செவ்வாய், 24 மார்ச், 2009

பேரம் படிந்தது,வேலை முடிந்தது‍‍ -C.I.D சிங்காரம்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று கலைஞரைத்தாக்கி கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளெல்லாம் இலங்கையினவாதப் போரை எதிர்த்துக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், “நாங்கள் செய்ததெல்லாம் செய்துவிட்டோம் இனி இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கை தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், அதன் முதல்வர் தலைவர் கலைஞரும் கைகழுவி விட்டனர் என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை டெல்லியில்தான் இருந்தது. இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் தொடர்ந்திருக்கிறார்.

சாதரண நாட்களில் பார்க்கும் அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் நேர அரசியல் வியாதிகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஒருவன் தேர்தல் நேரத்தில் தும்மினாலே அது அவனின் ஓட்டு நாடகம் என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.  நம்முடைய கேள்வி பாம்பும் சாகக்கூடாது,கொம்பும் ஒடியக்கூடாது என்ற பாணியில் ஈழத்தமிழர்களின் வேதனையை சாதனையாக மாற்றிக்கொண்டு இலாபம் சம்பாதிக்கும் தமிழினத் தலைவர்களை,தமிழினக் காவலர்களை தமிழகம் தவிர வேறு எங்குமே நாம் காணமுடியாது.

அய்யா தமிழ்குடிதாங்கி அவர்களே,அது இலாபமோ, நஷ்ட‌மோ கலைஞராவது இந்தா அந்தா என கடிதம் எழுதி,அறிக்கை விட்டு,பந்த் நடத்தி (கலைஞருக்கு பந்த் என்றாலே திருநெல்வேலி அல்வாவ திகட்டாம‌ சாப்பிடுவது மாதிரி) ஏதேதோ செய்துபார்த்தார். இப்போது எலக்சன் வந்து வந்துவிட்டதால் ஒக்கணேக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம்,சேது ச‌முத்திர திட்டம் ஆகிய வெயிட்டிங் லிஸ்டில் ஈழத்தமிழர்களையும் சேர்த்துவிட்டார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏதுமில்லை. இத்தனை நாள் காங்கிரஸுடன் அதாவது திமுகவுடம் கூட்டனி சேரலாம் என்ற ஐடியா உங்களுக்கு இருந்தது.ஆனால் இப்போது அதிமுகவுடன் சேர்ந்துவிடுவதற்கான காலம் கணிந்துவிட்டதால், அல்லது  அங்கு உங்களின் பேரம் படிந்துவிட்டதால்  ஈழத்தமிழர்கள் உங்கள் கண்களுக்குள் மின்னலடிக்கிறார்கள்.. இதே நீங்கள் காங்கிரசுடன் கூட்டனி சேர்ந்திருக்கும் பட்சத்தில் உங்களிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்திருக்காது. நீங்களெல்லாம் தமிழைக் காப்பாற்றுகிறேன் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு சம்பாதிக்கும் ஓர் தமிழ் வியாபாரி என்பது தான் அரசியல் ஆர்வலர்களின் கருத்து.

அய்யா!  எனக்கொரு சந்தேகம் மக்கள் தொலைக்காட்சியில் தொலைபேசியில் பேசுபவர்கள் “மக்கள் வணக்கம் என கூறவேண்டும் என்பது சிறந்த திட்டம் தான். ஆனால்  உங்கள் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு தொடர்புகொண்டால் அவர்கள் “ஹலோ என்கிறார்கள்,கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்கிறார்கள்.

காரணம் என்ன‌ ? அது காட்சிஊடகம் வெளியே தெரியும், இது அலுவலகம் வெளியே தெரியாது என்பதாலா? தமிழக மக்கள் எப்போதும் ஒரேபோல இருக்கமாட்டார்கள் அய்யா கவணம்.

-C.I.D சிங்காரம்

23 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

நண்பரே என்ன ஒரு வேகம்? என்ன ஒரு வேகம்? உங்க பதிவை சொல்லவில்லை நண்பரே.... நம்ம தமிழ் குடி தாங்கி, தமிழ் மக்கள் நலன் மேல் காட்டும் அக்கறை வேகத்தை சொன்னேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

துண்டு போட்டுட்டுத்தான் அப்புறமா மத்ததெல்லாம்:)

ஐயோ!நைனா முந்திகிட்டாரே!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அவரு இந்த தேர்தல்ல திமுக கூட்டணியில இருந்தாதான் ஆச்சரியப்படனும். இப்ப அவரு பேசியிருக்கதுக்கெல்லாம் ஆச்சரியப்படவே கூடாது.

Vee சொன்னது…

Allegedly his son Anbumani has deposited Rs 20000 crores (4 billion dollars) in swiss bank. This is the true face of these hypocrites.

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!
பதில் எழுதும் போது கண்ணாடி மேல் இருக்கும் காண்டை காண்பிக்க வேண்டாம் !
அன்புடன்,
பாஸ்கர் .

குடுகுடுப்பை சொன்னது…

குடிதாங்கி வாழ்வாங்கு வாழ்க.

ttpian சொன்னது…

டாக்டர் ஊசி போடுவார்!
மருந்து கொடுப்பார்
நோயாளி பிழைக்கமாட்டான்!
டாக்டர் காசு பார்ப்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//நையாண்டி நைனா கூறியது...
நண்பரே என்ன ஒரு வேகம்? என்ன ஒரு வேகம்? உங்க பதிவை சொல்லவில்லை நண்பரே.... நம்ம தமிழ் குடி தாங்கி, தமிழ் மக்கள் நலன் மேல் காட்டும் அக்கறை வேகத்தை சொன்னேன்//

நைனா உனக்கு இங்க உள்ள போத பத்தாம நம்ம பிராஞ்சி கடைக்கிம் போயி அட்சிட்டு வந்துக்கீற.அங்க உள்ளது பழைய சரக்கு மாமே.,புத்சா வர்ற பார்ட்டிங்க அங்கயும் போயி பழய சரக்க அடிக்கலாம்.,தேங்ஸ்பா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//ராஜ நடராஜன் கூறியது...
துண்டு போட்டுட்டுத்தான் அப்புறமா மத்ததெல்லாம்:)

ஐயோ!நைனா முந்திகிட்டாரே!//

அண்த்தே அட்த்த தபா கரீக்கிட்டா துண்டு போடுங்க சாமே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் கூறியது...
அவரு இந்த தேர்தல்ல திமுக கூட்டணியில இருந்தாதான் ஆச்சரியப்படனும். இப்ப அவரு பேசியிருக்கதுக்கெல்லாம் ஆச்சரியப்படவே கூடாது.//

ஆமாண்ணே!ஆமாண்ணே! நாம இந்த எலக்சனுல அவருக்கு ஒரு பாடத்த காட்டனும்னே

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Vee கூறியது...
Allegedly his son Anbumani has deposited Rs 20000 crores (4 billion dollars) in swiss bank. This is the true face of these hypocrites.//

அரசியல்ல இதெல்லாம் சகஜமுன்னே! ஒரு நிமிசம்,இருங்க என் பாக்கெட்ட செக் பண்றேன்.ஆகா 3 ரூவா தான் இருக்கு.கொய்யால ஒரு டீ 4 ரூவாயில.

பெயரில்லா சொன்னது…

"Kaatchi oodakathukka" kooda thmilai valrkkatha SUN TV ponravatrai naam
valarthu vitu irukirom enbadhaiyum thangal unara vendum.
-krish

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// அருப்புக்கோட்டை பாஸ்கர் கூறியது...
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!
பதில் எழுதும் போது கண்ணாடி மேல் இருக்கும் காண்டை காண்பிக்க வேண்டாம் !
அன்புடன்,
பாஸ்கர் .//

ஆமாண்ணே!ஆமாண்ணே! ஆனா ஒன்னுன்னே கலைஞருக்கு அப்பறம் கண்ணாடி ஒங்களுக்குத்தான் கரெக்டா பொருந்தியிருக்கு.ஹி.,ஹி., இது காண்டு இல்லண்ணே! உண்மை தான்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//குடுகுடுப்பை கூறியது...
குடிதாங்கி வாழ்வாங்கு வாழ்க.//

அண்ணே குடுகுடுப்பை அண்ணே! அவரு இப்ப குடிதாங்கி இல்ல "கோடி" தாங்கி

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// ttpian கூறியது...
டாக்டர் ஊசி போடுவார்!
மருந்து கொடுப்பார்
நோயாளி பிழைக்கமாட்டான்!
டாக்டர் காசு பார்ப்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

அண்ணே! அது ஏன் இர்ர இந்த அழுத்து அழுத்திருய? உங்களுக்கு காண்டு இருந்தா மக்கள் தொலைக்காட்சிக்கு ஒரு போன போட்டு ஒரு நல்ல சாங் போடச்சொல்லுங்க.இது தான் பெரிய நோஸ்கட் அவ்களுக்கு

Karthikeyan G சொன்னது…

கபாலி்ணே, இந்தியா வல்லரசாகுமா?
:)

கரிகாலன் சொன்னது…

அன்பான தமிழின உறவுகளே!
வலைப்பதிவர்களே!

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தையும் அது தொடர்பான பதிவுகளையும் நையாண்டி செய்வதற்காக யாரும் பயன்படுத்தவேண்டாம்.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும்.

ஒரு தமிழராகிய நாம் தமிழீழ மக்களுக்க என்ன செய்யப் போகிறோம்... என்ன செய்துகொண்டிருக்கிறோம்... என்பதே முக்கியம்...

நம் வீட்டு முற்றத்தில் பிணங்களை அடுக்கி வைத்துக்கொண்டு யாரும் கும்மி அடிக்க வேண்டாம்... உருப்படியாக உங்களால் முடிந்ததை செய்யுங்கள்...

பெயரில்லா சொன்னது…

ஐயா வும் அவர் ஜாதி மக்களும் பிழைத்தால் போதும் ... இதற்க்கு தான் இந்த நாடகம் எல்லாம்

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//கலைஞருக்கு அப்பறம் கண்ணாடி ஒங்களுக்குத்தான் கரெக்டா பொருந்தியிருக்கு.//

இதுக்கு என்னை நிக்க வைச்சு நாலு அப்பு அப்பியிருக்காலாம் !

என்னை மிகவும் கன்னாபின்னாவென்று திட்டியதாக உணர்கிறேன் .
இப்படியெல்லாம் சொன்னால் ,
இனிமேல் உங்கள் பதிவில் பின்னூட்டமே இடமாட்டேன் .
அன்புடன்,
பாஸ்கர்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G கூறியது...
கபாலி்ணே, இந்தியா வல்லரசாகுமா?//

தம்பி கார்த்திகேயன் உங்க கேள்விக்கான‌ பதில "காபாலியாண்ட கேளுங்க" பகுதியில் பார்க்கவும்.கேளுங்க,கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க. நன்றி

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// கரிகாலன் கூறியது...
அன்பான தமிழின உறவுகளே!
வலைப்பதிவர்களே!

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தையும் அது தொடர்பான பதிவுகளையும் நையாண்டி செய்வதற்காக யாரும் பயன்படுத்தவேண்டாம்.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும்.//

அன்பரே கரிகாலன்! என் பதிவில் ஈழத்தமிழர்களை கேலி செய்தோ,அவர்களின் நிலையை கிண்டல் செய்தோ எழுதுவதுமில்லை,எழுதியதுமில்லை. அவர்களின் பட்டிணியை,பரிதாபத்தை வைத்து பிழைப்பு நடத்தி தன் கட்சியை வளர்க்கும் வியாபாரிகளை மட்டுமே சாடுகிறேன். என் தமிழினம் காக்கபட வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது.

//ஒரு தமிழராகிய நாம் தமிழீழ மக்களுக்க என்ன செய்யப் போகிறோம்... என்ன செய்துகொண்டிருக்கிறோம்... என்பதே முக்கியம்...

நம் வீட்டு முற்றத்தில் பிணங்களை அடுக்கி வைத்துக்கொண்டு யாரும் கும்மி அடிக்க வேண்டாம்... உருப்படியாக உங்களால் முடிந்ததை செய்யுங்கள்...//

தமிழீழ மக்களுக்காகவும் தானே ஒலிக்கிறது குரல். பிணங்களைக் காட்டி பதிவை வளர்க்கும் ஈனச்செயலை நான் செய்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் சுட்டிக்காட்டுங்கள்,அது உண்மையெனும் பட்சத்தில் தவிர்த்துக் கொள்கிறேன்.வருகைக்கு நன்றி.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//பெயரில்லா கூறியது...
ஐயா வும் அவர் ஜாதி மக்களும் பிழைத்தால் போதும் ... இதற்க்கு தான் இந்த நாடகம் எல்லாம்//

அய்யாவை மட்டுமே வையுங்கள்(திட்டுங்கள்).அவர்களின் ஜாதி என்ன செய்தது.
ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஒன்னு ஓட்டுக் கேட்டு ஏமாத்துறவன்,
இன்னொன்னு ஓட்டுப் போட்டு ஏமாறுறவன்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//அருப்புக்கோட்டை பாஸ்கர் கூறியது...
//கலைஞருக்கு அப்பறம் கண்ணாடி ஒங்களுக்குத்தான் கரெக்டா பொருந்தியிருக்கு.//

இதுக்கு என்னை நிக்க வைச்சு நாலு அப்பு அப்பியிருக்காலாம் !

என்னை மிகவும் கன்னாபின்னாவென்று திட்டியதாக உணர்கிறேன் .
இப்படியெல்லாம் சொன்னால் ,
இனிமேல் உங்கள் பதிவில் பின்னூட்டமே இடமாட்டேன் .
அன்புடன்,
பாஸ்கர்//

அண்ணே! சாரிண்ணே, நம்ம கடையில் யாரும் கோவப் படக்கூடாது.என் சிறந்த கஷ்டமர்களை இழக்க நான் தயாரில்லை.பதிய மாட்டேன்னு சொல்லாதிய. நீங்க தொடர்ந்து வரனும்.இனிமே நான் ****** பத்தி மறந்துடுறேன்.