வியாழன், 2 ஏப்ரல், 2009

மனித இரத்தம் குடிக்கும் மலேசியா -C.I.D சிங்காரம்

மலேசியா என்றதும் நம் நினைவுக்கு வருவது சுற்றுலா தான்.உலகத்தின் மிக மிக அழகான நாடுகளில் மலேசியாவும் ஒன்று.  ஆடம்பரம்,கேளிக்கை என அனைத்திற்கும் அங்கே பஞ்சமில்லை.நாடு முழுவதும்  கலர் கலர் கண்ணாடிகள், கலர் கலர் விளக்குகள் அலங்காரம் அனைவரையும் மிகமிகக் கவரும். இந்த விளக்குகள் மற்றும் அலங்காராங்களால் தான் மற்ற நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது மலேசியா. சுற்றுலா வியாபாரத்தின் லாபம் பலகோடி. ஆனால் அந்த இலாபத்தை மீண்டும் முதலீடு செய்யாது மலேசிய அரசு. காரணம் அவர்களுக்கு மற்றுமொரு வழியில் கணமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது. 

வயல்,நிலங்கள் மற்றும் தாலிகளை விற்று தமிழகத்திலிருந்து செல்லும் தொழிலாளர்களின் 12 மணி நேர உழைப்பின் மூலம் வரும் வரியை குளிரூட்டப்பட்ட அறையில் அமந்து கொண்டு தன் நாட்டு மக்களுக்கு வாரி வழங்குகிறது மலேசியா. நமது ஊரில் கரும்புச்சாரு பிழிவதைப் பார்த்திருப்போம். மூன்று முறைக்கு மேல் அந்த கரும்பைப் பிழிவது இல்லை. ஆனால் மலேசியாவிலே அந்த கரும்பை விட அதிகமாகவே பிழிந்துவிடுகின்றனர் தொழிலாளர்களை. 

12 மணி நேரம், கால்கள் வலுவிழந்து கீழே வீழ்ந்துவிடுவோமோ என்ற நிலைவரை பணிமுடிந்து நேரே படுக்கைக்குத்தான் செல்வார்கள். வார விடுமுறை கிடையாது. வருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜானுக்கு இயந்திரங்களுக்கு கூட விருமுறை கிடைக்கும்,ஆனால் இந்த மனித இயந்திரங்களுக்கு விடுமுறை கிடையாது.மீறினால் அடி,உதை. மாதம் முடிந்து சம்பளம் கேட்டால் சில நிறுவனங்களில் "சம்பளம் அப்டின்னா என்னப்பா?" என்று கேட்பார்கள், திமிறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு மின்பு சேலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை கோழிப்பண்ணையில் அடைத்து வைத்து உடல் முழுக்க சூடு போட்டது நினைவிருக்கலாம். 

இப்படியெல்லாம் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் பெறும் கூலி மாதம் RM 650 (ஒரு மலேசிய வெள்ளி இந்திய மதிப்பு விற்கும்விலை 12.70) முதல் 750 வரை. அதாவது இந்திய மதிப்புப் படி 8‍000 ரூபாய். அப்படியானால் ஒரு வருடத்திற்கு 96,000 ரூபாய் கிடைக்கும். இதிலே அந்தத் தொழிலாளர்கள் முதலில் விசாவிற்கென்று எப்படியும் 1 லட்சம் பணம் கட்டி போயிருப்பார்கள். ஒரு வருடம் முடிந்தவுடன் பெர்மிட் எனப்படும் வேலைஉரிமம் புதுப்பிக்க வேண்டும். அதற்கு எவ்வளவு தெரியுமா?

52,000 ரூபாய் அரசுக்கு வரிசெலுத்த வேண்டும். இந்த ஏழைத்தொழிலாளி சம்பாதிப்பதில் பாதியை தொழிலாளர் இரத்தம் உறுஞ்சும் மலேசிய அரசாங்கம் பிடுங்கிக் கொள்வது என்ன நியாயம்

இவ்வளவு பணம் பறித்தும் அந்த தொழிலாளிக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை. கேட்டால் அந்நியத்தொழிலாளர்களை குறைக்கப் போகிறோம் என்ற ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகிறார்கள். 2004 ம் வருடம் திரு.அஸ்மிகாலிட் அவர்கள் குடி நுழைவு அமைச்சராக இருந்த போது முறையற்ற தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு இனிமேல் நீங்கள் மலேசியாவிற்குள் நுழையக் கூடாது என ரேகைப் பதிவுகள் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 லட்சம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். என்ன நடந்தது ? அவர்கள் செய்த வேலைகளைச் செய்ய மலேசியர்கள் மறுத்தனர்.காரணம் மலேசியர்கள் யாரும் 5 மணி நேரத்திற்கு மேல் எங்கும் வேலை செய்ய மாட்டார்கள். மலேசியா கடும் நஷ்டத்தைச் ச‌ந்தித்தது. நிறைய கடைகள் மூடப்பட்டன. பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்தது. பணவீக்கத்தில் நாடு மூழ்கிய போது மீண்டும் அன்னியத்தொழிலாளர்களை நோக்கி அழைப்புவிடுத்தது மலேசியா. விசாவே தேவையில்லை,சும்மா வாருங்கள் என கெஞ்சிக்கூத்தாடியது கேவல மலேசியா. மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறி விட்டது. இப்போது மீண்டும் லெவி எனப்படும் வரியை தொழிலாளர்கள் மீது உயர்த்தியிருக்கிறது மலேசியா.

23ம் புலிகேசி அரசை விடக் கேவலாமாகச் செயல்படுகிற‌ மலேசிய அரசின் பிரதமர் பதவியிலிருந்து தற்போதைய பிரதமர் 24 ம் புலிகேசி அப்துல்லா அஹ்மத் பதாவி இன்று பதவிவிலகுகிறார்.அடுத்த பிரதமாராக 25 ம் புலிகேசி நஜிப் துன் ரசாக் பதவியேற்கிறார். பதாவியைக்கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.,ஆனால் இந்த நஜிப் அன்னியத் தொழிலாளர்கள் விசயத்தில் மிகமிக மோசமானவர். தொழிலாளர் இரத்தம் குடிக்கும் ஒரு ஓநாய் என மலேசிய தமிழ்செய்தி தொடர்பாளர்கள் ரகசியச் செய்தி பகர்ந்திருக்கிறார்கள். பார்க்கலாம் 25ம் புலிகேசி என்ன செய்யப் போகிறார் என்று.

-C.I.D சிங்காரம்

11 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

மிகைப்படுத்தப்பட்ட உண்மைகள்!

பனங்காட்டான் சொன்னது…

இது, அதிகப்படியாக குடியேற்ற தொழிலாளர்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும் ஏற்படும் பிரச்சனையே. தற்போது அமெரிக்காவிலும் விசாவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. விசாவையே தூக்கிவிடவும் ஏற்பாடு நடக்கிறது. உள்ளூரில் அதிகரிக்கும் வேலையில்லாத்திண்டாட்டங்களே இதற்குக் காரணம். மலேசியாவில் இது கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. இது போன்ற விசா கட்டுப்பாடுகள் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. இந்திய டாக்டர்கள் இங்கிலாந்தில் படும் பாடு அனைவரும் அறிந்தே.
நல்லதொரு தலைப்பை எடுத்ததற்கு நன்றிகள்!

பனங்காட்டான் சொன்னது…

மலேசியத் தமிழர்கள், மலேசியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் யாரையும் மதிப்பதில்லை என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அங்கே நடக்கும் கொடுமைகளுக்கு இதுவும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன். கிருஷ்ணா, நீங்கள் கூறுவது போல் இவை மிகைப்படுத்தப்பட்டதல்ல. செய்திகளில் அடிக்கடி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மலேசியத்தமிழர்கள் இந்தியர்களை கேவலமாக பேசுவதும், நடத்துவதும் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம்.

கிருஷ்ணா சொன்னது…

உரக்கப் பேசினால் உண்மை ஊமையாகி விடாது நண்பரே! மலேசியாவில் வேலை அவலங்களுக்கும் இன்னல்களுக்கும் இடையில்தான் இந்திய குடியேற்ற தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால்.. பிறகு ஏன் இவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக இங்கேயே இருக்கின்றனர்? வேலை அனுமதி விசாவை தடை செய்தால் ஏன் பொங்கி எழுகின்றனர்?

இவர்கள் பலரிடம் ஜாலியாக நான் பேசியதுண்டு. (கேலியாக அல்ல) 'வெற்றிக்கொடி கட்டு' படம் வெற்றி பெற்றும் இவர்கள் இங்கேயே இருப்பதற்கு சில காரணங்களை சுட்டுகிறார்கள். சொந்த ஊரில் சோம்பித்திரிவது, வெளிநாட்டில் வேறு வழி இல்லாமல் 12 மணி நேரம் வேலை செய்வது..! இது யார் குற்றம்?? அண்ணியன் படத்திலும் ஒரு சாதாரண இந்தியன் என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்று சங்கர் சுட்டிக் காட்டி இருக்கிறாரே..! வாதிட்டால், இந்த மேடை போதாது நண்பரே..

ஏதோ ஒன்றிரண்டு சம்பவங்களை கேட்டுவிட்டு, படித்துவிட்டு பழி சொல்லாதீர்.. அதிலும், மலேசிய இந்தியர்கள், தமிழ்நாட்டு தமிழர்களை மதிப்பதில்லை, கேவலமாக நடத்துகின்றனர் என்பதெல்லாம் வெறும் கூச்சல்.. இங்கே எத்தனையோ தமிழ் நாட்டு இளைஞர்கள் மலேசிய தமிழர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கும் கதையெல்லாம் இங்கிருக்கும் எங்களுக்குத்தான் தெரியும். எனக்கும் எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள்..

டாஸ்மாக் கபாலி சொன்னது…

அய்யா திரு. கிருஷ்ணா அவர்களே! உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் மலேசிய இந்தியராக இருக்கலாம்.அதற்காக ஒரு உண்மையை மிகைப் படுத்திய பதிவு என்று சொல்லவேண்டாம். 2 வருடங்களுக்கு முன்பு மலேசிய நண்பன்,தமிழ் நேசன்,தமிழ்குரல் (தமிழ்குரல் இப்போது மூடப்பட்டு விட்டது) ஆகிய மலேசிய தமிழ்தினசரிகளில் ஒரு 10 நாட்கள் வந்த சர்ச்சைக்குரிய செய்தி என்ன? தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சம்பளம் கேட்ட குற்றத்திற்காக ஒரு கோழிப்பணையில் அடைத்துவைத்து உடல்முழுவதும் சூடு போட்டுச்சித்திரவதை என்றும் அதைச்செய்தவர் ஒரு தமிழர் என்றும் செய்தி வந்ததா இல்லையா? அது மலேயப் பாராளுமன்றத்தில் எதிரொலித்ததா இல்லையா? நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள். தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு வேலைக்கு வரும் தமிழர்கள் மரியாதையுடனா நடத்தப்படுகிறார்கள்? ஒரு கீழ்த்தரக்குடிமக்களாகத் தானே நடத்தப்படுகிறார்கள். 2004 ம் வருடம் குடி நுழைவுத்துறை அமைச்சராக இருந்த டத்தோ.அஸ்மிகாலிட் அவர்கள் அங்கு முறையற்ற விசா வைத்திருப்பவர்களை வேட்டையாடப் படும் மனிதர்களாக (HUNTING MAN) அவர்களை கருதப்படும் என்று தெரிவித்தாரா இல்லையா? பிறகு அவரை கழிவு நீரகற்று வாரியத்துக்கு நியமித்தது தனிக்கதை.விசா சட்டங்களை சரியாக நடைமுறைப் படுத்தி விசா கட்டணங்களைக் குறைத்தால் யாரும் முறையின்றி வரமாட்டார்கள். அதன் பின்னர் பொது மன்னிப்பு முடிந்த பிறகு பல உணவகங்களில் ஆட்கள் தேவை போர்டு போட்டும் ஒருவரும் வராமல் பின்னர் விசாவே தேவையில்லை சும்மா வாருங்கள் என அரசு அறிவித்தது உண்மையா இல்லையா? உங்களுக்கு சந்தேகமிருந்தால் மலேசிய நண்பன் பழைய பிரதிகளைப் பார்க்கவும்.

கடைசியாக ஒரு கேள்வி
மலேசியர்கள் அல்லது மலேயத்தமிழர்கள் அங்குள்ள நாசிக் கண்டார் எனும் உணவகங்களில் தினசரி 12 மணிநேரம்,வார‌ விடுமுறையன்றி வேலை பார்க்கத் தயாரா? பதில் சொல்லுங்கள் அய்யா.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

என் கருத்துக்கு வலிமைச் சேர்த்த மாண்புமிகு பணங்காட்டான் அவர்களுக்கு நன்றி. எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. உங்களிடம் மன்னிப்புக் கோரலாம் என நினைத்திருந்தேன்.ஆனால் நேரமில்லை. அதற்காக நீங்கள் அந்த பதிவை நீக்கியது தேவையற்றது.என் மீது பிழையிருந்தால் நான் வருந்துகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.

கடைசி பக்கம் சொன்னது…

dear kapali,

The info you said mostly true. I saw in person that the working condition in Malaysia for estate workers is very bad. Please chk utube for the many short films about them.

About malaysian / singaporen indians they never respecting the indians. But always there is minor exceptions.

I was in malaysia. Malay landlords the way treating the workers....

:-((

கிருஷ்ணா சொன்னது…

வேடிக்கையாக இருக்கிறது ஒரு சிலரின் கேள்வி! நான் 'மிகைப்படுத்தப்பட்ட உண்மைகள் என்றுதானே சொன்னேன்.. அனைத்தும் பொய் என்று சொல்லவில்லையே! முதலில் நான் சொல்ல வந்ததை முழுமையாகப் புரிந்து கொண்டு பின்னூட்டம் இடுமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

மலேசிய இந்தியர்கள் யாருமே இந்தியக் குடியேற்றவாசிகளை மதிப்பதில்லை என்ற கருத்தைத்தான் மிகைப்படுத்தப்பட்ட "உண்மைகள்" என்று சொன்னேன்..

மீண்டும் எனது பின்னூட்டத்தை நிதானமாக படித்துப் பாருங்கள்.. இங்கே 12 மணி நேரம் வேலை வாங்கவில்லை என்று சொல்லவில்லை நண்பர்களே.. அப்படி நான் சொல்லவே இல்லை.. அந்த 12 மணி நேர வேலையை ஏன் சொந்த ஊரில் செய்யக் கூடாது என்றுதான் ஆதங்கப் பட்டேன், நானும் ஒரு தமிழன் என்பதால்.

விசா வைத்திருந்த இந்தியர்களை வீணாக விசாரித்தது மலேசிய இந்தியர்கள் அல்ல நண்பரே.. மற்ற இன அதிகாரிகள். அந்த அவல நிலை எங்களுக்கும்தான்.. அந்த ஆதங்கத்தில்தான் கருத்துரைத்தேன்.

இங்கே தமிழ்நாட்டு பிரஜைகள் துன்புறுத்தப்பட்டால் அதை உலகுக்குச் சொல்லி நீதி கேட்பது எங்கள் ஊர் தமிழ் பத்திரிக்கையாளர்கள் தான்.. அவர்களுக்காக முதலில் ஞாயம் கேட்பது எங்கள் ஊர் ஹிண்ட்ராப்ஃ அணியினர்தான்.. நாங்கள்தான்.. ஓரிரு முதலாளிகளை சாடாமல் எங்களை ஒட்டுமொத்தமாக சாடுவது என்ன ஞாயம்?

முதலில் அசல் இடுகையையும் என் பின்னூட்டத்தையும் மீண்டும் ஒரு முறை வாசியுங்கள் நண்பரே. விதண்டாவாதம் அறிவுக்கு சத்துரு!

கிருஷ்ணா சொன்னது…

//காரணம் மலேசியர்கள் யாரும் 5 மணி நேரத்திற்கு மேல் எங்கும் வேலை செய்ய மாட்டார்கள்.//

இது பெரிய வேடிக்கை இல்லையா? எந்த வேலையானாலும் இங்கே குறைந்தது 8 மணி நேரம் செய்ய வேண்டும் நண்பர்களே!

//வார விடுமுறை கிடையாது. வருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜானுக்கு இயந்திரங்களுக்கு கூட விருமுறை கிடைக்கும்,ஆனால் இந்த மனித இயந்திரங்களுக்கு விடுமுறை கிடையாது.மீறினால் அடி,உதை. மாதம் முடிந்து சம்பளம் கேட்டால் சில நிறுவனங்களில் "சம்பளம் அப்டின்னா என்னப்பா?" என்று கேட்பார்கள், திமிறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.//

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து மிகைப்படுத்தி எழுதப்பட்டது இது! சம்பளமே இல்லாமலா அனைத்து தமிழ்நாட்டினரும் இங்கே வேலை செய்கின்றனர்? கொஞ்சம் ஓவரா இல்லை?!

ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டு பிரஜைகள் மட்டுமல்ல.. மலேசிய தமிழர்கள் ஒரு சிலர் கூட இவ்வித கொடுமைகளுக்கு ஆளான கதை கூட இங்கே உண்டு!

எனக்குத் தெரிந்த எத்தனையோ தமிழ்நாட்டினர்.. இங்கே பல்கலைக்கழக பேராசிரியர்களாக, மென்பொருள் வல்லுனர்களாக, தொழிலதிபர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எத்தனையோ மலேசிய தமிழர்கள் எத்தனையோ வகைகளில் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இங்கே மலேசியத் தமிழர்கள் தமிழநாட்டினரை கேவலமாக நடத்துகின்றனர் என்ற கூற்றைத்தான் 'மிகைப்படுத்தப்பட உண்மை' என்று சொன்னேன். அதன் அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை என்றால்.. அடுத்து தெலுங்கில் விளக்க முயற்சிக்கிறேன் நண்பா! மீரே செப்பண்டி..

குமரன் மாரிமுத்து சொன்னது…

துப்பறியும் சிங்கம்.. ஆஆஆ சாரிரி... துப்பறியும் கயித (தப்பா எடுத்துக்காதபா, உம்முடைய அழகிய படத்தைப் பார்த்து சூட்டிய பேருபா)C.I.D சிங்காரம் நல்ல விடயத்தையே முன்வைக்க முனைந்திருக்கிறார். வாழ்த்துகள்.

திரு. கிருஷ்ணா & பனங்காட்டான் அவர்களின் பின்னூட்டத்தையும் படித்தேன். திரு. கிருஷ்ணாவின் கூற்றுகளை நானும் ஏற்கிறேன். உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல் விவேகத்திற்கு வித்திட்டிருக்கிறார். வாழ்த்துகள்


//வயல்,நிலங்கள் மற்றும் தாலிகளை விற்று தமிழகத்திலிருந்து செல்லும் தொழிலாளர்களின் 12 மணி நேர உழைப்பின் மூலம் வரும் வரியை குளிரூட்டப்பட்ட அறையில் அமந்து கொண்டு தன் நாட்டு மக்களுக்கு வாரி வழங்குகிறது மலேசியா//

அய்யா, மேலே குறிபிடப்பட்டுள்ள செய்தியினை 'வயிற்றெரிச்சலுடன்' குறிப்பிட்டிருப்பதாகவே கருதுகிறேன். அன்னியத் தொழிலாளர்கள் வாயிலாகப் பெறும் வரிப் பணத்தை தன் நாட்டு மக்களுக்கு வாரிக்கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது? இந்த நடைமுறை மலேசியாவில் மட்டும்தான் இருக்கின்தறதா? சற்று சிந்தியுங்கள்.

மலேசியா, உள்நாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடாகும். ஏனெனில், பெருமளவில் வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுகின்றன. இது, இந்த நாட்டு அரசியலின்/அரசாங்கத்தின் ஆற்றலைப் புலப்படுத்துகிறது. ஏன் எல்லா வளங்களும் கொண்ட இந்திய நாட்டில் இந்த சூழல் நிகழவில்லை என்று நீங்களே கேட்டுப்பாருங்கள்.

இந்தியன் படம் பார்த்திருக்கின்றீரா? 'மற்ற நாடுகளில், கொடுக்கப்பட்ட வேலைக்கு மீறி செயல்பட கையூட்டு வாங்குகின்றனர்; ஆனால், இந்தியாவில் அடிப்படை வேலையைச் செய்வதற்கே கையூட்டு வாங்குகின்றனர்' என்று ஒரு வசனம் வந்ததே, நினைவிருக்கிறதா? ஏன் இப்படிப்பட்ட அரசியலை இன்னும் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்? பெரிய எண்ணிக்கையில் இந்தியர்கள் வெளிநாடுகளை நோக்கி வேலை தேடிச் செல்ல யார் காரணம்? ஆம், நிச்சயம் நீங்கள்தான் காரணம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருதாமல் குடும்ப பொருளாதார வளர்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல்வாதிகளை ஆதரித்தது நீங்கள்தானே!

மலேசியாவில் மொத்த மக்கள் தொகயில் 0.8% இந்தியர்கள். தற்சமயத்தில் மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.0%. இவ்வளவு வெளிநாட்டினர் மலேசியாவில் வேலை செய்ய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தும் கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் அரசாங்கம் கவிழும் அளவிற்கு தத்தளித்தது. ஏனென்றால், இந்த அரசாங்கத்தின் 'வேகம்' போதவில்லை என்று கருதுவதால் மக்கள் மாற்று அரசாங்கத்தை அமைக்க நெறுக்குதல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இந்தியாவில்.... (வங்காள தேசம், இந்தோனேசியா, பிலிபைன்ஸ் போன்ற நாடுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) எனன நடக்கிறது? நாட்டு மக்களின் வளமைக்கு வித்திட வேண்டிய அரசாங்கம் பல காரணங்களால் நிலைத் தன்மையற்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில், வெளிநாட்டு முதலீடுகள் எப்படி பெருமளவில் வரும்? புதிய வேலை வாய்ப்புகள் எப்படி அதிகரிக்கும்?

சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லோரையும் சாடுவது ஞாயமாகுமா நண்பரே? இந்த சிரமங்களை இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் மட்டும் அனுபவிக்கின்றனர் என்று நினைக்கின்றீரா? இல்லை. பிற நாடுகளிலிருந்து வந்து பணி செய்யும் மக்களிலும் சிலர் இதுபோன்ற சூழ்நிலையை அனுபவிக்கவே செய்கின்றனர் என்ற உண்மையை அறிய வேண்டும். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை தானே!

இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும். இந்தியாவில் வெளிநாட்டினர் வந்து வேலை செய்யும் காலம் வரவேண்டும். மனித நாகரிகத்தை பேணுவோம்; மிருக நாகரிகத்தை அடியோடு நறுக்குவோம்.

viji சொன்னது…

காரணம் மலேசியர்கள் யாரும் 5 மணி நேரத்திற்கு மேல் எங்கும் வேலை செய்ய மாட்டார்கள்


--> vanmaiyaga kandikiren. yaar sonathu ingu 5 mani neratirku mel velai seivathu illai enndru?

do u work with us? even a teacher work more than 6 hours + she do continue her school work at home.

I can understand ur feelings. But there are some issues not really acceptable. Put ur foot in my shoe, then u'll know my pain. dun simply judge anything!


Thank you!