வியாழன், 12 மார்ச், 2009

சமகவுடன் பாஜக.திருநாவுக்கரசர் திக்,திக் பேட்டி

வேறு வழியே இல்லாமல் கடைசியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியான(கீழிருந்து) சமகவுடன் பாஜக பேச்சிவார்த்தை நடத்துகிறது என்பது தான் இன்றைய ஹாட் செய்தி. செய்தியில மட்டும் தான் ஹாட் இருக்கிறது.ஆனால் பேச்சி வார்த்தை மிக மிக கூலாக அதாவது காமெடியாக போய்கொண்டிருக்கிறதாம்.அதாவது சமக பிஜேபியுடன் கூட்டனி சேர்வதற்கு 10 தொகுதி கேளுங்க‌ என ச‌ரத்தின் அல்லக்கைகள் அள்ளி விட அவரும் கம்பீரமாக பாஜக கூட்டுக்குழுவிடம் நாங்கள் 10 எதிர்பார்ப்போம் என்றாராம். அதற்கு அந்த கூட்டுக்குழு தலைவர் பயங்கரமாக வந்த சிரிப்பை அடக்கியபடி பாஜக வெறும் 14 தொகுதியில தான் போட்டியிட முடிவு செஞ்சிருக்கு.ஆனா அதுக்கே ஆள் கெடைக்கல.உங்களுக்கு வேனுமின்னா மிச்சப்படுற அதாவது 26 தொகுதிகளையும் நீங்களே எடுத்துக்குங்க என கேட்டுக்கொண்டாராம். இதக்கேட்டு வெக்ஸ் ஆன சரத் ஏற்கனவே திருமங்கலம் சமக வேட்பாளர் பிளாட்'ல இருந்து பிளாட்பாரத்துக்கு வந்திட்டாரு.இப்ப நம்ம இந்த உடன்படிக்கைக்கு ஒத்துக்கிட்டா இன்னும் 26 பேர பிளாட்பாரவாசிகள் ஆக்குன பாவம் நம்மள சேருமே என்று யோசித்தவாறு, பேச்சிவார்த்தை தொடர்கிறது என நைஸா கழன்டுகிட்டாராம். இந்த நிலையில இன்று பேட்டி குடுத்த திருநாவுக்கரசர் சமகவுடன் பேச்சிவார்த்தை தொடருவதாகவும், தான் இராமநாதபுரம் தொகுதியிலே போட்டியிடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனா இராமநாதபுரம் (தற்போது இணைந்த புதுக்கோட்டை) மக்கள் திருநாவுக்கரசுக்கு ஆப்பு வைப்பதற்கு அங்கே ஆயுத்ததைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது திருநாவுக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியவில்லை.ஏற்கனவே அறந்தாங்கி பகுதி மக்கள் திருநா மீது காட்டமாகத் தான் இருக்கிறார்கள்.

பேசாம‌ ஒன்னு செய்யலாம். பாஜக கார்த்திக் உடன் பேச்சி வார்த்தை நடத்திப் பாக்கலாம். பேரம் படிஞ்சால் கார்த்திக்கை பிரதமர் வேட்பாளரா முன்னிருத்தி பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம். இப்படி செஞ்சால் பாஜகவிக்கு கொஞ்ச நஞ்சம் இருக்கிற ஓட்டுக்கும் வேட்டாயிரும் என்பது வேறுவிசயம்.

ஆக‌ தமிழகத்த பொருத்தவரைக்கும் பாஜக என்பது பஞ்சரான வண்டிதான் என்பதில் மாற்றுக்கருத்தி கிடையாது.

ஞாயிறு அதிரடி: இந்த வாரம் "அதிமுக வேட்பாளர்களுக்கு சில டிப்ஸ்" படிக்கத்தவறாதீர்கள்

புதிய பகுதி: "காண்டு கபாலி" கிளிக் பண்ணி படிங்க‌

6 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//பேசாம‌ ஒன்னு செய்யலாம். பாஜக கார்த்திக் உடன் பேச்சி வார்த்தை நடத்திப் பாக்கலாம். பேரம் படிஞ்சால் கார்த்திக்கை பிரதமர் வேட்பாளரா முன்னிருத்தி பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம். //

:)))))))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//கார்த்திக்கை பிரதமர் வேட்பாளரா முன்னிருத்தி பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம்.//
அருமை!!!

பெயரில்லா சொன்னது…

Vaanaam, valikkuthu, azhudhuruven!

Karthikeyan G சொன்னது…

கார்த்திக் மதவாத சக்திகளுடன் உறவு கிடையாது எண்டு அறிவித்துவிட்டார். அப்படி கூட்டு வைத்து கொண்டல் நா.ம.க வின் மக்கள் செல்வாக்கு குறைந்துவிடுமாம். :)

நையாண்டி நைனா சொன்னது…

இப்படியெல்லாம் கூட நடக்குதா?
என்னோட ரூமே பெருக்குற ஆய சொல்லிச்சு
நேத்து நாங்க நாலு பேரும் ஆபீஸ் போனபிறகு, அங்கே எங்க ரூமிலே தங்கி இருக்கிற இருக்கிற ஆளுங்கள கூட்டணிலே சேக்குறதுக்கு ரெண்டு பேரு வந்தாங்கன்னு. அப்போ அது உண்மை தானா?

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

நான் நேத்தே கூவினேன். அப்ப நீ கண்டுக்கலை....
இப்ப பாரு மாமே. நீயே பதிவா பதிஞ்சிகினே...
கவனமா பார்டியை செலீட் பண்ணு, நாம கூட்டணி வைக்க... எம்மா நேரமும் உன்நூட்டாண்டே பார்டி ஆளுங்க வருவாங்க, நீ நமக்கா சீட்டு கேகுரியோ இல்லியோ, மாலு நல்லா கரந்துறு.... மிடாசு, சா வாலேசு மாரி நாமளும் பெரிய சரக்கு கம்பினி ஓபன் பண்ணீறலாம்