ஒரு ஊருல ஒரு மதபோதகர் இருந்தாராம்.அவரு பேச்சக் கேட்கறதுன்னா அந்த பகுதி மக்களுக்கு மிகமிக ஆர்வமாம். அவரு பேச்சக் கேட்டு எத்தனயோ குடிகாரங்க திருந்தி இருக்காங்கலாம்.அவரு சொன்னாலே எல்லாத்தையும் விட்டுட்டு நல்லவனா மாறிடுவாங்கலாம். ஒரு நாளு அவரு ஒரு பிரசாரக் கூட்டத்துக்கு போறதுக்காக அவரு வீட்டு கொல்லப்பொறத்துல பல்லுவெளக்கிகிட்டு இருந்தாராம். அந்த நேரம் பக்கத்து வீட்டுக் கோழி பறந்துவந்து கிணத்தடில உக்காந்துச்சாம்.உடனே நம்ம மதபோதகரு பக்கத்துல இருந்த கூடய எடுத்து டப்புனு அந்தக்கோழிய ஒரே அமுக்கா அமுக்கி மூடிப்போட்டாறாம்..பக்கத்துல உக்காந்து பாத்திரம் தேச்சிகினு இருந்த அவரு சம்சாரம்,"என்னங்க பக்கத்து வீட்டு கோழிய பிடிச்சி கவுத்திப்புட்டீக" அப்டீனு கேட்டுச்சாம்.
போதனக்கூட்டம் முடிஞ்சி கோழி வறுவல் சாப்புடு ற ஆர்வத்துல நாக்கத்தொங்கப்போட்டுகினு வீட்டுக்கு வந்த நம்ம போதகரு வேகவேகமா கிணத்தடிக்கி போயி கைகால் மூஞ்சி கழுவிகினு உள்ள வந்து பாயப்போட்டு உக்காந்து,"அடியேய் கொண்டுவாடி கோழிப்பொறியல"அப்டின்னு சவுண்டு உட்டாரம்.அதக்கேட்டு பயந்து போன அவரு சம்சாரம் பயந்துகினே அவரு மின்னாடி வெருங்கைய வீசிக்கினு வந்து நின்னுச்சாம்."எங்கடி கோழி" ன்னு கேக்க.ஏங்க நீங்கதான இன்னிக்கு கூட்டத்துல சொன்னிய,அடுத்தவுக பொருளுக்கு ஆசப்படக்கூடாதுன்னு.,அதான் வூட்டுக்கு வந்து கோழிய தொறந்துவு ட்டுட்டேன்’னு அப்பாவியா சொன்னிச்சாம் அவரு சம்சாரம்.ஏற்கனவே பசிமயக்கத்துல இருந்த போதகரு இதக்கேட்டு கடுப்பாகி,"அடி பாவி முண்டே,குடியக்கெடுத்திட்டியேடி,அடியே அந்த போதனய ஒனக்காடி சொன்னேன்,ஊருக்குலடி சொன்னேன்னு அலறிக்கிட்டு உட்டாரம் ஒரு ஒத.
சாரு கத எப்டி. இன்னாடா, கபாலி திடீர்னு இந்த கதயச்சொல்றான்னு கொழப்பமா இருக்கா? எதையுமே பிளான் பண்ணாம பண்ணுனா இப்டித்தான்.இப்ப இன்னா மேட்டர்னா நம்ம பகுத்தறிவுத்தந்தை அய்யா பெரியாரின் விரல் பிடித்து நடந்தேன், என் உயிர் போனாலும் பகுத்தறிவுக் கொள்கைய வுட மாட்டேன், கோயிலுக்குப் போனாக்கா, உடன்பிறப்பே! உன்னயக் கட்சிய உட்டே கடாசிருவேன் அதுமட்டுமல்லாம பகுத்தறிவுத் துரோகின்னு பட்டமும் கொடுத்திருவேன் என வீராவேசமா முரசொலில உடன்பிறப்புகளுக்கு உட்டாலக்கடி கடித்தத்த எய்துவாரு தலீவரு கலைஞரு.
ஆனா நேத்திக்கு அவரு ஊட்டு அம்மா திருக்கடையூர் கோயிலுக்கு திடீர்னு போயி நின்னாகலாம். அவுக வர்றத பாத்துட்டு அந்த கோயில் குருக்கள் , “அபச்சாரம்,அபச்சாரம் பகுத்தறிவு பேசறவா கோயிலுக்குள்ளே வர்ராளே! ஓய்! சீக்கிரமா நடய சாத்துங்கோ, பிரச்சாரம் பண்ணுறவா வந்துன்டிருக்கா” அப்டின்னு கொரலு உட்டாராம். ஆனா பெரிய ஊட்டு அம்மா கையில தேங்கா பழத்தோட பூசத்தட்டக்கொடுத்து பெரியாரின் வழிவந்த பிள்ளைபெருமான் நலம்பெற வேண்டி அவரு பேருள ஒரு ஆயில்ய ஹோமத்த செய்யச் சொன்னாங்கலாம்.
அதுமட்டுமில்லாம எதிரிகளை வீழ்த்த வேண்டி கும்பகோணத்துக்கு நியராக்கீர அய்யாவாடி பத்ரகாளிஅம்மன் கோயில்லயும் விசேஷ பூசைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்துகினு வருதாம்.
இப்ப பிரியுதா கண்ணுங்களா! மேல உள்ள கதைக்கும் கீழ உள்ள மேட்டருக்கும் உள்ள கனெக்கிஷன்.
ஏன் வேஸ்ட்டா ஓட்டுக்கேட்டு செலவு பண்ணிக்கிட்டு,பேசாம ஆளாளுக்கு ஒரு ஹோமத்த வளத்தம்னா எலக்சனுல செயிச்சிடலாம். தாயி! முடிஞ்சா அப்புடியே நம்ம மருத்துவர் அய்யாவுக்கு இனியாவது கட்சிதாவம இருக்குற மாறி ஒரு செய்வெனய வச்சி வுடுங்க.
UPDATE TODAY: "கபாலியாண்ட கேளு மாமே!"
2 கருத்துகள்:
கபாலி நல்லாகுதுபா....
இந்த உட்டாலக்கடி மேட்டரு சூப்பரு மாமே.
sakka super makka
கருத்துரையிடுக