ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

இராமநாதபுரத்தில் கடையெட்டாவது வள்ளல்

கொஞ்ச நாட்களாக கோடம்பாக்கத்தைக் கலக்கிய தென்னாட்டுச் சிங்கம்,இராம்நாட்டுத் தங்கம்,வாழும் பாரி,ஆட்டோ நாயகன்,ஏழைகளின் தோழன் வீரத்தளபதி J.K ரித்தீஸ் அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் கோட்டையை ஆள இருக்கிறார். வீரத்தளபதி ரித்தீஸ் மிக குறுகிய நாட்களில் மிகப் பிரண்மாண்டமான நடிகராக வளர்ந்து விட்டார்.இவருக்கென்றே தனியாக ரசிகர்கள் (நாள் வாடகைக்கு) இருக்கிறார்கள். இவர்கள் வீரத்தளப‌தி ரித்தீஸ் என்றாலே போதும் மிக உற்சாகமாக வேலை செய்கிறார்கள்,காரணம் தினசரி பேட்டா கரெக்டாக கொடுப்பவர் நம்ம வீரத்தளபதியைத் தவிர வேறு யாருமே இல்லை. 

குறுகிய நாட்களில் பிரபலமடைந்த வீரத்தளபதியின் கட்‍‍‍ அவுட்டுகள் இல்லாத ஊர்களே இல்லை. சந்துகளுக்கு பிரபலமான சென்னை மாநகரில் நீங்கள் அடிக்கடி நின்றுகொன்டு மூச்சா போகும் இடங்களில் தலையை மெல்லத் தூக்கி மேலேபார்த்தால், மேல் புறத்தில் ஒரு கடையின் விளம்பரத்தில் கையில் துப்பாக்கியோடு காட்சித்தருவார் வீரத்தளபதி.அவர் போட்டோ ஒட்டப்படாத ஆட்டோக்கள் பாவம் செய்தவை (மாதம் 150 ரூவாய்). 

சமீபத்தில் சேப்பாக்கத்தில் காவிரி நீருக்காக திரைஉலகினர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி,கமல் போன்ற பெரிய நடிகர்களெல்லாம் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே அந்த இடங்களில் விளம்பர தட்டிகள் காணப்படவில்லை.ஆனால் வீரத்தளபதி J.K ரித்தீஸ் அவர்களுக்கு மட்டும் ஏகப்பட்ட தட்டிகள்.அதுமட்டுமல்லாது ரசிகர்களின் பறக்கும் படை ஒன்றும் அமைக்கப்பட்டு தலைவரின் படம் போட்ட விசிறி,மோர் என ஒரு பக்கம் வினியோகித்து சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள்.தமிழகத்தில் தலைவர் கலைஞ‌ருக்குப் பிறகு அதிகமாக விளம்பரத்தட்டி வைக்கப்பட்டது அண்ணனுக்கு மட்டும் தான். 

சில நாட்களுக்கு முன்பு, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற‌ நீதிமன்றத் தடையை எதிர்த்து ஒரு 10 பேருடன் ஆர்ப்பாட்டம் செய்தார் தளபதி. உடனே தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தளபதியை பிடித்து உள்ளே போட உத்தரவு போட்டார். ஊரே ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வீரத்தளபதி கம்பி எண்ணிக்கொண்டிருந்தார். அவர் இல்லாத ஜல்லிக்கட்டு ஒரு ஜல்லிக்கட்டா? அவரை விட்டிருந்தால் காளை என்ன? டைனோசரையே அடக்கிக் காட்டியிருப்பார்(ஆனா அதுக்கும் பேமண்ட் உண்டு). 

இப்ப இன்னா மேட்டருன்னா திமுக வின் அடிப்படை உறுப்பினராக தற்சமயம் இணைந்துள்ள சூனா.பானா தங்கவேலன் அவர்களின் பேரனும்,கோலிவுட்டின் கணவுக் கதாநாயகனுமான வீரத்தளபதி J.K ரித்தீஸ் அவர்களை தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் இராமநாதபுரத்தொகுதியில் திமுகவின் வேட்பாளராக அறிவித்து தளபதியின் அரசியல் பிரவேசத்திற்கும் வழிவகுத்து விட்டார்.இதுவரை தமிழகத்தில் மட்டுமே கண்டு  ரசித்த வீரத்தளபதியின் விளம்பரத் தட்டிகள் இனி டெல்லி பாராளுமன்ற வளாகத்திலும் வைக்கப்படலாம், அதையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

காசே தான் கடவுளப்பா,அந்த கலைஞருக்கும் இது தெரியுமப்பா.., 

அடுத்து வருவது: ஞாயிறு அதிரடி "வேட்பாளர்களுக்கு சில ஆலோசனைகள்" 

"மனித இரத்தம் குடிக்கும் மலேசியா"** மிகைப்படுத்தப் பட்ட பதிவா? விளக்கம் 

அந்தப் பதிவின் கமெண்டில் பாருங்கள்

7 கருத்துகள்:

டவுசர் பாண்டி. சொன்னது…

சொக்கா கீதுபா !! இவுரு டகால்டி வேல எல்லாம் கலீஞ்சருக்கு தெரியும்பா , சொம்மா
தானா, மந்திரிக்கு சொந்தக்காரு ஆச்சே !!!!!!! பாவம் வுடு .

சதுக்க பூதம் சொன்னது…

கலைஞருக்கு பின் தி . மு . க வின் வாரிசு அண்ணன் தான் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்து விட்டார். ஸ்டாலினும், தயாநிதி மாறனும்,அழகிரியும் இதனால் மிகவும் அப்செட் ஆகிவிட்டதாக செய்தி. அவர்களின் தீவிரவாத தாக்குதலிலிருந்து காப்பாற்ற Z பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்(அவர் ஒரு தனி நபர் அல்ல. ஒரு ராணுவம் என்பது உண்மையானாலும் கூட)

பனங்காட்டான் சொன்னது…

வீரத்தளபதி, அண்ணன் ஜேகே ரித்தீஸ் அவர்களைப் பாராட்டி எழுதியிருக்கும் தங்களை இராமநாதபுரத்திற்கு வந்து அண்ணனுக்காக பிரச்சாரம் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம் உடனடி பேமென்ட் உண்டு (இப்பதிவிற்கு கிடைத்தை விட குறைந்த பட்சம் ஐந்து மடங்கு தரப்படும்).மேலும் தங்குமிடம், போக்குவரத்து, உணவு இலவசம்.
இவண்
மாவட்ட செயலாளர்
வீரத்தளபதி பேரவை, இராமநாதபுரம்

பெயரில்லா சொன்னது…

http://jkritheesh.com

என்ன கொடுமை சரவணா இது!!!!

பூங்குழலி சொன்னது…

உங்க தலைவர் தான் பக்கத்து ரெண்டு தொகுதி செலவையும் பார்த்துக்குறேன் ன்னு பிராமிஸ் பண்ணியிருக்காராமே? அப்புறம் இவரை இழக்க எந்த கட்சித் தலைவருக்கு தான் மனசு வரும்

sankarfilms சொன்னது…

தலிவா ரிதிஷை மீட் பண்ணி வாழ்க கோஷம் போட்டா பணம் தருவாரு

saamakodanki.madurai சொன்னது…

ரித்திஷா..கொக்கா? அஞ்சா நெஞசருக்கே பாடம் சொல்லிக் கொடுத்து அசத்துன சுப்பையாவுல..ரித்திஷ் .மாப்பு.திருமங்கலம் தேர்தல்ல டைரக்டஷன், புரொடக்ஷன் எல்லாம் ரித்திஷ் தானப்பு. அட்டாக் பாண்டி தீ வெச்சதுக்கே வேளாண்மை விற்பனைகுழு தலைவர் பதவி குடுத்தவரு அஞ்சாநெஞ்சேன். இமாலய வெற்றி கெடக்கிறதுக்கு உதவுன் ரித்திஷ எம்.பி ஆக்கி பாக்கலன அவர் ஆத்மா சாந்தி அடையுமோ?
ஆனா..பாருங்கப்பு....இதுல ஒரு கொடுமப்பு ஆடு,மாடு, காக்கா, கோழி, குருவி லாம் இப்ப ரித்திஷ் பட்டாளத்த கண்டா ஓடி ஒளிஞ்சிடுது மதுரையில..( திருமங்கலம் தொகுதியில இந்த அப்பாவி உசுருகளோட அப்பா, அம்மா, தாத்தா, பாடடி,தம்பி, தங்கச்சி, ஒன்னுவிட்ட மாமா,மச்சினிச்சி ய எல்லாம் ரித்திஷ் குரூப் அடிச்சு தொவச்சு பிரியாணியா மாத்துன பயம் தான்) .பாவமப்பு...ராமநாதபுரம் 5 அறிவு ஜீவனுக...