திங்கள், 23 மார்ச், 2009

நடிகை அசின் விவகார‌ மர்மங்கள்-C.I.D சிங்காரம்

-C.I.D சிங்காரம்

சமீப‌ நாட்களாக பத்திரிக்கைகள்தொலைக்காட்சிகளில் முக்கியமாக இடம் பெறும் செய்தி அசினின் உதவியாளர் காணமல் போன விவகாரம். இதற்கு முன்னர் இதே நடிகை அசின் தன்னிடம் உதவியாளராக இருந்த ஒரு சிறுமியை கொடுமை செய்யதாக புகார் கிளம்பி அது அன்றைக்கு அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.ஏற்கனவே ஒரு முறை அந்த சிறுமி விவகாரத்தில் அனுபவப்பட்ட அசின் மிக கவனமாகச் செயல்பட ஆரம்பித்தார். உதவியாளரே வேண்டாம் என முடிவு செய்து தன்னுடைய கால்சீட்டுகளையும்,"அப்பாயின்மென்டுகளையும்" தானே கவனிக்க ஆரம்பித்தார்.அதோடு அவருடைய தந்தையும் பல நேரங்களில் அசினுடைய கால்சீட்டுகளை கவனித்துக்கொண்டார்.ஆனால் தொடர்ந்து கவணிக்க முடியாமல் திணரும் சூழ்நிலையில் நடிகர் விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது விஜய்யின் உதவியாளராக இருந்த முத்துக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.தன்னுடன் பணிபுரிய விஜய்கொடுப்பதை விட அதிக சம்பளம் தருவதாகக் கூறி முத்துக்குமாரை தன் உதவியாளராக மாற்றிக்கொண்டார்.

பின்னர் அசினிடம் பணிபுரிந்த முத்துக்குமார் முக சிறப்பாக,செழிப்பாக இருந்துள்ளார். விஜய்யிடம் பணியாற்றிய‌தை விட, தான் இங்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகத் தன் தாயிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஏற்கணவே உதவியாளர் விசயத்தில் அடிபட்டுவிட்ட அசின் இம்முறை மிக கவணமாகத் தான் இருந்துள்ளார். அதற்கு அந்த பிறந்த நாள் புகைப்படங்களே சாட்சி.

செய்தி 1: நடிகை அசினின் அந்தரங்கள் அனைத்தும் என் மகனுக்குத் தெரியும்.அவர் எங்கு,யாருடன் போகிறார் என அனைத்துமே என் மகனுக்குத் தெரியும்.அதனால் அவனை அவர்களது கேரள பண்ணைவீட்டில் அடைத்துவைத்து இருக்கின்றனர். எனக்கு பணம் பொருள் எதுவும் வேண்டாம்,என் மகனை மட்டும் மீட்டுத்தாருங்கள்.- முத்துக்குமார் தாயார் சுடலைவடிவு 

 செய்தி2: முத்துக்குமார் எங்களிடமிருந்து விலகி விட்டார்.இப்போது ஒரு தாதா கும்பலிடம் சேர்ந்து கொண்டு 15 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்.-நடிகை அசின்

இந்த இரண்டு செய்திகளை நாம் ஆராயும் போது உள்ளுக்குள் ஏதோ ஒரு  மர்மம் ஒழிந்துள்ளதாகத் தான் தெரிகிறது. அதாவது அசினின் அந்தரங்கள் அனைத்தும் என் மகனுக்குத் தெரியும்,பணம் பொருள் வேண்டாம் என முத்துக்குமாரின் அம்மா குறிப்பிட்டுள்ளார். அதே போல முத்துக்குமார் 15 லட்சம் கேட்டு தன்னை மிரட்டுவதாக அசின் தெரிவித்துள்ளார்.

நல்ல நிலையில் மகிழ்சியாக இருந்த நபர் திடீரென தன்னை கொடுமை செய்வதாக கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது.அதேபோல அசின் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது திடீரென பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் அசினின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த முத்துக்குமார் ஒருவேளை அசின் முக்கியமாக சம்மந்தப்பட்ட‌ அந்தரங்கமான வீடியோ படங்கள் அல்லது போட்டோக்களை அசினுக்குத்தெரியாமல் எடுத்து அதை வைத்து அசினிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம். இதனால் மிரண்டு போன அசின் அல்லது அவரின் தந்தை ஒரு வேளை கூலிப்படையை நாடியிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் முக்கியமாக இந்த முறை இந்த பிரச்சிணை அசின் புற‌த்திலிருந்து எழுந்திருக்க வாய்ப்பேயில்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. நம்ம திகில் மன்னன் ராஜேஸ்குமார் நாவ‌ல்களில் வருவது போல யார் தவறு செய்திருந்தாலும் நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

ஆகமொத்தம் என்ன நடந்திருந்தாலும் ஏழைக்கு அங்கே நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை. சட்டம் ஒரு இருட்டறை, அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார்.

அடுத்துவருவது: ஞாயிறு அதிரடி "விஜய்க்கு சில வில்லங்க யோசனைகள்" படிக்கத்தவறாதீர்கள்

5 கருத்துகள்:

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//ஆகமொத்தம் என்ன நடந்திருந்தாலும் ஏழைக்கு அங்கே நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை.//

பன்ச்சு சூப்பருங்கோ !!!

சம்பத் சொன்னது…

///நம்ம திகில் மன்னன் ராஜேஸ்குமார் நாவ‌ல்களில் வருவது போல யார் தவறு செய்திருந்தாலும் நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.//

நாங்களும் நம்ம ராஜேஷ் குமார் ரசிகர்தான்...அவரது எல்லா கதைகளிலும் எந்தவது கருத்து ஒளிந்திருக்கும்...

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// அருப்புக்கோட்டை பாஸ்கர் கூறியது...
//ஆகமொத்தம் என்ன நடந்திருந்தாலும் ஏழைக்கு அங்கே நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை.//

பன்ச்சு சூப்பருங்கோ !!!//

நன்றிண்ணே! அண்ணே நைட்டு படுக்கும் போது கண்ணாடிய கழட்டிட்டு படுங்க, இல்லாட்டி கணவுல வர்ற பிகர் எல்லாம் கருப்பாத்தான் தெரியும்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// சம்பத் கூறியது...
///நம்ம திகில் மன்னன் ராஜேஸ்குமார் நாவ‌ல்களில் வருவது போல யார் தவறு செய்திருந்தாலும் நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.//

நாங்களும் நம்ம ராஜேஷ் குமார் ரசிகர்தான்...அவரது எல்லா கதைகளிலும் எந்தவது கருத்து ஒளிந்திருக்கும்...//

ராஜேஸ்குமார் : வெளியே தெரியாத ஒரு சரித்திரம். நிச்சயம் ராஜேஸ்குமாரின் நாவலகளைப் படிக்கும் ரசிகர்கள் நியாயவான்களாக,மதவெறியைத் தாண்டிய மனிதநேயர்களாக இருப்பார்கள் என்பது என் கருத்து.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்! அது என்ன "கிரைம் நாவல்" ல இருக்கிற கிக் மற்ற நாவல்களின் இல்லையே. அதுக்கு யார் காரணம்? அசோகன் என்ற இணைப்பா?

சம்பத் சொன்னது…

தாங்கள் கூறுவது மிகச்சரி கபாலி அவர்களே...அவரது கதைகள் மிகவும் ரசிக்ககூடியதாக இருக்கும்...