வியாழன், 23 ஏப்ரல், 2009

கலைஞருக்குத் தெரியுமா கடையடைப்பு வேதனை ?

கலைஞருக்கு மிகவும் பிடித்த விசயங்கள் இரண்டு தான். ஒன்று பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வது அடுத்தது பந்த் நடத்துவது. எதெற்கெடுத்தாலும் கடையடைப்பு பஸ்மறியல் என்று ஒரு நாடாளும் அரசு இறங்கினால் அந்த நாடு உறுப்படுமா? மிகச்சாதரணமாக அழைப்பு விடுத்து அதை தனது உடன்பிறப்புகள் உதவியோடு வெற்றிகரமாக நடத்தி முடித்து விடுகிறார்

காலையில் 7மணிக்கு 3 ரூபாய்க்கு ஒரு டீ. டீ குடிக்கும் சாக்கில் அன்றைய பேப்பர்களில் ஏதாவது ஆட்கள் தேவை விளம்பரம் தட்டுப்படுமா என்ற தேடுதல் வேட்டை. 9 மணிக்கு 5 ரூபாய்க்கு ஒரு பொங்கல் மட்டும். வடை சேர்ந்து வாங்கினால் 2 ரூபாய் எக்ஸ்ட்ரா. பிறகு  அறைக்குச்சென்று உடையணிந்து கொண்டு  வேலைத்தேடப் புறப்படுதல். கால்கடுக்க வெள்ளை போர்டு பேருந்துக்கு காத்திருந்தால் தவழ்ந்து வருவதெல்லாம் தாழ்தள தங்கரதப் பேரூந்துகள் தான். வேறு வழியில்லாமல் அதிலேறினால் 11 ரூபாய்க்கு பயணச்சீட்டு. ஒனக்குத்தான் வெள்ளை போர்டு பஸ்ஸூ வுட்டு இருக்கானுங்கல்ல அதுல போயித் தொலைய வேண்டியது தானே! இதுல யாரு உன்ன ஏறச்சொன்னா? என கணிவோடு நடந்து கொள்ளும் நடத்துனர்கள். அதைத் தாண்டி இண்டர்வியூவிற்குச் சென்றால் "பெட்டர் லக் நெக்ஸ் டைம்" அல்லது " வில் கால் யூ லேட்டர்" என லிக்கும் ரிக்கார்ட் வாய்ஸ்கள்சோர்ந்து போய் வந்து மதியம் 12 ரூபாய்க்கு பிளாட்பாரக் கடையில் ஓரத்தில்  ஏதாவது விழுமா என ஏங்கும் நாய்களுடன் சேர்ந்து அமர்ந்து அளவுச்சாப்பாடு.

இரவு 5 ரூபாய்க்கு 4 இட்லி. 2 ரூபாய்க்கு ஊருக்கு ஃபோன் கால். என்னப்பா இன்னிக்காவது வேல ஏதும் கெடச்சதாப்பா? என உருகும் தாயிடம் அடுத்த மாதச் செலவுக்கு எப்படியாவது 2000 ரூபாய் ஏற்பாடு பண்ணும்மா! என்ற கெஞ்சலுடன் கட் பண்ணி விட்டு கொஞ்ச நேரம் மேன்சன் டிவியில் காமெடி டைம். முடிந்து 10 க்கு 10 அறையில் 10 பேருடன் தூக்கம்.

தலைவர் கலைஞர் அவர்களே! இது தான் ஊரு விட்டு ஊரு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பேச்சிலர்களின் அன்றாட வாழ்க்கைஇன்று கடையடைப்பு பஸ்கள் ஓடாது. அப்படியானால் பேச்சிலர்களும் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் பொழுது வீண்இன்றைக்கு 6 மணிவரை அவர்கள் வயிற்றில் ஈரத்துண்டு தான்.வேலைதேடும் இளைஞர்கள் உங்களை நன்கு வாழ்த்துவார்கள்ஆனால் உங்களுக்கு கடையடைப்பு என்பது கரும்பு 

சாப்பிடுவது போன்றது.

5 நாட்கள் "கடும்" வேலைப் பார்த்து களைத்துப் போய்விடும் அரசு ஊழியர்கள் நேற்றே மட்டன்/சிக்கன் வாங்கி பிரிட்ஜில் வைத்து விட்டு இன்று ஹாயாக  ஸோபாவில் படுத்துக்கொண்டு "பந்த் முழு வெற்றி" என கலைஞர் செய்திகளிலும், "பந்த் படு தோல்வி" என ஜெயா செய்திகளிலும் செய்திகளைக் கேட்டுக்கொண்டு விடுமுறை நாள் சிறப்புத் திரைப்படம் போடும் கலைஞர் டிவி, சன் டிவிக்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இந்த நாள் இனிய நாள் என்ற பாணியில் கலைஞர் வாழ்க என்ற கோஷத்தோடு தபால் ஓட்டுக்களை உங்களுக்கு வாரித்தெளித்து விடுவார்கள்

அன்றாடக்கூலிகளின் வீட்டு அடுப்பில் தூங்கும் பூனைக்கு இன்று அடி விழாது. பிச்சைக்காரர்களின் தட்டுக்களில் இன்று காசு விழாதுஅது போல இந்த எலக்சனில் உங்களுக்கு ஓட்டும் விழாதுசிறு பெட்டிக்கடை வியாபாரிகள் நாளைக்கு வட்டிப்பணம் கட்டுவதற்கு கையைப் பிசைந்து கொண்டு இருப்பார்கள். இன்று கடை திறந்தாலும் உங்கள் உடன் பிறப்புகள் அடித்து நொறுக்கி விடுவார்கள்டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் இன்று சிறப்புச் சலுகை கொடுத்திருப்பது ஏனோ ? உங்கள் உடன்பிறப்புகள் முழு போதையில் கலாட்டா செய்வதற்காகவா தலைவரே!

பிரசரவத்திற்கு அவசரமாக இன்று ஒரு ஆட்டோ சென்றாலும், உயிருக்கே ஆபத்தாக ஒரு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் சென்றாலும் அடித்து நொறுக்கப்படும். பல்கலைக்கழகத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்று பந்த் ஒரு கேடா? ஒரு அரசு இப்படி அடிக்கடி பந்த் நடத்தி பொதுமக்களின் இயல்புவாழ்க்கையை முடக்கலாமா?

லண்டன் நகரில் கடந்த 15 நாட்களாக புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பரமேஸ்வரன் என்ற ஒரு இளைஞன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அசைந்து கொடுக்கிறதா ராஜபக்சே அரசு? காரணம் அவர்கள் அகதிகள். அவர்கள் அந்த நாட்டின் பிரஜைகள் இல்லை. இதே போராட்டம் இலங்கையிலோ அல்லது சொந்த மண்ணாம் தமிழகத்திலோ நடந்திருந்தால் இன்னேறம் ஒரு முடிவு  ந்திருக்கும். அதை விடுத்து கடைகளை அடைத்து, பஸ்ஸை மறித்து, சினிமா காட்சிகளை ரத்து செய்வதால் என்ன பிரயோஜனம்

தமிழர்களின் தலைவராக அறியப்பட்ட கலைஞர் ஏன் இப்படி சொதப்பி கடைசி காலத்தில் கெட்ட பெயர் வாங்குகிறார்?

என்ன தான் செய்யலாம்?????:

ஒரு அரசுக்கு அட்வைஸ் கொடுக்கக் கூடிய தகுதி எனக்கு இல்லை என்றாலும் கீழ்க்கண்டவை எனக்கு தோன்றியது. பிழையிருந்தால் மன்னிக்கவும்.

1) இலங்கையுடன் மத்திய அரசு உறவை முறிப்பது இருக்கட்டும். முதலில் காங்கிரஸுடன் திமுக உறவை முறித்துக் கொண்டால் அவர்கள் தானாக வழிக்கு வருவார்கள்.

2) காங்கிரஸ் உறவை முற்றிலும் முறித்துக்கொண்டு திமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் உங்களிட‌ம் கொள்கை உறுதி, தமிழின பற்றைக் கண்டு மக்கள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தருவார்கள். தனித்து விடப்பட்ட காங்கிரஸ் உங்களிடம் கெஞ்ச ஆரம்பிப்பார்கள். அப்போது உங்கள் நிர்பந்தத்தில் மத்திய அரசு உடன‌டி நடவடிககை எடுக்கும்.

3) தமிழர்களைக் கொன்றழிக்கும், தட்டிக்கேட்டால் தமிழக தலைவர்களைக் காமெடியன் என்று சொல்லும் இலங்கைக்கு, தமிழகத்தில் தூதரகம் ஒரு கேடா என அதைக் 24 மணி நேரத்தில் காலி செய்யச்சொல்லி தூதரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பலாம்காலி செய் அல்லது போரை நிறுத்து என டிமாண்ட் வைக்கலாம். 24 மணி நேரத்தில் காலி செய்யாவிட்டால் தூதரகத்தைப் பூட்டி சீல் வைக்கலாம். முழு அடைப்பு நடத்த ஒரு  அரசுக்கு சட்டத்தை மீறி உரிமை இருக்கும் போது இதுவும் அது போன்றது தான்.

4) தமிழகத்தில் உள்ள அனைத்து ஏர் டிராவல்ஸ் உரிமையாளர்களையும் மொத்தமாக அழைத்து கொஞ்ச நாளைக்கு ஏர்லங்கன் விமான டிக்கெட்டுகளை விற்கக் கூடாது என்றும் மீறி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பைத் தரலாம்.

5)தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஏர்லங்கா விமாண வாடிக்கையாளர் சேவை மையங்களையும் காலி செய்ய உத்தரவிடலாம். அவர்களுக்கு யாரும் இனி வாடகைக்கு கட்டிடமோ சொந்தக் கட்டிடமோ வழங்கக் கூடாது என உத்தரவு போடலாம். 4 நாளைக்கு ஏர்லங்கா விமானம் MT யாக போய் வந்தாலே தானாக வழிக்கு வருவார்கள்.

6) தமிழகத்தில்  குடியேறியிருக்கும் சிங்கள மக்களை பட்டியலிட்டு அவர்களை உடனே தமிழகத்தை விட்டு வெளியேற உத்தரவிடலாம்

7) ஏர்லங்கன் விமான சிப்பந்திகள் தங்குவதற்கு எந்த ஹோட்டலும் இடமளிக்கக் கூடாது என கடுமையான உத்தரவுகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு இடலாம். விமான சிப்பந்திகள் ஏர்போட்டில் தங்குவதற்கு விருப்பப் படவே மாட்டார்கள்

இது போன்ற வேலைகளைச் செய்தால் இந்த செய்தி இலங்கை முழுவதும் பரவி ஒரு அதிருப்தி நிலவும். உடணடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே  ஓடி வந்து உங்களைச் சந்திப்பார். போர் நிறுத்தம் ஏற்பட ஏதாவது வழி பிறக்கும்

அதை விடுத்து முழு அடைப்பு முக்கால் அடைப்பு என்றால் அது உங்களுக்குத் தான் பாதகமாக முடியும் தலைவரே!

4 கருத்துகள்:

vivek சொன்னது…

அட இன்னும் என்னையா கலைஞர். கொலைஞர் என்று எழுதுமய்யா.

அது உமது யோசனைகளை பின்பற்றினால், அடுத்து வரும் நானூறு தலைமுறைக்கு சொத்து சேர்ப்பது எப்படி.

பெயரில்லா சொன்னது…

கலைஞருக்கு கடையடைப்பு வேதனை தெரியாதா?

முட்டாள்தனமாக உள்ளதே?

அந்த வேதனையில் வாடியதன் காரணமாகவே இன்று 'டாஸ்மாக்'குகள் மூடப்படாமல் சேவை புரிய அவர் வழிவகை செய்ததை கவனிக்கவில்லையா?

butterfly Surya சொன்னது…

ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு.

இன்று பொது வேலை நிறுத்தம்.

அதிலும் டிப்போவை பூட்டு போட்டு பூட்டி விட்டு .. பஸ்கள் ஒடவில்லை.

பந்த் வெற்றி....




அடுத்தது என்ன?


முன்னரே சொல்லி விடுங்கள்..

கடைசி நேரத்தில் தாலி அறுக்காதீர்கள்.

சரவணன் சொன்னது…

ஒரு அரசுக்கு அட்வைஸ் கொடுக்கக் கூடிய தகுதி உங்களுக்கு முழுமையாக இருக்கின்றது.