வியாழன், 19 மார்ச், 2009

தமிழகத்தைச் சூழும் ஆபத்து -C.I.D சிங்காரம்

-C.I.D சிங்காரம்
பீகாரைப் போல,பாகிஸ்தான் போல அமைதிப்பூங்கா தமிழகமும் மாறிவிடுமோ என்ற பயம் தற்போது மக்களிடையே சூழ ஆரம்பித்து விட்டது.ஸ்காட்லார்ந்து யார்டு போலீசுக்கே சில நேரங்களில் சவால் விடும் தமிழக காவல்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியிலே பீதியை ஏற்படுத்தியுள்ளன. இந்தனை காலமும் எங்களுக்கும் சங்கம் வேண்டும் என கோரிக்கை வைத்தும் அது எந்த அரசாலும் நிறைவேற்ற முடியாத ஒரு கோரிக்கையாதலால் இன்று வரை அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 
நம் மக்களில் பலருக்கு ஒரு சந்தேகம் எழலாம்.ஏன் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று. அங்கு தான் நாட்டின் இறையான்மை,சட்டம் ஒழுங்கு மறைந்துள்ளது . அதாவது காவல்துறைக்கு எதிராக ஒரு கட்சியோ அல்லது ஒரு அமைப்போ போராட்டம்,பேரணி,பொதுக்கூட்டம் நடத்தினாலும் கூட அதற்கும் அதே காவல்துறை தான் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும். காவல்துறையினர் எந்த கட்சியிலும் உறுப்பிணராக இருக்கவோ,பதவி வகிக்கவோ இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. காரணம் காவல்துறையினர் எல்லாருக்கும் பொதுவானவர்கள். அவர்கள் ஜெயலலிதாவையும் உள்ள புடிச்சி போடுவார்கள், நள்ளிரவில் கலைஞர் வீட்டுக் கதவைத்தட்டி கலைஞ‌ரையும் கைபணியன் கைலியோடு "கொல பண்ணுறாங்கப்பா" என்ற டிடிஎஸ் சவுண்டு எபெக்டோடும் கைது பண்ண முடியும்.அது போல நம்ம அண்ணன் வைக்கோவப் புடிச்சி உள்ளக்கபோட்டு அள்ளயில மிதிக்கலாம். 
ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறும் என்ற கதைக்கு ஏற்ப முன்னர் கைது வேலைகள் செய்தவர்கள் ஒன்று மாற்றப்படுவார்கள் அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார்கள். ஆனால் காவல்துறை சங்கம் அமைந்தால் என்ன நடக்கும்.திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என ஒவ்வோரு கட்சிக்கும் ஒவ்வொரு குழு என சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். இவர்கள் ஆர்பாட்டத்திற்கு அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டும் தான் பாதுகாப்பு கொடுப்பார்கள்.அந்த கூட்டத்திலே யாரேனும் கலவரம் செய்தால் அந்த கட்சித்தொண்டர்களோடு சேர்ந்து இவர்களும் எதிரணியினரைத் தாக்க ஆரம்பித்து விடுவார்கள். காவல் துறையின் ஒரு சங்கம் ஸ்டிரைக் பண்ணும், அதற்கு எப்படி மற்றொரு சங்கம் பாதுகாப்பு கொடுக்கும்? 
இது போன்ற சங்க பிரச்சிணைகளை எழுப்பி வரும் சிலரால் நேற்று விணியோகிக்கப் பட்ட ஒரு துண்டுப்பிரசுரம் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் வேட்டு வைத்து விடுமோ என்ற பயம் கிளம்பியுள்ளது.அந்த நோட்டீஸ் சென்னை மா நகரின் பல காவல்நிலையங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ்காரர்களால் வினியோகிக்கப்பட்டது.அதிலே ஒரு முக்கியமான பாயின்ட் "நாங்கள் அமைதிப்படை வீரர்கள், எங்களது அமைதி ஆழ்கடலின் அமைதியைப் போன்றது. ஆனால் எந்த நேரத்திலும் நாங்கள் சுனாமியாக மாறுவோம்" என்பதே.காவல்துறையும் நீதித்துறையும் மோதிக்கொள்வதும் ஒரு நாட்டிற்கு நல்லதல்ல.இது போன்ற பிரச்சிணைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்காவிடில் நாளைய நாட்டின் பாதுகாப்பு ???????????

6 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அன்றாட வாழ்வில் எத்தனைஎத்தனை கடமை தவறும் போலீஸ்களை பார்த்திருக்கிறோம். என் வாழ்வில் மொத்தம் மூன்று முறை போலீஸ் ஸ்டேஷன் சென்று இருக்கிறேன்.( சத்தியமா என் மேல குற்றம் இல்லீங்க சார்) மூன்று முறையுமே போலீசார் பணத்தின் பக்கம் சாய்ந்ததை உணர்ந்திருக்கிறேன். ஒன்னும் செய்ய முடியாமல் கொந்தளிக்கும் மனதுடன் வருவதை தவிர வேறு வழியில்லை. இந்த லட்சணத்துல இவங்களுக்கு சங்கம் வேற வேணுமாம். கிழிஞ்சிரும்!!

எத்தனை % போலீஸ் நம் நாட்டில் நேர்மையாக கடமை தவாறாமல் இருக்கிறார்கள் என்று சர்வே எடுத்தால் மறுபடியும் கிழிஞ்சிரும்!!!!!!!!!

அன்பரசு சொன்னது…

ஏற்கனவே பொருளாதார மந்த நிலை, தீவிரவாதம், மதவெறி, ஊழல், பெருகி வரும் வன்முறை என நாடு போகும் போக்கு பயமுறுத்துவதாக உள்ளது. இதில இப்போ இது வேறையா...? காவல் துறையில் வளர்ந்து வரும் இது போன்ற புரட்சி மனப்போக்கு, பொது மக்கள் மற்றும் இதர துறைகளில் உள்ள காவல்துறைக்கு எதிரான போக்கு....இதிலும் தற்போது உள்ள சூழ்நிலை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் விபரீதமாகிவிட வாய்ப்புண்டு. அந்த வகையில் தங்கள் கருத்துகள் மிக நியாயமானதும், சரியான நேரத்தில் சொல்லப்பட்டதும் ஆகும். நன்றி!

பெயரில்லா சொன்னது…

ஜுர்கேன் க்ருகேர் கூறியது முற்றிலும் சரி ... நில தகராறில் நானும் சென்றிருக்கிறேன். நியாயம் பேசாமல், எதிர் தரப்பினரிடம் 10000ருபாய் வாங்கி கொண்டு சப் இன்ஸ்பெக்டர் மிரட்டினார். பிறகு நங்கள் டி இஸ் பி அவரிடம் மனு குடுத்தோம். டி இஸ் பி அவர்கள் சப் இன்ஸ்பெக்டர்ரை கூப்பிட்டு திட்டினார். அதனால், எங்கள் குடும்பத்தாரை ஸ்டேஷன் கூப்பிட்டு " என்ன திமிர் இருந்தால் அங்கே போவிர்கள் னு மிரட்டினார்கள், , என் அம்மாவை "தேவிடியா என்றெல்லாம் திட்டினார்கள்.
என் உயிர் உள்ள வரை நான் மறக்க மாட்டேன். நில தகராறுக்கு சென்ற எங்களை பணம் வாங்கி கொண்டு எங்களை கேவல படுத்தினார்கள். வெளியிலில் சொல்ல முடியவில்ல... அன்று தான் போலீஸ் என்றால் யார் என்று தெரிந்தது. என்னுள் இருந்த "போலீஸ் பற்று அன்றே போய்விட்டது. எத்தனை நாள் அழுததுண்டு "மனதுக்குள்". ஒன்னும் செய்ய முடியாமல் கொந்தளிக்கும் மனதுடன் வருவதை தவிர வேறு வழியில்லை.
இவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சங்கம் ஆரம்பித்தால் ..அவ்வோ தான் ஒரு "ரானுவா ஆட்சி போல் ஆகிவிடும் .

Karthikeyan G சொன்னது…

C.I.D சிங்காரம் அவர்களே கவலை வேண்டம். தமிழகத்தைச் சூழும் ஆபத்தை போக்க கலைஞரிடம் ஒரு நல்ல "கவிதையுடன் சேர்ந்த கல் நெஞ்சையும் கரையவைக்கும் உருக்கமான அறிக்கை" உள்ளது.

கபாலி சார், உங்களுக்கு கலைஞரின் சானக்யதனம்(?) பற்றி தெரியாதா? நீங்களும் கவலை படலாமா?

வனம் சொன்னது…

வணக்கம்

அமைதி, சுனாமி இந்த வார்த்தை விளையாட்டுக்கள் இல்லாம, அவங்க மனசாட்சி படி நேர்மையா (அப்படினா என்ன-னு எல்லாம் கேட்கக் கூடாது) இருந்து காட்டச் சொல்லுங்க

பிறகு மற்றதை பார்க்களாம், சங்கம் வைத்து அவர்கள் பெறநிணைக்கும் அவர்களுக்கான தேவைகளை இந்த சமூகமே பெற்றுத்தரும்

நன்றி
இராஜராஜன்

அன்பரசு சொன்னது…

பெயரில்லா சொன்னது மிக அதிர்ச்சியாக உள்ளது, இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மிகைப் படுத்தப்படுகின்றன என்றுதான் இன்று வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அரசியல் புள்ளிகளையும், காவல்துறையையும் விலை கொடுத்து வாங்குவதற்கு பணமோ செல்வாக்கோ இல்லாத நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் மனதுக்குள்ளேயே குமுறிக்கொள்வதை தவிர வழியில்லை. வலைப் பூக்களில் நிறைய பதிவர்களின் எழுத்துகளில், நாட்டில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்ற வீச்சை காண முடிகிறது. ஆனால் இது வெறும் எழுத்துகளோடு முடிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். பூனைக்கு நம்மில் யார் மணிகட்டுவது?