோ,பொருளோ கொடுக்கப்படவில்லை என்பதையும் மதுரை மக்களுக்கு போலவே எங்க ஏரியா மக்களுக்கும் ரூ 5000,கலர்டிவி முடிந்தால் ஒரு டாடா ஸ்கை டிடிஎச் அல்லது பிக்டிவி டிடிஎச் வழங்க வேண்டும் என்பதையும் இந்த பதிவின் மூலமாக நான் தமிழக முதல்வர், தமிழினத் தலைவர் அய்யா கலைஞர் அவர்களை பணிவண்போடு வேண்டுகிறேன்.அதுமட்டுமின்றி யார் என்ன பொருட்கள்,காசுகள் கொடுத்தாலும் அதையும் வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் 27வது வட்ட டாஸ்மாக் கடையில் குடிப்பவர்கள் சங்கம் சார்பாக பணிவோடு வேண்டுகிறோம்.அய்யா.,
5 கருத்துகள்:
தம்பி கபாலி...
எலக்சன் முடியற வரை தினமும் டாஸ்மார்க்ல ஒரு குவாட்டர் இனாமா கொடுக்கச் சொல்லப்பு...
யாருக்கப்பு வேணும் டீவுயும், டாடா ஸ்கையும்..
டெபுடி பிரைம் மினிஸ்டர் பதவி
கொடுப்பதாக இருந்தால் மட்டுமே
தன் கட்சி கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளும் என்று
திண்டிவனம் ராமமூர்த்தி
அறிவித்திருக்காறாமே உண்மையா?
அண்ணே ராகவண்ணே! அப்படி குவாட்டர் கிடைச்சா உங்களுக்கு எப்படி அனுப்பிவைக்கிறது???
//டெபுடி பிரைம் மினிஸ்டர் பதவி
கொடுப்பதாக இருந்தால் மட்டுமே
தன் கட்சி கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளும் என்று
திண்டிவனம் ராமமூர்த்தி
அறிவித்திருக்காறாமே உண்மையா?//
பாவம் அவர் வாழ்க்கை ஆகிவிட்டது கூவம்.அண்ணே/தம்பி கடைக்குள்ள வர்ரவரைக்கும் தான் துண்ட போட்டு போத்திக்கினு வரனும், கடக்கி வந்தபிண்ணாடி எல்லாமே ஒன்னு தான்.அதுனால உங்க பேர்லயே எழுதுங்க
// டாஸ்மாக் கபாலி கூறியது...
அண்ணே ராகவண்ணே! அப்படி குவாட்டர் கிடைச்சா உங்களுக்கு எப்படி அனுப்பிவைக்கிறது??? //
தம்பி என்னா கேள்வி இது..
நீ யாரு என் தம்பி.. என் சரக்கெல்லாம் உனக்குத்தான்..
இங்க நான் காசு கொடுத்து வாங்கி குடுச்சுக்கிறேன்,
என் பேர சொல்லி நீயே அ(கு)டிச்சுடு..
கருத்துரையிடுக