புதன், 22 ஏப்ரல், 2009

மறுபடியும் கடையடைப்பு? என்ன கொடும தலைவரே இது!

இந்த எலக்சன் வந்தாலும் வந்தது  கலைஞர் தினம் தினம் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காரு. இந்த நிலையில் அவர் இன்று விட்ட அறிக்கையில்  இலங்கையில் போர் நிறுத்தத்தை  இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என தலைவர் கலைஞர்  அழைப்பு விடுத்துள்ளார். 

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார், 27 முறை எஸ்.எம்.எஸ் அனுப்பினார் தலைவர் கலைஞர் .  ஆனால் எஸ்.எம்.எஸ் பெயிலியர் டெலிவரி ஆகிவிட்டதாம். அதனால‌ நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து (?) 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 

பொது வேலைநிறுத்தத்தையொட்டி நாளை தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அவரது திரைத்துறை ஜால்ரா ராம.நாராயணன் கூறியுள்ளார். 

கலைஞர் ஆட்சி வந்தால் பஸ்மறியல்,கடையடைப்பு, பந்த் போன்றவை இலவச இணைப்பாக கூடவே வந்துவிடும்,கலைஞர் ஆட்சியில் பிளேடு வச்சிருக்கறவன் பியூன மெரட்டுவான்,கத்தி வச்சிருக்குறவன் கலக்டர மெரட்டுவான் என்பது 100% உண்மை.இவ்ளோ நடந்தும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச்சீராக இருக்கிறது என்று சொல்வது தான் ஆஸ்கார் விருது காமெடி. 

வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்திலாடுறான் பாரு, ஆடி முடிஞ்சி எறங்கிவந்தா அப்புறந்தான்டா சோறு., 

UPDATE TODAY: அதிசய உலகம் "வியக்கவைத்த துபாய் ஸ்டேடியம்"

8 கருத்துகள்:

podhigai thendral சொன்னது…

//இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார், 27 முறை எஸ்.எம்.எஸ் அனுப்பினார் தலைவர் கலைஞர் . ஆனால் எஸ்.எம்.எஸ் பெயிலியர் டெலிவரி ஆகிவிட்டதாம். அதனால‌ நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். //


/செல் போன் பில் கட்டியிருக்கமாட்டாறோ???????!////
இவனுங்க இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கதைய சொல்லிக்கிட்டே இருப்பாங்க....

ராசா சொன்னது…

இதே பொலப்பு எப்ப பாரு தந்தி அடிக்கிரேன், தபால் போடுரேன், பந்த் பன்னுரேனு...
தலைமுறைக்கும் தேவையானத தமிழ் நாட்டுல சொரண்டியாச்சு..
தினக்கூலிக்கு போயி 50 ரூபாய் சம்பாதிக்குரவன் சோத்துல மண்ணு விழுரத நம்ம எதுக்கு யோசிக்கனும்..

Nilavan சொன்னது…

பொழப்பை புறம்தள்ளி விட்டு போராட நாங்கள் தயார்..

கூட்டணியே வேண்டாம் என முறித்துக் கொண்டு எங்களுடன் போராட நீங்கள் தயாரா ?!

வாழ்க தமிழுடன்,
நிலவன்.

Ilaya சொன்னது…

Age limit for govt services should be applied to all CMs too.Because of his age he cant handle this post now.He is more concerned about his famil,business,and party.Now he become worthless to talk for tamil.
His real character is out and open to all.Shame on our tamil people who lost all.

krsmurali சொன்னது…

கருணாநிதி மாதிரி ஒரு பதவி வெறி பிடித்த ஒரு அரசியல்வாதியா நான் பார்த்ததில்லை. இவ்வளவு நாள் இல்லாமல் சரியாக தேர்தல் சமயத்தில் அதுவும் முக்கால் வாசி பேர் இறந்த பிறகு ஈழத்தமிழர்களுக்கு என்ன வக்காலத்து.

பெயரில்லா சொன்னது…

தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்ய வேண்டியது என்ன
http://udaippuu.blogspot.com/2009/04/blog-post_23.html

பெயரில்லா சொன்னது…

Government is torturing middle class people to pay the taxes properly. How come this Karunanidhi & family escaping the Tax Net???????? Are they are paying the Taxes regularly?????? I really wonder, how come he has become a leader without any talent except cheating Tamil People all these years. GOD ONLY CAN SAVE TAMIL NADU FROM THE CLUTCHES OF KARUNANIDHI & FAMILY.

கே.ரவிஷங்கர் சொன்னது…

//மறுபடியும் கடையடைப்பு? என்ன கொடும தலைவரே இது//

அவர் கடையும் பேரன் கடையும் இன்னிக்கு உண்டு. அவர் கடைல “முரட்டு காளை” பேரன் கடைல”திருட
திருடி”.ஸ்பெஷல் வேலை நிறுத்தம் ஷோ.

புல்லரிக்குது.

“மன் மத ராசா”பாட்டுக்கு வெயிட் பண்ணிட்டுருக்கேன்?????????????????

கேட்ட ஈழ துக்கமெல்லாம் போய்டும்.