புதன், 11 மார்ச், 2009

சிரிப்பாய் சிரித்த சிறந்த காமெடி

1)கேக்குறவன் கேணப்பயலா இருந்தா கேஆர் விஜயா தான் காதலுக்கு மரியாதை படத்துல‌ கதா நாயகின்னு சொல்வானாம் பொழைக்கத் தெரிஞ்சவன்.

2) என் குரல் கம்பீரத்த காதுகொடுத்து ரசிக்கவே சூரியன் வருகிறது என்றதாம் ஒரு மேதாவி சேவல்

அந்த வகையில இன்னிக்கி தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் உள்ள தமிழ் மக்களையெல்லாம் சிரிக்க வைத்துவிட்டது ஒரு நிகழ்சி.  அது புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  மேலே நாம் குறிப்பிட்ட வகையில‌  வெளியிட்டுள்ள‌   ஒரு அறிக்கை . , தங்கள் குடும்ப சொந்தங்களின் சோகத்திலும்,மெகாசீரியல் கதா நாயகிகளின் சோகத்திலும் பங்கெடுத்து சிக்கி சிதைந்து கொண்டுள்ள தமிழக‌ மக்களுக்கு இந்த அறிக்கை ஒரு சிறந்த நகைச்சுவையாகவே ஆகிவிட்டது.அது என்னன்னா 2008ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது என்ற இந்த அறிக்கை செய்தியைக் கேட்க இன்னேரம் நம் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்திருந்தால் அவர்கூட தரையில் புரண்டு புரண்டு விழுந்து  சிரித்திருப்பார். அந்த அளவிற்கு காமெடியாகிவிட்டது இந்த செய்தி.

"சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும்" என்ற வடிவேலு பாணியில் "போரென்றால் சில மக்களும் சாகத்தான் செய்வார்கள்" என்று முன் சொன்ன ஜெ பின்னர் பல்டி அடித்து உண்ணாவிரதம் என்றார்.பின்னர் இது போன்ற அறிக்கையை விட்டார். நாம பொருத்துக் கொள்வோம்.ஆனா கலைஞர் விடுவாரா?

சும்மாவே தினம் வேறு வேலை இல்லாமல் கடிதமா எழுதி குவிக்கும் கலைஞருக்கு இந்த செய்தி இருட்டுக்கடை அல்வாவாய் இணிக்க அவரும் பதிலுக்கு விட்டார் ஒரு மறுப்பறிக்கை. 2008ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008ம் ஆண்டிலிருந்து தூங்கி விட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009ம் ஆண்டிலேதானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார். அது மாத்திரமல்ல, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா?. ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?. ..... என ஒரு ஏழு பக்கத்திற்கு நீள்கிறது அந்த மறுப்பறிக்கை.இந்த மாதிரி நீண்ண்ண்ண்ண்ட கடிதங்களை எப்டித்தான் எழுதுறாரோ கலைஞர். ஒருவேள உக்காந்து யோசிப்பாரோ? இப்டியே யோசிச்சி,யோசிச்சி கடிதமும் கவிதையும் சினிமா வசணமும் தான் எழுதலாம். நாட்டுக்கோ மக்களுக்கோ ஒரு பிரையோஜனமும் இல்ல.

கபாலி கார்ட்டூன்: இன்று முதல் அதிரடி ஆரம்பம்.கிளிக் செய்து படிங்க‌ 

ஞாயிறு அதிரடி: இந்த வாரம் "அதிமுக வேட்பாளர்களுக்கு சில டிப்ஸ்" படிக்கத்தவறாதீர்கள்

12 கருத்துகள்:

யாத்ரீகன் சொன்னது…

கார்ட்டூன் கலக்கல் .. தினமலரா உங்களுதா ?!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//யாத்ரீகன் கூறியது...
கார்ட்டூன் கலக்கல் .. தினமலரா உங்களுதா ?!//

கரீக்கிட்டா கண்டுகிணே மாமே! படம் தினமலர்ல சுட்டது தான்.,ஆனாக்கண்டி மேட்டரு ஒரு குவாட்டர போட்டு நான் புடிச்சது.,ஹக்காங்

இராகவன் நைஜிரியா சொன்னது…

முக்கிய தலைவர்கள் - முக்கிய அறிவுப்பு -

தலைவர்கள் ஏன் முக்கினாங்க... வயித்தில எதாவது பிரச்சினைங்களா?

இராகவன் நைஜிரியா சொன்னது…

// கேக்குறவன் கேணப்பயலா இருந்தா கேஆர் விஜயா தான் காதலுக்கு மரியாதை படத்துல‌ கதா நாயகின்னு சொல்வானாம் பொழைக்கத் தெரிஞ்சவன். //

பொழைக்கத் தெரிஞ்சவன் அப்படின்னு சொல்லிட்டீங்க... அப்புறம் இப்படி பேசாம வேற எப்படி பேசுவாங்க..

டாஸ்மாக் கபாலி சொன்னது…

பரவால்ல ராகவன் அண்ணே இன்னிக்கி சீக்கிரம் வந்துட்டாருபா

Karthikeyan G சொன்னது…

உங்கள் இந்த பதிவை படித்தால் நாளைய கலைஞரின் 8 பக்க அறிக்கையின் நடுவில்
"கேள்வி:: கபாலியின் பதிவை படித்தீர்கள?
பதில்:: சாமர்த்தியமாக பதிவிட்டு விட்டதாக கபாலிக்கு நினைப்பு"

என்ற வாசகங்கள் இருக்கும். :)

டாஸ்மாக் கபாலி சொன்னது…

அண்ணே கார்த்தியண்ணே! இது பாராட்டா? குட்டா? ஒன்னுமே புரியலேயே. எதுவாயிருந்தாலும் நன்றி

Joe சொன்னது…

அரசியலில இதெல்லாம் சாதரணமப்பா!

//கேக்குறவன் கேணப்பயலா இருந்தா கேஆர் விஜயா// இந்த டயலாக் வேற மாதிரில சொல்லுவாங்க?!? :-D

Raju சொன்னது…

கரீக்கீட்டா சொன்னான்பா கபாலி....

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Joe கூறியது...
அரசியலில இதெல்லாம் சாதரணமப்பா!

//கேக்குறவன் கேணப்பயலா இருந்தா கேஆர் விஜயா// இந்த டயலாக் வேற மாதிரில சொல்லுவாங்க?!? :-D//

ஓ ஜோ மாமே! நீங்க எங்க வர்ரீகன்னு புரியுது கண்ணு. நான் நான் ரொம்ப உசாரு.

Karthikeyan G சொன்னது…

//பாராட்டா? குட்டா?//

கபாலி சார்.. அது மனமார்ந்த பாராட்டுங்க..

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

:-))))))))