புதன், 29 ஏப்ரல், 2009

கலைஞரின் உண்ணாவிரத நகைச்சுவைகள்

அறிவிப்பு: இது வெறும் நகைச்சுவையேயன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல‌ 

முன்ன ஒரு காலத்துல ஆண்டிக்காடு அப்டிங்கிற ஒரு கிராமத்துல‌ முதன்முதலாக அந்த ஊர் மிராசுதாரு ஒரு டூரிங் டாக்கீஸ் ஓப்பன் பண்ணுனாராம். ஒரு வாரம் கழிச்சி இந்த விசயம் கேள்விப்பட்டு பக்கத்து கிராமத்துப் பண்ணையாரு முதன்முதலா சினிமா பார்க்க ஆசைப்பட்டு தன் கணக்குப்பிள்ளையோடு வண்டியக் கட்டிக்கிட்டு ஆண்டிக்காட்டுக்கு பயணமானாராம். அந்த டூரிங்டாக்கீஸ பாத்தவுடன் பண்ணையாருக்கு குஷி தாங்கலயாம். காரணம் அவர் முதன்முதலா சினிமா பாக்க போறாருல்ல. டூரிங் டாக்கீஸூன்னா அந்தக் காலத்துல சேரெல்லாம் கிடையாது. வெறும் மணல் தான். டிக்கெட்ட வாங்கிக்கிட்டு முன்பக்கமா போயி மணல மேடு குமிச்சி உக்காந்தாராம் பண்ணையாரு. 

பக்கத்திலேயே பல்ல இளிச்சிக்கிட்டு கணக்குப்பிள்ளையும் உக்காந்தாராம். படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல ஒரு மழைக்காட்சி வந்ததாம். டப்புன்னு பண்ணையாரு, தன் கையில இருந்த குடைய எடுத்து விரிச்சாராம். கணக்குப்பிள்ளை டப்புன்னு தான் தோளில் போட்டிருந்த துண்ட எடுத்து தலையில போட்டுக்கிட்டாராம். கொஞ்ச நேரம் கழிஞ்சி மழை சீன் முடிஞ்சதும் குடையை மடக்கிய பண்ணையாரு பக்கத்தில இருந்த கணக்குப் பிள்ளைகிட்ட,"யோவ் கணக்கு வெளில எப்டி மழை பேஞ்சிருக்குன்னு பாத்திட்டு வாய்யா" அப்டின்னு சொன்னாராம்.வெளிய வந்த கணக்கு நேரே சிறுநீர் கழிப்பிடத்துக்குப் போயி அங்கின ஈரமா இருந்த இடத்துல கைய வச்சி அழுத்திப் பாத்துட்டு வேகமா வந்து பண்ணியாருகிட்ட அய்யா! உள்ள பேஞ்ச மழை வெளிய கம்மி தான். 

வாங்க அடுத்த மழை வருவதற்குள் நாம வண்டியக் கட்டிக்கிட்டு ஊருக்குப் போயிடலாம்னு சொல்லி ரெண்டு பேரும் ஊருக்கு கெளம்புனாங்களாம். வர்ற வழியெல்லாம் மக்களிடம் அங்க நல்ல மழை நம்ம இந்த ஊர்ல மழையே இல்லையே அப்டின்னு சொல்லிக்கிட்டே வந்தாராம். அதக்கேட்ட மக்கள் என்ன நம்ம பண்ணையாரு திடீர்னு என்னமோ சொல்றாரு. சித்திர மாசத்துல எப்படி மழை பேயும் அப்டின்னு கேட்டாங்களாம். 

அதுக்கு ஒருத்தரு ஏ! ஆத்தா சொல்றது யாரு, நம்ம தலைவராச்சே! உண்மையாத் தான் இருக்கும்.நாமெல்லாம் அவருக்கு உடன்பிறப்பு தானே! அப்ப இதெல்லாம் நம்பித்தான் ஆவனும்னு சொன்னாராம். இந்த மேட்டரு ஓரளவு புரிஞ்சிருக்கும் நெனக்கிறேன். நீங்க அப்டியே போயி கலைஞரின் உண்ணாவிரதக் காமெடியப் பாருங்க. 

17 கருத்துகள்:

டக்ளஸ்....... சொன்னது…

நல்ல ஒப்பீடு பாஸ்...!

Monks சொன்னது…

Photos and comments are
really superb :)

Senthil சொன்னது…

superb comparison

ராம கிருஷ்ணன் சொன்னது…

கபாலி அண்ணாச்சி, அப்டியே இதை நம்ம லக்கி லுக் சாருக்கு சமர்ப்பணம் செஞ்சிடுங்கோ...பேஷ்.. பேஷ்..நன்னாயிருக்கு...!

அஹோரி சொன்னது…

அருமை . பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகளை.

விக்னேஷ்வரி சொன்னது…

ரொம்ப நல்லா ஒப்பிட்டிருக்கீங்க.
இதுல முதலா இருக்குற அறிவிப்பு தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு. இதுல எங்கே நகைச்சுவை இருக்கு. உண்மை தானே இருக்கு.

உண்மையை அறிவிப்பு இல்லாமலே, தைரியமா எழுதுங்க.

kailash,hyderabad சொன்னது…

photo kku etra super comments.nijamaa
current poirunthaa nalla irunthirukkum.a/c yile irukkuravangalukku jananga kashtam konjam therinjirukkum

தீப்பெட்டி சொன்னது…

நல்ல கதை...

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//டக்ளஸ்....... கூறியது...
நல்ல ஒப்பீடு பாஸ்...!//

வருகைக்கு நன்றி அண்ணாத்தே. தொடர்ந்து நம்ம கடைக்கு வாங்க.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Monks கூறியது...
Photos and comments are
really superb :)//

Thanks nna

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Senthil கூறியது...
superb comparison//
Thanks sir

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//ராம கிருஷ்ணன் கூறியது...
கபாலி அண்ணாச்சி, அப்டியே இதை நம்ம லக்கி லுக் சாருக்கு சமர்ப்பணம் செஞ்சிடுங்கோ...பேஷ்.. பேஷ்..நன்னாயிருக்கு...!//

ஏன் அண்ணாத்த என்னய லக்கிலுக்கு சாராண்ட மாட்டிவுடுறீங்க. தொடந்து வங்க‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// அஹோரி கூறியது...
அருமை . பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகளை.//

1000 பொற்காசெல்லாம் வேண்டாமுன்னே ஹிஹி 1000 ரூவா இருந்தா மணியாடர்ல் அனுப்புங்க‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// விக்னேஷ்வரி கூறியது...
ரொம்ப நல்லா ஒப்பிட்டிருக்கீங்க.
இதுல முதலா இருக்குற அறிவிப்பு தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு. இதுல எங்கே நகைச்சுவை இருக்கு. உண்மை தானே இருக்கு.

உண்மையை அறிவிப்பு இல்லாமலே, தைரியமா எழுதுங்க.//

யக்கா! இப்புடி ஒரு அறிவிப்ப குடுத்திட்டா சட்ட சிக்கல்லேந்து எஸ்கேப் ஆயிடலாம்ல அதுக்குத்தான். வருகைக்கு நன்றீ

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//kailash,hyderabad கூறியது...
photo kku etra super comments.nijamaa
current poirunthaa nalla irunthirukkum.a/c yile irukkuravangalukku jananga kashtam konjam therinjirukkum/

Thank u sir., stay tuned

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//தீப்பெட்டி கூறியது...
நல்ல கதை...//

நன்றி தீப்பெட்டி. இதப் பத்தி ஒரு 4 பேருகிட்ட பத்தவையுங்க‌

பெயரில்லா சொன்னது…

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,

தோள்கள் திணவெடுத்து, தமிழன் இனமழிக்க

துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!