வியாழன், 19 மார்ச், 2009

மானமில்லையா மருத்துவரே...,

ச்சீ.,ச்சீ.,ச்சீ வெக்கக்கேடு என்று போராட்டங்களில் முழங்குவார்கள்.அந்த வார்த்தையை இப்போது அய்யா இராமதாஸை நோக்கித்திருப்ப வேண்டியிருக்கிறது., தமிழ்குடி தாங்கி அய்யா அவர்கள் மற்ற நேரங்களில் மானமுள்ள ஈனமுள்ளத் தமிழனாகவும்,தேர்தல் நேரங்களிலே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு சொரணையற்றத் தமிழனாகவும் மாறிவிடுகிறார்.

என்ன காரணம்? கலைஞரை, ஜெயாவை விடவும் அதிகமாக‌ விமர்சித்து ஒரு பிரதான எதிர்கட்சி போலவே காட்டிக்கொண்ட அய்யா இராமதாஸ் இப்போது நாங்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தால் கூட்டணிக்குத் தயார் என்று அறிக்கை விடுவது எவ்வளவு பெரிய கேவலம்.ஏற்கணவே அம்மாவோடு கூட்டணி வைத்து நான் பாடம் கற்றுக்கொண்டு விட்டேன். இனிமேல் சத்தியமா அந்த ப‌க்கம் போகவே மாட்டேன் என அப்ப சொன்ன ராமதாஸ்,இப்ப சொல்றாரு

"அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்" என்று.

எலக்சன் அறிவித்து விட்டாலே தைலாபுரம் தோட்டத்து பக்கம் என்னேரமும் ஒரே கூட்டமாத்தான் இருக்கும். என்னடான்னு எட்டிப்பாத்தா எல்லாமே ஜோசியக்காரரகள்,குறிகாரர்கள் (கவணிக்க குறிகாரர்கள்‍‍‍‍-குடிகாரர்கள் அல்ல). மத்தியானம் அவர்களுக்கு கிடாவெட்டி கவுச்சிக்கஞ்சி ஊத்திய பிறகு அவர்களிடம் தனித்தனியாக,"யார் ஜெயிப்பார்கள்" என‌ குறி கேட்கப்படும். அதிலே மெஜாரிட்டியாக எந்த கட்சியின் பெயர் வருகிறதோ அந்த கட்சியை நோக்கி மாம்பழத்தோடு படையெடுப்பார் மருத்துவர் அய்யா ராமதாஸ்.(இதை நேரலையாக மக்கள் தொலைக்காட்சியில் காட்டலாம்).

அந்த வகையில் இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை திமுக‍‍ -அதிமுக ஆகிய இரண்டுக்குமே சம அளவில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஜோசியர்கள் சொல்லிவிட குழம்பிப் போன மருத்துவர் மத்தியிலே யார் ஆட்சியமைப்பார்கள் எனவும் கேட்டிருக்கிறார்.அதற்கு அவர்கள் பதிலில் திருப்தியில்லாத மருத்துவர் தெளிவான முடிவெடுக்காமல் இருக்கிறார்.அதானால் தான் மக்கள் தொலைக்காட்சியின் எட்டுக்கு எட்டு பாணியில் திமுகவிலும் அதிமுகவிலும் பத்துக்குப் பத்து என பல்லைக்காட்டிக் கொண்டு இருக்கிறார்.

இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும் எந்த கட்சி ஜெயிக்கும் என கணக்குப் போட்டு சேரும் மருத்துவர் இந்த தேர்தலில் மணடையைப் பிய்த்துக் கொண்டுள்ளது கட்சித்தலைவர்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

மருத்துவர் ராமதாஸைப் பொருத்தவரை தேர்தல் நேரத்தில் ராஜபக்சேயின் கட்சி தமிழகத்தில் இருந்து அவர்கள் 10 சீட்டு தருவதாக சொன்னாலும் சலாம் போட்டு அவர்களுடனும் கூட்டனி சேர்ந்து கொள்வார்.

C.I.D.சிங்காரம் தரும் தகவல் : என்னதான் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மருத்துவர் ராமதாஸ் கடைசியாக அதிமுகவில் தான் சேருவார் என்கிறது முக்கியமான தைலாபுர பட்சி ஒன்று.மருத்துவரின் கூட்டணி ஆவல் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகவும் அந்த பட்சி சொல்கிறது. திமுக**85% : அதிமுக**15%

7 கருத்துகள்:

இராகவன் நைஜிரியா சொன்னது…

இந்திய அரசியலில் யாருக்குத்தான் மானமிருக்குங்க...

ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டுவது மாதிரி ஆகிப் போச்சு, அரசியல்.

இப்ப எந்த குதிரை ஜெயிக்கும் என்று கணக்கு பண்ண முடியவில்லை...

நடப்பவை எல்லாம் நல்லதற்கே..

யூர்கன் க்ருகியர் சொன்னது…

"கட்சி தாவல்" தடை சட்டம் இருக்கா இல்லையா?

குப்பன்.யாஹூ சொன்னது…

தேர்தல் முடியும் வரை இரண்டு மாதம் நாங்கள் தமிழ் ஈழம் பிரச்சனைக்கு விடுமுறை விட்டுள்ளோம், தெரியாதா நண்பரே.

பதிவர்களாகிய நாங்களும் தேர்தல் திருவிழாவில் முடிந்த வரை தேர்தல் பற்றி எழுதி ஹிட்ஸ் அதிகம் பெற உள்ளோம்.

. இரண்டு மாதம் கழித்து பதிவு எழுத வேறு செய்தி இருக்காது, கிடைக்காது.அப்போது இலங்கை தமிழர் பற்றிய பதிவுகள் எழுதுகிறோம்

ராமதாசும் திருமாவும், சுப வீரபாண்டியனும் கூட இரண்டு மாதம் விடுமுறை இலங்கை பிரச்சனிக்கு.

குப்பன்_யாஹூ

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

//மருத்துவரின் கூட்டணி ஆவல் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகவும் அந்த பட்சி சொல்கிறது. திமுக**85% : அதிமுக**15% ///

அது கூட்ட்ணி ஆவலா இல்லை கூட்டணி “தாவலா”

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

//மருத்துவர் ராமதாஸைப் பொருத்தவரை தேர்தல் நேரத்தில் ராஜபக்சேயின் கட்சி தமிழகத்தில் இருந்து அவர்கள் 10 சீட்டு தருவதாக சொன்னாலும் சலாம் போட்டு அவர்களுடனும் கூட்டனி சேர்ந்து கொள்வார்.///

அரசியல்ல இதெல்லாம் “சாதாரனம்ப்பா”

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

//,இப்ப சொல்றாரு "அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்" என்று///

அது போன எலெக்சன், நான் சொல்றது இந்த எலெக்சன்..
(இதெல்லாம் தெரிந்ததது தானே)

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

///இராகவன் நைஜிரியா கூறியது...



நடப்பவை எல்லாம் நல்லதற்கே..//


இல்லண்னே நடப்பவை எல்லாம் மக்கள் நாசமா போவதற்க்கே..