புதன், 1 ஏப்ரல், 2009

புரட்சித்தலைவர் வீட்டில் புகுந்த கருநாகங்கள்

தமிழகத்தின் புதிய எதிர்பார்ப்பாக புயலென கிளம்பியுள்ள புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரத்தில் பேசும்போது கலைஞரையும்,அம்மாவையும் ஒரு பிடிபிடித்து விட்டார்.

 அவர் பேசுகையில்

தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துவது எவ்வளவு கஷ்டம். அதிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என தெரியுமா?கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா,எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும்ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர்.

என்னதான் விஜயகாந்த் கரடியாக கத்தினாலும் ஓட்டை தங்களுக்குத்தான் போடுவார்கள் என நினைக்கின்றனர். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். நல்ல கட்சிகளை இந்த நாட்டுக்கு அடையாளம் காட்டுங்கள்.பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 40 நாட்களே உள்ளன. ஒரு நாளுக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் நான் பிரசாரம் செய்து வருகிறேன்.தற்போது அதையும் மாற்ற திட்டமிட்டுள்ளேன். மதியம் 3 மணியில் இருந்தே எனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். எதிரணியில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றார்.

திருப்புவனத்தில் விஜயகாந்த் பேசுகையில்எனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். அவர் கண்டிப்பாக உங்களுக்கு நன்மை செய்வார். அவர் எதுவும் செய்யவில்லை என்றால்அவரை அடியுங்கள் என்று பேசி பிரசாரத்தில் புயலைக் கிளப்பிவிட்டார்.

இப்புடித்தான் முன்னாடி நம்ம மருத்துவர் அய்யாவும் சொன்னாரு,எங்க கட்சியில யாராவது தப்பு பண்ணினா சாட்டையை எடுத்து சந்தியில் நிற்கவச்சி அடியுங்கள் என்று,ஆனா இப்ப நம்ம தமிழ்குடிதாங்கி அய்யா செய்கிற செயல்களுக்கு கையில நாம சாட்டய  எடுத்தம்னா சன் நியூஸ் தொலைக்காட்சி மாதிரி  24 X7 முழுவதும் கண்டினுவா விளாச வேண்டியது தான்.,, 

இந்த நிலையில் NDTV நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் விஜயகாந்தின் எழுச்சியால் அதிமுகவை விட திமுகவிற்கே பலத்த நஷ்டம் எனத்தெரிவித்துள்ளது.அதாவது திமுகவின் 10 சதவிகித ஓட்டுகளை சத்தமே இல்லாமல் விஜயகாந்த் பிரித்துவிடுவார் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

atheppadi dmk vote piriyum ? puriyalaiye....