ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

நினைவுகள் : ரமணா -ராயப்பேட்டை ராமு

பெயர்:ரமணா

வெளியான வருடம்:2002

இசை: இளைய ராஜா

நடிப்பு:விஜயகாந்த்,சிம்ரன்,ஆஷிமா

எழுதி இயக்கம்:ஏ.ஆர் முருகதாஸ் 

முதல்வன்,இந்தியன் வரிசையில் மீண்டும் ஒரு அற்புதமான படம். விஜயகாந்தின் மற்றொரு பரிணாமத்தினை அறுமையாக எடுத்துக்காட்டியிருந்தார் இயக்குணர் முருகதாஸ். கதையும் அழகு அதைவிட திரைக்கதை மிகமிக அழகு. முதல்வன்,இந்தியன் ஆகிய‌ படங்களின் வெற்றியை இந்தப் படம் முறியடித்தது எனலாம். 

கொட்டும் மழையில் திருச்சியிலிருந்து துவங்குகிறது படம். 15 தாசில்தார்கள் கடத்தப்படுகிறார்கள். 3 நாள் கழித்து அதில் ஒருவர் கொல்லப்பட்டு அவரது சொத்து மதிப்புகளோடு நடுவீதியில் தொங்கவிடப்படுகிறார். அவரோடு இணைக்கப்பட்ட ஒரு ஆடியோ கேசட்டில் கடத்தப்பட்ட 15 தாசில்தார்களும் ஊழலில் முதை 15 இடங்கள் என்றும் அதில் நம்பர் 1 கொலை செய்யப்பட்டதாகவும் ACF (Anti Corruption Force) என்ற பெயரில் ஒரு இயக்கம் மூலமாக‌ இது தொடரும் என்றும் அதிலே குறிப்பிடப்படுகிறது. அதேபோல அடுத்தடுத்த அரசுத்துறைகளில் 15 பேர் கடத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்படுகிறார். புலணாய்வுத் துறை என்ற பெயரில் பொழுதுபோக்கிகள் கதை பேசிக்கொண்டிருக்க அவர்களின் ஜீப் டிரைவர் யூகி.சேது குற்றவாளி யார் என்பதை தன்னுடைய இன்வஸ்டிகேசன் மூலம் கண்டறிகிறார். இதற்கெல்லாம் என்ன காரணம் என விரிகிறது பிளாஸ்பேக். 

சாதாரண ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பமாக ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தம்பதிகளாக விஜயகாந்த்சிம்ரன். ஒரு அழகுப்பெண் குழந்தை. "சார்மி அப்பாகிட்ட போயி தினமணி பேப்பர் வாங்கிகிட்டு வாம்மா" " நான் அவளோட எனிமிப்பா" போன்ற வசனங்கள் அப்பார்ட்மெண்டில் வாழும் நடுத்தர வர்க்க‌  மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியிருந்தது. பில்டிங் காண்டிராக்டராக பட்டாளத்தார் விஜயன். "ஒளி பிறந்தது" என்ற உப்புமா படத்தில் கதாநாயகனாக நடித்து சில படங்களில் தலைகாட்டி பின்னர் மளையாள மசாலா படங்களில் நடித்துக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து அருமையான வேடம் கொடுத்திருந்தார் இயக்குர். கம்பீரமான தோற்றத்திற்கு ஏற்ற கம்பீரமான குரலுடைய விஜயனுக்கு ஏனோ சந்திரசேகர் பின்னணி பேசியிருந்தார். 

படத்திற்கு ஹைலைட் சீனே ஒரு பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் தனியார் ஆஸ்பத்திரி சீன் தான். நாட்டில் பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளில் நடக்கக் கூடிய விசயத்தை மிகத் துள்ளியமாக காட்டியிருந்தார் இயக்குனர். அது எந்த ஆஸ்பத்திரியைக் குறிக்கிறது என்பது அநேகமாக சென்னைவாசிகளுக்குத் தெரிந்து இருக்கும். முதன்முதலில் படம் ‍பார்ப்பவர்கள் கதையில் அடுத்த என்ன வருகிறது என்பதைக் கணிக்கவே முடியாது. தீபாவளிக்கு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் "வானம் அதிரவே பாட்டுபடிக்கலாம் ரோசி ரோசி" என்ற பாடல் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப் பட்டது. இந்த பாடல் முடிந்து தான் அந்த பூகம்பக் காட்சி வரும். ஒரு பக்கம் துளைமெசினை வைத்து அடித்துக்கொண்டிருப்பார்கள்மற்றொரு பக்கம் இந்தப் பாடலில் குழந்தைகள் நடணமாடிக்கொண்டிருக்கும். அங்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு நாய் அறுத்துக்கொண்டு ஓட முயற்சிக்கும். பூகம்பம் வருவதற்குள் அந்தப் பாடல் முடிந்துவிடும். இந்த ஒரு பாடல் ரமணா படத்திற்கு மிகச்சிறந்த விளம்பரமாக அமைந்தது. அடுத்து என்ன என்பதைக் காண மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்குப் படையெடுத்தார்கள். 

யூகி சேதுவின் இன்வஸ்டிகேசன் மிகப் பிரமாதமாக அமைந்தது.அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். அடுத்து இந்தப் படத்தின் கதாநாயகி ஆஷிமா. படத்தின் டைட்டிலில் பூதக்கண்ணாடி கொண்டுத் தேடினாலும் இவர் பெயர் இருக்காது. காரணம் சம்பளப் பிரச்சினையில் லடாய் ஏற்பட்டு கோர்ட்வரை சென்றதால் அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை. அடுத்து முக்கியமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் வரும் பூகம்பக் காட்சிக்கு உண்மையிலேயே கட்டிடம் கட்டி இடிக்க வேண்டும் என்ற இயக்குனர் முருகதாஸின் கோரிக்கை பல தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட இந்த புராஜக்ட் கிடப்பிலேயே இருந்தது. ஆனால் இந்தக் கதை ரவிச்சந்திரனுக்கு மிகப்பிடித்துப்போய் அந்த பூகம்பக் காட்சிக்காக உண்மையிலேயே கட்டிடம் கட்டி இடிக்க ஒப்புக்கொண்டார்.அதுமட்டுமின்றி ரமணாவில் வரும் முதல்வர் வேடத்தை கேட்டு வாங்கிக்கொண்டார்.

1)அத்தனையும் அனாதைப் புள்ளைகள் என தேனிகுஞ்சாரம்மாள் ஆஷிமாவிடம் சொல்லுமிடம் 

2)தன் குழுவில் உள்ள ஒரு மாணவரின் தந்தையைக் கொல்ல வேண்டும் எனும் போது மறுக்காமல்  வலிக்காம பாத்துக்குங்க மாஸ்டர்,அவர் வேனுமின்னா கெட்ட அப்பாவா இருக்கலாம் ஆனா நான் நல்லவன் மாஸ்டர் என கோபி என்ற மாணவப் பாத்திரம் அழும்போதும்

3) நான் தீர்ப்பு எழுதின பேனாஉடஞ்சே ஆகனும் மன்னிப்பு வேண்டாம் என விஜயகாந்த் ரவிச்சந்திரனிடத்தில் கூறும் போதும் 

 4)கடைசியாக தன் குழந்தைகளைப் பார்க்க செல்லும் போது "இறைவன் எனக்கு தடவை குழந்தைகளைக் கொடுத்தான்ஆனா ஒரு தடவக்கூட வாழக்குடுத்து வைக்கலே" 

போன்ற வசனங்களில் கண் கலங்காதவர்கள் இருக்கவே முடியாது. அடுத்து மிகமுக்கியமானது இசை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசையமைத்த படம். பின்னணி இசை மிரட்டியிருந்தார். வானவில்லே,அள்ளிமுடிச்ச கொண்டையிலே,தீபாவளி என மூன்று பாடல்கள் மட்டும் தான் திரையில் இடம்பிடித்தன.வானவில்லே பாடல் படம்பித்த விதமும் லொக்கேசனும் மிக அருமை. இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பார்க்கவே முடியாது. நிச்சயம் அவர் இறந்தே ஆகவேண்டிய கட்டாயம். 

ஆனால் தெலுங்கில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்ட போது அந்த ஹீரோ கடைசியில் சாகமாட்டார். அங்கு சிரஞ்சீவி நடித்தார். தெலுங்கில் என்னத்த சொன்னாலும் நம்பக்கூடிய உடன்பிறப்புகள் தான் அதிகம். ஆக ரமணா விஜயகாந்திற்கு ஒரு பலமான திருப்புமுனையையும்ரசிகர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கையும் கொடுத்தது என்பதில் சந்தேகமே இல்லை. 

மதிப்பெண்கள்: 89/100 

பின்குறிப்பு: நான் இந்தப் படத்தை 11 முறை (திரையரங்குகளில் மட்டும்) சென்று பார்த்தேன். கடைசியில் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கோடம்பாக்கம் லிபர்டியில் காலைக்காட்சி போட்டிருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் அங்கு சென்று படம் பார்க்க அமர்ந்தேன். நேரம் செல்லச்செல்ல எனக்கு ரமணா மட்டுமல்ல தமிழ்சினிமாவே வெறுத்துவிட்டது. 

6 கருத்துகள்:

லோகு சொன்னது…

நல்லா இருக்குங்க..

சென்ஷி சொன்னது…

:-))

Karthikeyan G சொன்னது…

//கோடம்பாக்கம் லிபர்டியில் காலைக்காட்சி போட்டிருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் அங்கு சென்று படம் பார்க்க அமர்ந்தேன். நேரம் செல்லச்செல்ல எனக்கு ரமணா மட்டுமல்ல தமிழ்சினிமாவே வெறுத்துவிட்டது.
//

Why Sir??

Liberty theatre is not so bad.. (Good to avoid icecream there :) )

Cable Sankar சொன்னது…

தல.. லிபர்டி தியேட்டரை மட்டும் அளவுகோலா வச்சிக்கிட்டு தமிழ் சினிமாவை வெறுக்க கூடாது..

பெயரில்லா சொன்னது…

அதுமட்டுமின்றி ரமணாவில் வரும் முதல்வர் வேடத்தை கேட்டு வாங்கிக்கொண்டார்.//

ஏங்க! தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும், நடிகர் ரவிச்சந்திரனும் வேற வேற ஆளுங்க...

பெயரில்லா சொன்னது…

தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் புகழ்ச்சி பிடிக்காதாம். அதனால் பெரும்பாலும் அவர் பத்திரிக்கைகளுக்கோ அல்லது தொலைக்காட்சிக்கோ போஸ் கொடுப்பதில்லை.