வியாழன், 23 ஏப்ரல், 2009

இயல்பு வாழ்க்கையை முடக்கிய சுயநலக் கலைஞர்

இலங்கையில் போரினால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப் படுவது குறித்து அஇஅதிமுக கூட்டணித் தலைவர்கள் பலரும் தலைவர் கலைஞருக்கு எதிராக பல கருத்துக்களைக் கூறி வந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு NDTV க்கு பேட்டியளித்த தலைவர் கலைஞர் பிரபாகரன் என் நண்பன் என்று சொல்லியிருந்தார். அந்தப் பேட்டியும் NDTV யில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியால் அதிருப்தியுற்ற காங்கிரஸ் மேலிடம் எலக்சன் நேரத்தில் இதெல்லாம் தேவையா?  என கலைஞருக்கு ஒரு கடியைப் போட்டதாகவும் உடனே தான் ஒரு சுய அழைப்புப் பேட்டியைக் கொடுத்து NDTV திமுகவிற்கு எதிரான டிவி என்றும் பிளேட்டைத் திருப்பிப் போட்டார் என்றும் கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. NDTV யில் ஒளிபரப்பான பேட்டி கலைஞரின் சொந்தப் பேட்டியேயன்றி அது போலியானது அல்ல

இந்த நிலையில் கலைஞர் மாற்றி மாற்றி உலறுவதாக ஜெயலலிதா  தெரிவித்தார். அதே போல ராமதாஸ், எத்தனை நாளைக்குத் தான் கடிதமும் தந்தியும் அனுப்பிக்கொண்டிருப்பது, ஃபோனில் பேசினால் என்ன என்றும் எல்லாரும் சேர்ந்து சும்மா கெடந்ததயெல்லாம் கிளப்பிவிட்டு விட்டார்கள்

மக்களிடையே தன் ரேட்டிங் குறைவதை உணர்ந்த தமிழினத் தலைவர் கலைஞர் மீண்டும் ஒரு அவசர அடைப்புக்கு அழைப்பு விடுத்தார்.இதற்கு தி.மு.. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பஸ்கள் ஓடவில்லை. ஆளும் கட்சி பந்த் என்பதால் பயந்து கொண்டு யாருமே  வேலைக்கு வரவில்லை. அனைத்து பஸ் டெப்போக்களும் மூடப்பட்டன. 

சென்னையில் காலையில் இருந்து மாநகர பஸ்கள் ஒன்று கூடஓடவில்லை. மாநகர பஸ்கள் ஓடாததால் சென்னையில் அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடியது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

பஸ்கள் இல்லாததை பயன்படுத்தி ஆட்டோக்களும்,ஷேர் ஆட்டோக்களும் கடும் கொள்ளையில் இறங்கினர்.

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன ஒரு சில டீக்கடைகள், சிறிய பெட்டிக்கடைகள் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் இன்று சிறப்புச் சலுகை அளித்து வியாபாரம் களைகட்டியது

சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் ஓடின. தமிழ் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டது. 

சென்னையில் அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஆனால் வேலை நிறுத்தத்தை வைத்து முன்கூட்டியே திட்டமிட்ட அரசு ஊழியர்கள் யாருமே வேலைக்கு வரவில்லை. சன்டிவி, கே டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றில் "வேலை நிறுத்த சிறப்பு" அதிரடி திரைப்படங்கள் ஒளிபரப்பப் பட்டன. 

சென்னையில் சில கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று பஸ்கள் ஓடாததால் தேர்வு எழுதச் செல்லும் மாணவ -மாணவிகள் மிகமிக பாதிக்கப் பட்டனர், ஆட்டோ பிடித்தும், இரு சக்கர வாகனங்களில் சென்றும் தேர்வு எழுதினர். அனேகமாக இன்றைக்கு விடைத்தாளில் "கலைஞர் ஆட்சி ஒழிக" என்று எழுதினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 

ஆக இந்த வேலை நிறுத்தத்தால் இலங்கைக்கு குடி நீர் சப்ளை, பால் சப்ளை நிறுத்தப்பட்டதா? அல்லது படம்பார்க்க தியேட்டருக்கு வந்த ராஜபக்சே காட்சி ரத்தானதால் திரும்பிச் சென்றாரா?  இலங்கை வாழ் சிங்கள‌  மக்களோ, மகிந்த ராஜபக்சேவோ எந்த வகையிலும் பாதிக்கப் படவுமில்லை, பாதிப்புள்ளாகவும் மாட்டார்கள். முழுக்க முழுக்க தமிழகத்தின் ஏழை, நடுத்தர வர்க்கங்கள், கூலித் தொழிலாளர்கள் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தோடு இந்த கடையடைப்பு,பந்த் இம்சைகள் ஒழியட்டம். வளமான தமிழகமே வலிமையான பாரதம்.

இவ்ளொ இம்சைய குடுத்ததோட நிறுத்தாம ஹாயா உக்காந்து ஒரு கவித வேற எழுதி இருக்காரு. அதப் படிச்சித் தொலைக்க விதியேன்னு இங்கின  கிளிக்குங்க. 

1 கருத்து:

கிரி சொன்னது…

//மக்களிடையே தன் ரேட்டிங் குறைவதை உணர்ந்த தமிழினத் தலைவர் கலைஞ‌ர் //

:-))))))