ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

கணியச் சித்தர்கள் கைது

ஒரு சேதி சொல்லப்போறேன் உனக்கொரு சேதி சொல்லப் போறேன் என்று திங்கள் முதல் வெள்ளிவரை மக்கள் தொலைக்காட்சியில் கற்போம் கணிணி எனற நிகழ்சி வாயிலாக கணியப் பயிற்சியளித்து வந்த கணியத் தமிழ் சாப்ட்வேர் நிறுவண நிர்வாகிகளை கூண்டோடு அள்ளிக்கொண்டு வந்து குமிறிவிட்டது காவல்துறை. 

தேர்தல் நேரத்தில் தேர்தலினை சீர்குலைக்கும் பொருட்டும் மக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்புவது குறித்தும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியத் தலைவர்கள கடுமையாக தாக்கி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க அவர்களே காரணம் என்ற ரீதியில் தயாரித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து 1984 ம் ஆண்டு தமிழகத்தில் குடியேறிய கபிலன் மற்றும் கமலதாசன் ஆகியோர் தான் இந்த கணியத் தமிழ்சாப்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர்கள்.அங்கு திவாகரன் என்ற மதுரையைச் சேர்ந்த ஒருவரும் பணியாற்றி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக சென்னை கேகே நகர் அண்ணாஜி நகரில் செயல்பட்டு வந்த நிறுவணம் நிறைய தமிழ் எழுத்துரு சாப்ட்வேர்களைத் தாயாரித்து வந்தது குறிப்பிடத் தக்கது. 

பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் கற்போம் கண்ணி என்ற நிகழ்சியின் மூலம்  இந்த சாப்ட்வேர் நிறுவனம் கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. இந்த நிகழ்சி மூலம் மிக எளிமையாக அருமையாக கணிணி பயிற்சியை அளித்தனர். அதிலும் நிகழ்சிக்கு முன்பு வரும் கணிணி சித்தர்களின் "ஒரு சேதி சொல்லப் போறேன்" என்ற பாடல் மிகப் பிரபலம்.  

தடைசெய்யப் பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத் தலைவர்களை மிகக் கொச்சைப்படுத்தியும், ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டமும் துரோக வரலாறும், யாருக்கு வாக்களிப்போம், தமிழின துரோகிகள், சீமான் மனோகரா, புதிய பராசக்தி, மீண்டும் கண்ணகி  போன்ற பெயர்களில் குறுந்தகடுகள் தயார் செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் அவர்களை கையும் தகடுமாகப் பிடித்துவிட்டனர். இந்தக் குறுந்தகடுகளை மக்களிடம் வினியோகம் செய்து தேர்தலை சீர்குலைக்க சதி செய்ததாகவும், வன்முறையைத் தூண்ட சதிசெய்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரமாக இருப்பதால் இது ஒரு தேர்தல் விதிமுறை மீறல் என்ற கணக்கிலும், ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றி ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்த கணக்கிலும் இந்த நிறுவன நிர்வாகிகள் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

புழல் சிறைக்கு வந்தாச்சி இனி கவலை இல்ல அண்ணாச்சி 

8 கருத்துகள்:

ரங்குடு சொன்னது…

ஈழத்தமிழர்களின் நிலை கண்டு தமிழக மக்கள் வேதனைப் படுவது உண்மையே ஆனாலும், தமிழகத் தலைவர்களும், பிரதமரும் இதில் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

அதையே காரணமாகக் கொண்டு சில ஈழத்தமிழர்கள் தேர்தலையே திசை திருப்பும் வண்ணம் செயல் பட்டது வருந்தத்தக்கது.

இவர்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும், தமிழக மக்கள் தங்கள் இஷ்டப்படிதான் வாக்களிப்பார்கள். அதாவது, பணம், ஜாதி, சினிமா கவர்ச்சி, தற்போதைய அரசின் செயல் பாடுகள் இவற்றை வைத்துத்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும்.

இங்குள்ள தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை விட சிறிது பரவாயில்லை என்பதே உண்மை.

தேர்தல் முடிந்த பின், நமது தலைவர்களின் செயல் பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வர வாய்ப்பில்லை, வராது என்பது தான் உண்மை.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//ரங்குடு கூறியது...
//

ரொம்பக் கரெக்டா சொன்னீங்க சார். அருமையான கருத்துக்கள். நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

மக்கள் தொலைக்காட்சி விளம்பரதாரர்கள் என்பதால் கைது அரசியல் வாடை வீசுவதாக தெரிகிறதே?

தேர்தல் பார்வை தவிர்த்து அவர்கள் கணினித் துறைக்கும் மக்களுக்கும் இத்தனை வருடங்களில் நல்லதும் செய்திருக்கக் கூடும்.

பெயரில்லா சொன்னது…

'இறுதி யுத்தம்' இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது. அத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் செய்வதனையும் பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட காணொளி ஆகும். இதனை இங்கு காணலாம்!.

http://www.tamilsforobama.com/Final_War.html

Senthilkumar சொன்னது…

//ஈழத்தமிழர்களின் நிலை கண்டு தமிழக மக்கள் வேதனைப் படுவது உண்மையே ஆனாலும், தமிழகத் தலைவர்களும், பிரதமரும் இதில் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். //

Yes. Oru Italy pombala keta naata adagu vacha ipadi thaan.

Tech Shankar சொன்னது…

இத்தாலி - இந்தப் பேரைக்கேட்டாலே எனக்கு பிடிக்காமல் போயிருச்சு.

பெயரில்லா சொன்னது…

ரங்குடு சொன்னது , டாஸ்மாக் கபாலி வழி மொழிந்தது உண்மையானால் தமிழின துர்.. சாரி தலைவர் ஏன் இவர்களை கைது செய்ய வேண்டும்... எந்த மாற்றமும் வர போவது இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்.

தமிழன் எல்லோரும் எல்லாத்தையும் விட்டு கொடுப்பவன் அல்ல என்பதை உணர்த்த தான் 14 பெயர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். ஒரு சிலர் தன் மானமுள்ள ரோசம் உள்ளவனும் இருக்கான். காசுக்கு வேசிய அலைபவனும் இருக்கான்

Unknown சொன்னது…

கருணா(நிதி) என்றாலே துரோகம் என்றாகிவிட்டது.