மத்தியிலே 6 வருடம் ஆட்சி செய்த கட்சி.இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி என சொல்லப்படும் பாஜக தமிழ்நாட்டில் நாதியற்று கெடக்கிறது.என்னதான் நல்ல திட்டங்களைப் போட்டிருந்தாலும் பாஜக வின் மதவெறி தான் மக்களின் கண்முன்னே நிற்கிறது என்கிறார் முக்கிய தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் ஒருவர்.தமிழக மக்கள் எப்போதுமே மதவெறிக்கு எதிரானவர்கள் என்பது பாஜகவின் நிலையை கண்டே புரிந்து கொள்ளலாம். நடிகர் சரத்,கார்த்திக்,A.C சண்முகம் ஆகியோருக்கு இருக்கும் ஆதரவு கூட நம்ம பாஜகவுக்கு இல்லை என்கிற நிலைதான் தமிழகத்தில். சரத்த விடுங்க, நம்ம கார்த்திக் கூட பாஜகவுடன் கூட்டனி வைக்கத் தயாரில்லையாம். பல லட்டர் பேடுகளைக் கூட அழைத்துப் பார்த்தாகி விட்டது.அரசியல் புரோக்கர் நடிகர் சோ செய்யாத முயற்சியில்லை. நம்ம சூனா சாமி பண்ணாத போன் இல்ல. ஜெயா அம்மா,பாஜக என்ற வார்த்தையைக் கேட்டாலே கொமட்டிண்டு வருது என சூனா சாமியின் போனை கட் செய்து விடுகிறாராம்.சோ பலமுறை ரஜினியுடன் பேசிப்பார்த்தார். ரஜினி எஸ்கேப். இந்த நிலையில் தான் வரும் 12ம் தேதிவரை பொருத்திருப்பது. 12க்குள் எத்தனை லட்டர்பேடுகள் வந்தாலும் சேர்த்துக்கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளது பாஜக. அப்படி பேடுகள் வராவிட்டால் தனித்தே போட்டி என்ற அபாயகரமான அதிர்சி தரும் செய்தியையும் பாஜக இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 14 இடங்களைக் கட்டம் கட்டியுள்ளது பாஜக.எப்படியாவது ஒரு சீட்டாவது வந்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தென்சென்னையில் இல.கணேசன்,சிவகங்கை எச்.ராஜா,இராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர்,கோவையில் சி.பி ராதாகிருஷ்னன் என முக்கிய நபர்களைப் பட்டியலிட்டுள்ளது. இதிலே திருநாவுக்கரசர் மட்டும் ஒரு ஒப்பந்தத்துடன் போட்டியிடுகிறாராம்,அதாவது நான் வெற்றிபெற்றால் தமிழக பாஜகவின் தலைவராக்க வேண்டும் என மேலிடத்தில் கேட்க,அதற்கு அவர்கள் முதல்ல வெற்றிசெய்திய கொண்டுவாங்க பெறவு பாக்கலாம் என அனுப்பி விட்டனராம்.7 முறை வெற்றிவாகை தந்த அறந்தாங்கி மக்கள் தற்போது மாத்தி மாத்தி ஆப்பு அடித்தாலும் மீண்டும் ஒரு நம்பிக்கை இருக்கிறதாம் திருநாவுக்கு. பாஜக எங்கே போனாலும் நெறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கு.படத்தப் பாருங்க எவ்ளோ தீவிரமா டிஸ்கஸ் பன்னுறாங்க. ம்..,பொருத்திருந்து பார்க்கலாம்.பொங்கப்போறது யாரு, பொதயப்போறது யாருன்னு.,,
ஞாயிறு அதிரடி: "கலைஞர் தொலைக்காட்சிகள் பங்கிடப் பட்டால்"
அதிரடி சிறப்பு பதிவு. வரும் ஞாயிறு படிக்கத் தவறாதீர்கள்.
2 கருத்துகள்:
இந்த BJP பெருசுங்க லொள்ளு தாங்க முடியலப்பா!
(ஒரு கற்பனை உரையாடல்)
( சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில் பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது)
அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி 'India Shining' னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!
வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காட்டினோம் ! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!
அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆட்சியில் இருந்த ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி ... விடிஞ்சுரும்!
ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!
வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!
ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.
அத்வானி: குறுக்குச்சால் ஓட்டறது நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், இப்போ மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .
வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!
வெங்கையா நாயுடு : அது மட்டுமா? காரியம் ஆனதும் கழட்டி உடறது, ஊமைக் காயம் வர்றா மாதிரி அடிக்கறது , இதிலெல்லாம் நம்ப பார்ட்டி ஆளுங்க கில்லாடியாச்சே! குரானா, உமா பாரதி, கல்யாண் சிங் , பங்காரு லக்ஷ்மண் , கோவிந்தாச்சார்யா எல்லாரையும் எப்படி smooth ஆ கழட்டி உட்டோம்!
அருண் ஜெட்லி: அது என்ன ஜுஜுபி! ஓட்டுப் போட்டதும் ஒட்டு மொத்தமா ஜனங்களையே கழட்டி உட்டோமே அதை விடவா?!
அத்வானி: 'கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை' என்கிற மாதிரி இந்த பைரோன் சிங் ஷெகாவத் வேற நான்தான் பிரதமர் என்கிறாரு ! 2009 க்கு என்னதான்யா வழி?!
அருண் ஜெட்லி: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ....
வெங்கையா நாயுடு : ...... ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள இந்தப் பாழாய்ப் போன ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !
எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!
அருமையான உரையாடல். நன்றி
கருத்துரையிடுக