ஞாயிறு, 8 மார்ச், 2009

சம்பத் நாக்குல ஏறி உக்காந்த சனி

"இந்த ஜெயிலுக்கு ஒருமொற வந்தாப் போதும் மறுபடி மறுபடி வந்துக்கிட்டே இருக்கலாம், அப்டி ஒரு ராசி இந்த ஜெயிலுக்கு" என உதயகீதம் படத்துல ஒரு வசணம் வரும். அந்த மாதிரி நாஞ்சில் சம்பத்த ஒருமுறைதான் புடிச்சி உள்ள போட்டாங்க. இப்ப அவர் பார்க்காத ஜெயிலே இல்ல. சம்பத் விடுதலையாகும் போது அவருடைய "செல்" நண்பர்கள் கேட்கும் கேள்வி "அடுத்து எப்ப எதிர்பார்க்கலாம்" என்பதாகும்.சில பேரு நாக்குல சனின்னு சொல்லுவாங்க. ஆனா நம்ம சம்பத் நாக்குல அட்வான்ஸ் வாடகையில்லாம சனி நிரந்தரமா குடியேறிவிட்டது. முன்னாடி மெளகாய் மண்டியில வேலை பார்த்தாரோ என்னவோ வாயத்தொறந்தாலே எல்லாருக்கும் கண்ணு எரியும். வைக்கோவின் பொய்க்கோ(ஜெராக்ஸ்) என அழைக்கப்படும் சம்பத் போகாத‌ ஜெயிலே இல்ல வாங்காத அடியே இல்ல.சமீபத்துல இவர் உள்ள போயி வாங்குன அடிக்கு பிறகு இப்ப எவன் அடிச்சாலும் தாங்கக்கூடிய சக்தி வந்துவிட்டது இப்ப இவருக்கு.அப்படி ஒரு அடி அது.

இப்ப என்ன மேட்டருன்னா திருப்பூரில் மார்ச் 1ம் தேதி நடந்த ஒரு கூட்டத்துல பேசுன சம்பத் "இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி இறந்துட்டான். ஆனால் சேலை கட்டி வந்த முசோலினி தான் சோனியா. தன்னை பிடிக்காத, தனக்கு பிடிக்காத மாமியார் இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்துள்ளார்.மன்மோகன்சிங் ஒரு வாயில்லா பூச்சி என‌வும்,பிரபாகரனை சர்வாதிகாரி என பதிவு செய்வதற்காகவா கருணாநிதி தமிழக முதல்வராக இருக்கிறார்? தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.ஒரு லட்சம் தமிழர்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும்" அப்டின்னு பேசுன சம்பத்த நம்ம காவல்துறை வழக்கம் போல கோட்டை விட்டுட்டு அப்பறமா வலைவீசி தேடியிருக்கு. “ரின் வெளம்பரம் மாதிரி தேடினாலும் கெடைக்காம திரிஞ்ச சம்பத்  நேத்து ராத்திரி தாம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில‌ கலந்துகினாரு.இந்தத் தகவல் போலீஸாருக்குக் கெடைக்க‌ விரைந்து வந்து அவரைக் கைது செஞ்சிட்டாங்க‌. பின்னர் பலத்த பாதுகாப்புடன் சம்பத்தை வேனில் திருப்பூர் கொண்டு போயி பழைய நண்பர்கள் வரவேற்பு முழங்க சிறையில் அடைத்தனர். 

ஆக யாராவது தகவல் கொடுக்காத வரையில் நம்ம காவல்துறை பக்கத்திலேயே நின்னாலும் புடிக்காது அப்டின்கிற செய்தி உண்மையாகிடிச்சி.

நாளைக்கு அம்மா உண்ணாவிரதம் இருக்கப்போறாங்க. நான் அந்த பக்கமா போயி ஏதாவது நியூஸ் கெடக்கிதான்னு பாக்குறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//தனக்கு பிடிக்காத மாமியார் இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்துள்ளார்.//

உண்மை தான் டாஸ்மாக் கபாலி அவர்களே
இந்த உலகத்தில் மாமியார் மொச்சிய மருமகள் யாருமே இல்லை அது போல மருமகள் மொச்சிய மாமியாரும் இல்லை.இந்த சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு நில்லாமல் அவர்களுக்கு பிரதம மந்திரி பதவியும் கொடுத்து alangarithathaal சோனியா வின் மனதில் என்ன இர்ருகிறது என்று புரியால் இல்லை.நடக்கட்டும்
இந்த தமிழர்கள் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள் .பதவி என்று ஒன்று இல்லாதபோது தான் தமிழர்களின் பலம் இந்த இதாலிகாரிக்கு புரியும்.
பால் துரை

ஆ.ஞானசேகரன் சொன்னது…

திரு சம்பத் அவர்களிம் பேச்சு மிளகாய்பொடி இல்லை அது ஒரு இடி... மானிடம் பேசும் பல்கலைகழகம்....

Karthikeyan G சொன்னது…

//ஆ.ஞானசேகரன் கூறியது...
திரு சம்பத் அவர்களிம் பேச்சு மிளகாய்பொடி இல்லை அது ஒரு இடி... மானிடம் பேசும் பல்கலைகழகம்....
//

இப்படி உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டே அவரை ரணகளம் பண்ணாம விடமன்டீங்க போல.