திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி திமுக கூட்டணிக்கு கிடைத்தது. அதேபோன்ற மாபெரும் வெற்றியை இம்முறையும் திமுக கூட்டணிக்கு நீங்கள் வழங்கி ஆதரவு தரவேண்டும் என்று நடக்காத ஒரு காரியத்தைப் பற்றித் தெரிவித்தார்..
சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்‘ என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தோம்.இப்போது, ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கிறோம்.
உட்டாலக்கடி கிரிகிரி சைதாப்பேட்ட வடகறி! இன்னா சாரு பெரிய பெரிய கதயா உடுறீய. போன எலக்சனுல ஜெயிச்சிகினா T.R பாலு சாருக்கு கப்பல்,சாலைப் போக்குவரத்து மந்திரி பேரம் பேசி வாங்கிகினது பத்தியும் தயாநிதிமாறன் சாருக்கு தகவலு தொழிலு நுட்பம் அமைச்சரு பதவி வாங்கினது பத்தியும், முன்ன ஒருக்கா தன் சொந்த பிரச்சினக்கி சம்மந்தமே இல்லாம மருதய எரிச்சி பொதுச்சொத்த சேதப்படுத்த வழிகாட்டுன ஆத்தா கண்ணகி தாயி வழிவந்த வாரிசு மக்க மருதய மறுவாட்டியும் எரிச்சி கலவரமா இருந்த நேரத்துல நீங்க கவிஞர் கனிமொழிக்கு அம்மாக்கு நியமண உறுப்பினர் பதவி வாங்கிகினதையும் அதற்கு அடிகோலாக இருந்த சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை சொம்மா கெடக்குற அரசு சுற்றுலாத்தொறைக்கி கொடுக்காம பிரைவேட் கம்பெனியும் ஃபாரின் கண்ட்ரி உளவுப்பிரிவுல பல மோசடிக் குத்தம் சுமத்தப்பட்ட அண்ணன் ஜெகத்கஸ்பர் கூட்டணிக்கு வாய்ப்ப குடுத்து வளத்து வுட்டதும் தான் சொன்னதை செய்தலான்னு நான் கேக்கல தலீவரே! நம்ம தலீவரோட ஒடன்பிறப்புக தான் கேக்குறாக். இந்த நெலையில் நீங்க வெற்றிஅடெஞ்சா சொல்லாததையும் செய்வோம்னு சொல்லுறீக. எதுக்கும் நாங்க உசாராக்கீறது தான் நல்லது.
கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசும், இரண்டரை ஆண்டு காலத்தில் திமுக அரசும் வியத்தகு சாதனைகளை செய்திருக்கின்றன. இப்படி சாதனைகள் செய்ததால்தான் திமுக கூட்டணி, தேர்தலை தைரியமாக சந்திக்கிறது.
மெய்யாலுமே இது கரீக்கிட்டு தலீவரே!. மத்திய அரசு யாரு சொல்லியும் கேட்காம இந்தியாவை அமெரிக்கா'ண்ட அடகு வச்சிகினாங்கோ.அந்த நேரத்துல ஆட்சிய காப்பாத்திகிற சொல்லோ கட்டுக் கட்டா நோட்ட அடிச்சி மேட்டர முடிச்சிகினாங்கோ. BJP ஆளுங்களுக்கே மீட்டரப் போட்ட அமெரிக்காண்ட நாட்ட ஒப்படச்சி நாஸ்தி பண்ணிகினாங்கோ. பொருளாதார எறக்கம், பணவீக்கம்,பங்குசந்த வீழ்ச்சி அப்டின்னு நமக்கு புரியாத மேட்டரயா சொல்லி ரெண்டு ரூவா வித்துகினு இருந்த சிங்கிளு டீய இன்னிக்கி 4 ரூவா ஆக்கிப்புட்டாங்கோ
அதேபோல தமிழக மக்கள் பழசை மறந்துடக்கூடாங்கிறதுக்காக அய்யா ஆற்காட்டார் 18 ம் நூற்றாண்டிற்கு நம்மை தெனமும் அழச்சிகினு போயி சுத்திக்காட்டுனாரு. அந்தக் காலத்துல செல்லு போனு இல்ல, ரேடியா பொட்டி இல்லன்னும், காசிய ஒப்பிட சொல்லோ நம்ம தமிழ்நாடு எவ்ளோ தேவலன்னும் அறிக்கை உட்டாரு. அது மட்டுமில்லாம வரப்போற எலக்சனுல திமுக மண்ணக்கவ்வுனா அதுக்கு முழு காரணம் நான் தான்னு சொல்லிக்கினாரு. அம்மா ஆட்சியில கொண்டுகினு வந்த மழை நீர் சேகரிப்புத்திட்டத்தைப் போல மின்சாரம் சேகரிப்புத் திட்டம்னு கொண்டு வந்து மக்களின் பணத்தை மிச்சப்படுத்தினாரு. அத்தோட மட்டுமல்லாம இன்னமும் அவருதான் மிஞ்சாரத்தொறக்கி அமெச்சராக்கீறாரு. அரிசி விலை 1 ரூவாய். ஆனால் காய்கறி விலை 100 ரூவாய் என பொருளாதாரத்தை மேம்படுத்தினாங்க. இத்த விட பெரிய சாதனையை எந்த ஒரு மத்திய மாநில அரசாலும் செஞ்சிகிற முடியாதும்மே.
பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். இப்படிப்பட்ட ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்.
தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சரவையில் கடைசி வரை இருக்க செய்து, இப்போது மாற்று கட்சியுடன் கூட்டணி அமைத்து கொண்டு திமுக கூட்டணியை விமர்சிப்பது என்ன நியாயம்?
தலைவரே! அருமையான வரிகள் அதேபோல நம்ம கவிஞர் கணிமொழி அம்மாவையும் எலக்சனில போட்டியிடச் சொல்லி அப்பாலிக்கா M.P ஆக்கி அப்பாலிக்கா ல மந்திரி ஆக்குவியலான்னு வைத்தியரு கேட்டுப்புட்டாருன்னா என்ன செய்விய? கண்ணாடி ஊட்டுல இருந்துகினு கல்லு எரியக் கூடாது அண்ணே!
சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு ராமதாசும், வைகோவும் ஆதரவுதெரிவிக்கிறார்களா? இப்படி அறிக்கைவிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து கேட்பதற்கு முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சாடினார் ஸ்டாலின்.
தலைவரே! எலக்சன் நேரத்துல அதெல்லாம் கண்டுக்க கூடாது. ஏன், இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் அரசுடன் நீங்களும் அன்பு அண்ணன் பிரபல நடிகர் திருமாவும் கூட்டணி வச்சிகினுகீறீங்களே!! அது ஓக்கேன்னா இதுவும் ஓக்கே தான்.
3 கருத்துகள்:
சூப்பர் தலீவா...
நறுக்குனு நாலு வாரத்தங்குறது இதானா..
அண்ணே ! நம்ம நாட்டுலதான் படித்த முட்டாள்கள் அதிகம் ! இவர்களை திருத்துவது என்பது இயலாத காரியம். அழகிரிகளும், கனிமொழிகளும், அன்புமணிகளும், இவர்களுடைய மாமனும் மச்சானும்தான் நம்முடைய நாளைய முதல்வர்கள், அமைச்சர்கள், இதுதான் நம்முடைய விதி !
நல்லாயிருக்கு...
கருத்துரையிடுக