சனி, 25 ஏப்ரல், 2009

தளுக்கு நடைப்பேச்சு தந்திரக்காரர்கள்

மிகவெற்றிகரமாக ஒரு முழு அடைப்பை நடத்தி முடித்துள்ள தலைவர் கலைஞர் கொஞ்சமும் ஓய்வின்றி அடுத்த மக்கள் தொண்டினை அதாவது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதும் வேலையை மறுபடியும் வெற்றிகரமாக செய்துள்ளார். மதிய நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி கலைஞரை பொளந்து கட்டும் செல்வி.ஜெயலலிதாவின் பிரச்சார யுக்தியினைக் கண்டு ஆடிப்போயிருக்கும் கலைஞர் குளிர்ஜூரத்தில் முனகும் நோயாளி போல தினம்தினம் ஏதாவது ஒரு கடிதம் அல்லது அறிக்கை என வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்

கலைஞரின் "கடி"தத்துக்காக மட்டுமே வெளியாகிக்கொண்டிருக்கும் முரசொலி அவர் தவறி வைத்த ஒரு புள்ளியைக் கூட விடாமல் பிரிண்ட் செய்கிறது. காலையில் ஓசியாகக் கிடைக்கும் ஒரு டீ,வடைக்காக சில உடன்பிறப்புகள் மெனக்கெட்டு திமுக மாவட்ட,ஒன்றிய காரியாலயங்களுக்குச் சென்று கலைஞரின் கடிதத்தை படிக்கும் ரிஸ்க்கினை மேற்கொள்கிறார்கள். இன்னும் சில மாவட்டச் செயலாளர்கள் கலைஞரின் கடிதத்தை படிப்பதற்கென்றே சில அப்பாவி உடன்பிறப்புகளை நியமித்து அவர்களின் அன்றைய "கட்டிங்" செலவை கவனித்துக் கொள்கிறார்கள்

மற்றபடி மற்ற பத்திரிக்கைகள் இரவு 12 மணிவரை வெயிட் பண்ணுவார்கள். செய்திகள் ஏதும் கிடைக்காவிட்டால் வெற்றுப் பக்கங்களை நிரப்புவதற்காக தினமும் இருக்கவே இருக்கிறது கலைஞரின் கடிதம்.பல நேரங்களில் மொக்கையாக இருந்தாலும் சில நேரங்களில் ரசிக்கும்படி இருக்கும் கலைஞரின் கடிதம். மற்ற பத்திரிக்கைகள் கலைஞரின் கடித்தத்தை எடிட் செய்ய மாட்டார்கள். ஆனால் நம்ம தளத்தில் மட்டும் தான் கலைஞரின் கடிதத்தை எடிட் செய்து வெளியிடும் ஸ்பெசல் சாஃப்ட்வேர் இருக்கிறது.அந்த வகையில் நம்ம தளத்திற்கும் வேறு செய்தி இல்லாததால் கலைஞரின் கீழ்கண்ட மொக்கை அறிக்கையை போட வேண்டியதாகின்றது

தயவுசெய்து நமது கஸ்டமர்கள் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல்  அந்த கடிதத்தைப் படிக்குமாறு வேண்டுகிறேன். 

(இதற்கு மேல் இம்சை ஆரம்பம்)

2001 மற்றும் 2004ம் ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று காரசாரமாக குறிப்பிட்டிருந்த அதிமுக தலைவி ஜெயா தன்னுடைய தேர்தல்கூட்டங்களில் சேது சமுத்திர திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கடலோர சுற்றுச்சூழல் மோசமாகும் என்றும் கூறி இத்திட்டத்தை எதிர்ப்பதாக கூறி வருகிறார்

இத்தேர்தலில் அவரது கூட்டணி வெற்றி பெற்றால் சேது சமுத்திர திட்டத்தை அதிமுக ரத்து செய்யும் என்றும் அறிவித்திருக்கிறார்

இதற்கான விளக்கம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெயா இதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பப் பேசி வருகிறார்

சமுத்திர கால்வாய் திட்டத்தின்கீழ், பின்வரும் வசதிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி

-ரூ. 40 கோடி மதிப்பீட்டில் ராமேசுவரத்தில் பல்நோக்கு துறைமுக வசதியை ஏற்படுத்துதல்

 -ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மூக்கையூர், தொண்டி, சேதுபவாசத்திரம் மற்றும் முத்துப்பேட்டையில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் ஏற்படுத்துவதற்கு நிதி உதவி அளித்தல்

- ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மீனவ மக்கள் தொகை அதிகமாக உள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ரூ. 5 லட்சம் வீதம் சமூக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்

- ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மாவட்டங்களில் கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டம் கைத்தொழில் மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் அளித்தல் 

மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மற்றும் உதவிகள் மூலமாக கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உறுதி செய்யப்பட்டது

ஆனால் ஜெயா ஊருக்கு ஊர் சென்று மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று உண்மைக்கு மாறாக பிரசாரம் செய்து வருகிறார். இதனை மீனவர்களுக்கு நினைவு படுத்த வேண்டிய கடமையை அந்த சமுதாய நண்பர்களே செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சேது திட்டத்தினால் வளமான வாழ்வு பெறப்போகும் தமிழகத்தையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்ற தளுக்கு நடைப்பேச்சு நடத்தும் தந்திரக்காரர்களை தமிழ்ச் சாதியே; அடையாளம் கண்டு கொள்க என்று கூறியுள்ளார் கருணாநிதி. 

தலைவரே! மேற்கண்ட மீனவர்கள் நலனில் ஒன்னு விடுபட்டுப் போச்சி: சமீபத்தில் இலங்கை ராணுவத்தால் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட மீனவர்களை நீண்ட நாட்களுக்குப் பின் மீட்டு அவர்களை விமானம் வழியாக அழைத்து வந்தது தமிழக மீன்வளத்துறை. இது முடிந்து ஒரு வாரத்திற்குள் அந்த ஏழை மீனவர்களுக்கு நீங்கள் ஏறிவந்த விமானத்தின் கட்டணம் ரூ 7006 உடணடியாக செலுத்தாவிட்டால் உங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று ஒரு நோட்டீஸ் விட்டீர்களே! அத மறந்துட்டீங்களே தலைவரே! 

மிக்க நன்றி: " உருப்புடாதது_அணிமா "

7 கருத்துகள்:

Raju சொன்னது…

முதலில் இதை இங்கே சொல்வதறகு மன்னிக்கவும் நண்பா...!
அந்த "கலைஞரின் வாக்குறுதிகள்" என்ற பதிவானது எனக்கு என் நண்பன் மின்னஞ்சலில் அனுப்பியது..!
நான் அதைப் படித்து சிரித்ததால், மக்களும் சிரிக்கட்டுமே என்றுதான் நான் அதை பதிவு செய்தேன்..!
நான் அதை அந்த பதிவின் கீழயே குறிப்பு மூலம் அதை கூறியும் இருந்தேன்.. நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்..!ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னடிதான் "உருப்படாதது அனிமா" என்ற பதிவர் மூலம் அது தங்களுடைய படைப்பு என்று தெரிந்தது.!சிரமத்திற்கு மன்னிக்கவும்...!அந்த பதிவை அழித்து விட்டேன்..!
மீண்டும் ஒருமுறை இந்த பின்னூட்டத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சகா...!

பெயரில்லா சொன்னது…

இனிமேல் இது போன்ற தவ்றுகள் நடக்காது நண்பா...!

டக்ளஸ்..

டாஸ்மாக் கபாலி சொன்னது…

சே! என்னங்க டக்லஸ்...,,மன்னிப்பெல்லாம் வேண்டாம். ஏன் அந்த பதிவை அழித்தீர்கள். ஒன்று கவனித்தீர்களா? நான் கூட வெறும் 5 பின்னூட்டம் தான் வாங்கியிருந்தேன். ஆனால் நீங்கள் என்னை விட அதிகமாகவே பெற்றிருந்தீர்கள். நீங்கள் அனிமாவின் கருத்துக்கு பதில் சொல்லாத காரணத்தால் தான் நான் இப்படி செய்தேன். மன்னிக்கவும். நானும் அதை நீக்கிவிட்டேன்

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

ஆஹா நான் ஏதோ சொல்ல போய், ..

நான் தான் உங்க ரெண்டு பேர்கிட்டயிம் மன்னிப்பு கேக்கோனும்..


ஜாரி..

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Raju சொன்னது…

\\சே! என்னங்க டக்லஸ்...,,மன்னிப்பெல்லாம் வேண்டாம்.\\

இப்பௌடி சொல்றது உங்க பெருந்தன்மை..ஆனால் நான் செய்த தவறுக்கு கேட்டிதான் ஆகவேண்டும் நண்பா..!

\\ஏன் அந்த பதிவை அழித்தீர்கள். ஒன்று கவனித்தீர்களா? நான் கூட வெறும் 5 பின்னூட்டம் தான் வாங்கியிருந்தேன். ஆனால் நீங்கள் என்னை விட அதிகமாகவே பெற்றிருந்தீர்கள்.\\

உண்மைதான்..ஆனால் அதற்காக நான் சொந்தம் கொண்டாட முடியாது சகா..அந்த பாராட்டுகளுக்கெல்லாம் முழுமுதற்காரணமே நீங்களதான்.

\\நீங்கள் அனிமாவின் கருத்துக்கு பதில் சொல்லாத காரணத்தால் தான் நான் இப்படி செய்தேன். மன்னிக்கவும். நானும் அதை நீக்கிவிட்டேன்\\

நான் வழக்கமாக, எனக்கு வாரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வேன்..!கலைஞரைப் போல் நான் தற்போது
இடையறாது உழைத்து வருவதால் தான் சமீபகாலமாக பதில் சொல்லவில்லை.ஆனால் நான் அனிமா அவர்களின்
பின்னூட்டத்தைப் பார்த்தேன்..!

அதை அழித்ததற்கு நண்பா..!

Raju சொன்னது…

\\ஆஹா நான் ஏதோ சொல்ல போய், ..
நான் தான் உங்க ரெண்டு பேர்கிட்டயிம் மன்னிப்பு கேக்கோனும்..
ஜாரி..\\

என் உச்சந்தலையில் நச்சென ஆணி அடித்ததற்கு மிக்க நன்றி நண்பரே...!
ஆணியடிப்பு தொடரட்டும்...!
எங்க ஊருல "ஜாரி" க்கு வேற அர்த்தமாக்கும்..!