அரசியலில் தளபதி என்று சொன்னால் அது அண்ணன் ஸ்டாலினைத் தான் குறிக்கும் அதுபோல சினிமாவில் இளைய தளபதி என்று சொன்னால் அது விஜய்யைக் குறிக்கும். ஆனால் சினிமாவுக்கும் அரசியலுக்கும் சேர்த்து ஒருவரைக் குறிப்பிட்டால் அது வாழும் வள்ளல் அண்ணன் J.K ரித்தீஸ் அவர்களைத் தான் குறிக்கும்.
மிகமிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியடைவார் என அவர் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் அந்த அளவிற்கு பிரம்மாண்டமான வளர்ச்சி இது. முன்பு தொழிலதிபராக இருந்த அண்ணன் ரித்தீஸ் (அடடடா இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்கலடா.,,புண்ணாக்கு விக்கிறவன் பொடலங்கா விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்னு சொல்றாய்ங்கே) தான் எப்படியாவது முன்னேற வேண்டும் அல்லது புகழ்பெற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு சிந்தித்ததன் விளைவு தான் ஆஸ்கார் அவார்டுக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப் பட்ட கானல் நீர் என்ற திரைப்படம். இந்தப் படத்தை வெற்றிகரமாக ஓட்ட (?) வேண்டும் என்பதற்காக ரசிகர்களுக்கு தலைக்கு ரூ.100, பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்து மதுரை, ராமநாதபுரம் பகுதி திரையரங்குகளை கிடுகிடுக்க வைத்தார்.
பிரியாணியை தின்று விட்டு நூறு ரூபாய்க்காக தியேட்டருக்குச் சென்று 3 மணி நேர இம்சையை பொருத்துக்கொண்டார்கள் ரசிகர்கள். ஆனால் அதிலும் சில பேர் 100 ரூபாயை திருப்பிப் பிடுங்கிக் கொண்டாலும் பரவாயில்லை என படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே தங்கள் செல்போன்களை காதிலே வைத்தபடி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர் .
பிரியாணி புராஜக்ட் வேலைகாமல் போகவே அடுத்த படமான நாயகனுக்கு அவர் போட்ட புராஜக்ட் ஆட்டோ,பிளக்ஸ் விளம்பரம். 150 ரூபாய் மாதம் என வாடகை பேசி ஆட்டோக்கள் பின்னாடி தன் படத்தை ஒட்டி என்னவோ அனைத்து ஆட்டோக்காரர்களும் ரித்தீஸின் ரசிகர்கள் என்ற மாயையை ஏற்படுத்தினார். நாயகன் படமும் மிக நன்றாகவே ஓடியது, தியேட்டரை விட்டுத்தான். இந்த நிலையில் இனிமேல் படமெடுத்தால் கதைக்காவாது என முடிவு செய்து அரசியலில் குதிக்கத்திட்டம் போட்டார். அதற்கு அவரது தாத்தா சூனா.பானா.தங்கவேலனின் பேரன் என்ற களம் நன்றாகவே வேலை செய்தது. இராமநாதபுரத்தில் திமுகவின் வார்டு பிரதிநிதியாக இருந்த தளபதி என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை திடீரென தலைமையால் நாடளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப் பட்டுவிட்டார்.திமுகவில் வார்டு பிரதிநிதியாக இருக்கும் யாருக்குமே இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்தது இல்லை.
சாதரணமாகவே போஸ்டர் ஒட்டி பொங்க வைத்துவிடும் வீரத்தளபதியின் ஜால்ராக்கள் "தல" எலக்சனில் நிற்கிறார் என்றால் கேட்கவா வேண்டும். ஊர் ஊருக்கு இவர்கள் கொடுக்கும் அளப்பறை தாங்கவில்லையாம். சாரட் வண்டியிலே வலம் வரும் தளபதி ஆரத்தி தட்டுக்களில் காந்தி பெரிதாகச் சிரிக்கும் அந்த நோட்டைப்போட்டு விட்டு தன் அக்மார்க் சிரிப்பை உதிர்க்கிறாராம். ரித்தீஸுக்கு ஆரத்தி எடுக்க போட்டி போட்டுக்கொண்டு கூட்டங்கள் முன்டியடிக்கின்றனவாம். தொகுதி சீரமைப்பின் மூலம் திருவுக்கரசரின் ஆதரவுத் தொகுதிகள் சிலவும் இப்போது இராமநாதபுரத்தோடு இணைந்துள்ளது தெரிந்ததே! அந்தத் தொகுதிகளில் மிகவும் பரிச்சயமான திருநாவுக்கரசருக்குக் கூட இவ்வளவு கூட்டம் கூடவில்லையாம். ஆரத்தித் தட்டுகள் இல்லையாம்.
எத்தனையோ பேர் காத்திருக்க திடீரென்று வந்த ரித்தீஸுக்கு சீட்டை தூக்கிக் கொடுத்த தலைமை மீது அந்த ஏரியா திமுகவினர் மிகக் காண்டாகவே இருக்கிறார்களாம். ரித்தீஸுக்கு காரியாலயம் அமைத்து வேலை பார்த்தாலும் அவர்கள் ரித்தீஸுக்கு ஓட்டுப் போடுவார்களா அல்லது வேட்டு வைப்பார்களா என்பது இப்போது தெரியாது என்கிறார் அந்த ஏரியாவின் உடன்பிறப்பு ஒருவர்.
இந்த நிலையில் ஆரத்திக்கு பெரிய நோட்டு என்றில்லாமல் அவர் பிரச்சாரம் செய்யும் கிராமங்களுக்கெல்லாம் காலேஜ் கட்டித்தருவேன் பேக்டரி கட்டித்தருவேன் என அல்வா அயிட்டங்களாக அள்ளி விடுகிறாராம் வீரத்தளபதி. யாரைச்சொல்லி நோக என்றிருக்கும் இராமநாதபுர மக்கள் தான் பாவம்.
அதவிடக் கொடுமை இங்க போயி பாருங்க
உன்குத்தமா என்குத்தமா யார நானும் குத்தஞ்சொல்ல..,,
UPDATE TODAY:அதிசய உலகம் "பேருந்தா அல்லது அரண்மனையா?"
7 கருத்துகள்:
சாரட்டு வண்டில வந்தா நல்லது தான அண்ணே...நம்ம கழுதையை வாடகைக்கு விடலாம் :0))
//
அவர்கள் ரித்தீஸுக்கு ஓட்டுப் போடுவார்களா அல்லது வேட்டு வைப்பார்களா என்பது இப்போது தெரியாது என்கிறார் அந்த ஏரியாவின் உடன்பிறப்பு ஒருவர்.
//
அவங்க போட்டா என்ன போடாட்டி என்ன? அதெல்லாம் ஒடன்பொறப்புங்க சேத்து குத்திருவாங்க...
போய்ப்பார்த்தேன். யப்பா!!! தாங்க முடியல...
என்ன கொடும சரவணன் இது?????
எவன் வேணும்னாலும் வெப் சைட் ஆரம்பிக்கலாம்னா இப்படித்தான்...
ஐயா குருவி , குசேலன் , சத்யம் , போன்ற படங்களை விட நாயகன் நன்றாகவே ஓடியது
அண்ணன் வீரத்தளபதி, J.K.R. அவர்களின் ரசிகர் மன்றத்தின் 7627 வது கிளை சார்பில் இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
kathiri veyilai veda kodumiya irukku un vimarsanam kaluthai.
sankar
arun arts
cheyyar
Good fill someone in on and this post helped me alot in my college assignement. Thank you for your information.
கருத்துரையிடுக