வியாழன், 9 ஏப்ரல், 2009

நினைவுகள் :"அழகி"-ராயப்பேட்டை ராமு

2004 ம் வருடம் ஜூன் மாதம்  29  ம் தேதி  வெளிவந்த இந்த காவியத்தைக் கண்டு காயம்படாத மனமேது? இந்த  அழகி  எத்தனை பேரின் கட‌ந்த கால‌ வாழ்க்கையை சற்று ரீவைண்ட் செய்து பார்க்க உதவினாள். சிறுவயது பள்ளிவாழ்க்கையை என்றாவது ஒரு நாள் நினைத்து ஏங்கும் இதயங்களுக்கு மருந்தாக வந்த திரைப்படம் தான் இந்த அழகி. 

தங்கர்பச்சான் எழுதிய ஒன்பது ரூபாய் நோட்டு என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து "வெள்ளை மாடு" எனும் சிறு கதையே இந்த அழகி. இந்த அழகி,குளிர்சாதன அறையை புக் செய்து குரூப் டிஷ்கசன் நடத்தி உருவானவள் அல்ல. கிராமத்து இழையோடும் கபடமில்லா மக்களின் எதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்போடு கருவாண‌வள். 

நீண்ட நாட்களாக ஒளிப்பதிவு மட்டுமே செய்து வந்த தங்கர் முதன்முதலாக நெறியாள்கையின் வாசலை அடைந்த‌து  இந்தப் படத்தில் தான். கள்ளிச் செடியில் தன் பெயரோடு தான் விரும்பும் பெண்ணின் பெயரையும் எழுதுதல், கிராமத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறைகள்,அங்கே குறும்பு செய்யும் மாணவர்கள் என நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் கண்முன்னே எடுத்துரைத்த படம் இது. 

மூன்று பாகமான இந்தக் கதையில் தேர்ந்தெடுத்த கிராமத்துச் சிறுவர்கள் சிறுமிகள் என அனைவரின் நடிப்பும் கொள்ளை அழகு. மூன்றாவது பாகத்தில் சண்முகமாக பார்த்திபன்,தனலெட்சுமியாக நந்திதா தாஸ் நடித்திருந்தனர். அதிலும் கட்டையனாக  வந்து கலக்கிய கிராமிய தெம்மாங்கு பாடகர் திரு.குணசேகரின் நடிப்பு மிக பிரமாதம். கால்ந‌டை வைத்தியராக வரும் விவேக்குடன் பாண்டுவும், மண்ணடி மண்ணாராக வந்து அலப்பறை கொடுத்த லூஸ்மோகனும் தங்களின்  சிறந்த நகைச்சுவைகளின் மூலம் சிரிக்க வைத்தனர். இவ்வளௌ சீரியஸான படத்தில் இந்த நகைச்சுவைகள் இருந்திருக்கா விட்டால் படம் வியாபார ரீதியாகத் தோற்றிருக்கும். தங்கரின் பலமே அவரின் கிராமத்து வசண உச்சரிப்புகள் தான்.,பண்ருட்டி கடலூர் மக்களின் மொழிநடையை அதன் தன்மை மாறாமல் கொடுத்திருந்தார் தங்கர். 

பழைய காதலியை பிளாட்பார வாழ்க்கையில் கண்டு கல‌ங்கும் காதலன்  அவளையே தன் வீட்டில் வேலைக்காரியாக பார்க்க எத்தகைய மனக்கஷ்டத்திற்கு உள்ளாகிறான் என்பதை தன் சிறப்பான நடிப்பால் எடுத்துக்காட்டியிருந்தார் பார்த்திபன். அவர் கண்ணாடியை கழட்டி விட்டுத் துடைத்துப் போட்டுக் கொள்வதும், ஸ்கூட்டர் ஓட்டிச்செல்வதும் நடிப்பென்றே சொல்லமுடியாது அந்த அளவிற்கு அது மிக மிக இயற்கையாக இருந்தது.  தன் வீட்டு வேலைக்காரிதான் தன் கணவனின் முன்னாள்  காதலி என அறிந்து மணம்வெதும்பும் குடும்ப பெண்ணாக‌  தேவ‌யாணி. நடிப்பு பரவாயில்லை ரகம். தனத்தின் குடிகாரக் கணவனாக சாயாஜிசின்டே.,தனக்கு  கொடுத்ததை சரியாகச் செய்திருந்தார்.சுந்தரலிங்க வாத்தியாராய் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடிகள் கலகல. தங்கரின் படங்களில் நடிப்பவர்கள் நிஜப் பெயர்கள் மறந்து அவர்களின் பாத்திரப் பெயர்கள் மட்டும் தான் நினைவிருக்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். 

படத்தின் மிகப்பெரிய பலமே இசைதான். சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் நன்றாக இருக்கும் ஆனால் பிண்ணனியில் சொதப்பி விடுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனதோடு பிண்ணனி இசையும் கலக்கியிருந்தார் இசைஞானி மெஸ்ட்ரோ இளையராஜா. சோகக் காட்சிகளில் இவரது இசை கண்ணீரை வரவழைத்தது எனலாம். அந்த அளவிற்கு கதையோடு கதை சொல்லும் இசை. உங்குத்தமா எங்குத்தமா,ஒளியிலே தெரிவது தேவதயா,சிட்டு குருவி தந்த வாணத்துல, ஒரு சுந்தரி வந்தாலாம் என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.   

தங்கரெல்லாம் படமெடுத்தால் வெளங்குமாய்யா என சாலமன் பாப்பையா ஸ்டைலில் சொல்லியவர்களுக்கெல்லாம் ஆப்பு வைப்பது போல இந்தப் படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆக இந்த அழகி ஆழ்மணத்துக்குள் பதுங்கி கிடந்த சோகங்களை சுகமாக்கிக் கதை சொல்லியவள். 

மதிப்பெண்கள்: 

அனைத்துமே : 80/100 

UPDATE TODAY: அதிசய உலகம் "துரத்தி வந்த விபத்துக்கள்"

நன்றி :  கணைப்புகள் பற்றி தகவல் கொடுத்த திரு.யோகன் பாரீஸ் அவர்களுக்கு

2 கருத்துகள்:

நவநீதன் சொன்னது…

//அஇஅதிமுக நிர்வாகிகள் மட்டும் அம்மா படம் ஒட்டப்பட்ட பொட்டிகளை தெனந்தெனம் ஒரு 50 பேரயாவது கூட்டிக்கிட்டு போயி லெட்சலெட்சமா வளர்ச்சி நிதிய வாரிக்குடுக்குறாகலே! இது எப்படி சாத்தியமாவுது. //

இதெல்லாம் நாட்டுல பணப் புழக்கத்தை அதிகரிக்கவோ என்னவோ. ஆட்சிக்கு வரங்காட்டியும் நல்லது பன்றாங்கையா. இவிங்களுக்கு ஒட்டு போடுங்க. நாடு உருப்படட்டும். :-)

ttpian சொன்னது…

அவசர அறிவிப்பு
பெரியார் மடம்,வீரமனி சுவாமிகளின்,சிறப்பு பூஜை...
சொனிஅ குடும்பத்தினர் ந்லம் வேண்டி...
சிறப்பு அழைப்பு...கருனனிதி குருக்கல்...
அனைவரும் வருக....அருல் ஆசி பெறுக....
கட்டளை விசாரனை
பெரியார் திடல்...பூஜை சங்க நிர்வாகிகல்!