திங்கள், 13 ஏப்ரல், 2009

ஞாயிறு அதிரடி: "கோடையை சமாளிக்க சில குளுகுளு ஐடியாக்கள்"

கோடையைச் சமாளிக்க ஏஸி இயங்கும் இடங்கள் மிகச்சிறந்தது.அது மட்டுமின்றி ஃபிரஸ் ஜூஸ்கள், தர்பூஸ்,வெள்ளரி,கிர்ணி பழங்களும் மிகச்சிறந்தது. இந்த ஏப்ரலும் மே'யும் ஏன் தான் வருகிறதோ? என்று நொந்துகொள்ளும் உள்ளங்களுக்கு அந்த ஏப்ரலும் மே'யுமே உங்களைக் கண்டு ஓடும் அளவிற்கு சில ஐடியாக்கள் இதோ

ஐடியா1: கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தால் வேலைக்காவாது. நேரே சிட்டி சென்டர்,ஸ்பென்சர் பிளாசா போன்ற இடங்களுக்கு சென்று ஒவ்வொரு கடையாக சாப்பிங் செய்வது போல நேரத்தை ஓட்டலாம். நிச்சயமாக அங்கே ஏசி போட்டிருப்பார்கள். சாம்ஸங் ஸோரூமில் போய் சோனி கிடைக்குமா என்றும் ஒனிடா ஸோரூமில் போய் சாம்சங் இருந்தா பெட்டர்னு நெனக்கிறேன் என பீலா விடலாம்.சேல்ஸ் மேனும் உங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த கஸ்டமரை டீல் பண்ண போய் விடுவார்.எல்லா பிராண்டும் கிடைக்கிற ஸோரூம் போய் இதை பாலோ பண்ணினால் உங்களை உள்ளே கொண்டு போய் உரித்துவிடுவார்கள் கவணம். 

ஐடியா2: உங்கள்  நண்பர்களில் அப்பாவியாக யாராவது நிச்சயம் இருப்பார்கள்.அவர்களுக்கு போன் போட்டு ஒரு ஏசி தியேட்டருக்கு நூன் ஸோவுக்கு வரச்சொல்லலாம்.அதற்கு முன் நீங்கள் அங்கே சென்று கவுண்டர் அருகே நின்று கொண்டு உங்கள் நண்பர் அருகே வருவதைப் பார்த்து உடனே சத்தம் போடலாம்.டேய் மாமா..,என் பர்ஸ எவனோ அடிச்சிட்டான்டா.யாரையுமே நம்ப முடியலடா என‌ பயங்கர சத்தம் போட்டுட்டு பணம் போனா போவுது மாமே., நான் படத்துக்கு வரச்சொல்லிட்டு உன்னய‌ டிக்கெட்டு எடுக்கச்சொன்னா அது என்னடா நியாயம்.,சே! என் நட்பு கலங்கமாயிடுச்சே என கதை விடலாம். உடனே உங்க நண்பரும் யார் டிக்கெட்  எடுத்தா என்ன மச்சான், என‌  பஸ்ர்ட் கிளாஸ்ல டிக்கெட் எடுப்பார். நல்லா ரிலாக்ஸ் பண்ணிட்டு இன்டெர்வெல்ல ஐஸ்கிரீம், முடிஞ்சா மதியச்சாப்பாட்டுக்கும் அவருகிட்டயே மீட்டர போட்டுரலாம். 

ஐடியா3: பாரீஸ் பஸ்டாண்டில் தாம்பரம் செல்லும் ஏசி பஸ் வந்தவுடன் ஏறி அமர்ந்து விடவும்.எப்படியும் 1/2 மணி நேரம் கிடந்து பிறகு தான் புறப்படும். பஸ் கிளம்பியவுடன் வேகமாக நடத்துனரிடம் சென்று வண்ணாரப்பேட்டைக்கு டிக்கெட் கேட்கவும். உடனே அவர் போர்ட பாத்து ஏறுங்க சார் என‌ உங்களை அங்கேயே இறக்கி விட்டுவிடுவார்.ஏசி பஸ் என்பதால் நடத்துனர் கொஞ்சம் டீஜன்டாக நடந்துகொள்வார்.அந்த பஸ் சென்றவுடன் அடுத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து இதையே பாலோ பண்ணலாம். 

ஐடியா4: அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கண்ணியமிக்க அரசு ஊழியர்கள் தாங்கள் வழக்கமாக எடுத்துச்செல்லும் குமுதம்,விகடன்,நக்கீரன் ஆகியவற்றுடன் பணைவிசிறியையும் எடுத்துச்செல்லலாம். காரணம் அரசு அலுவலகங்களில் இருக்கும் மின் விசிறிகளும் அரசு ஊழியர்களைப் போல வேலையே செய்யாது. அதுமட்டுமின்றி அடிக்கடி ஸ்டிரைக் பண்ணும்.எனவே தான் "கேதான் ஃபேன் இல்லாதவர்களுக்கு கைதான் ஃபேன்" என்பதை பாலோ செய்யுங்கள். 

ஐடியா5: தேர்தல் பொதுக்கூட்டம் போடும் வேட்பாளர்கள் முடிந்த அளவு கூட்டங்களை நண்பகலில் நடத்தலாம்.காரணம் உங்களின் அல்லக்கைகள் மற்றும் ஜால்ராக்கள் உங்களை வள்ளலே,தள்ளலே என "ஐஸை" அள்ளிவைத்து உங்களை கூலாக்கி விடுவார்கள். 

ஐடியா6: ஞாயிற்றுக்கிழமைகளின் டிநகர் ரங்கநாதன் தெருவுக்கு செல்லவும். அங்கு இருக்கும் கூல்டிரிங்க்ஸ் கடையில் உங்களுக்கு எத்தனை பிரஸ்ஜூஸ் வேண்டுமோ வயிறு முட்ட குடித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் குபீரென கூட்டத்துக்குள் பாய்ந்து  எஸ்கேப் ஆகிவிடவும்.மிகக் கவணம், அவர்கள் கையில் மாட்டினால் கரும்புமிஷினுக்குள் உங்களை விட்டு பிழிந்து விடுவார்கள் ஜாக்கிரதை.

ஐடியா7: உங்கள் வீட்டு அருகேயுள்ள குப்பைத்தொட்டிகளுக்குள் பழைய கிரடிட் கார்டுகள் கிடக்கும்.அதை எடுத்து வைத்துக்கொள்ளவும்.கோடைக் காலங்களில் ஆங்காங்கே தர்பூஸ் பழம், வெள்ளரி பழம்,கிர்ணி பழம் வண்டிகளில் விற்பார்கள். அங்கு சென்று உங்களுக்கு வேண்டிய மட்டும் சாப்பிட்டு விட்டு பர்ஸைத் திறந்து பார்த்து விட்டு ஓ!சிட் சாரி சார்.பணம் எடுக்க மறந்துட்டேன். உங்க கடையில் கிரடிட் கார்டு அக்செப்டா? என அந்த கார்டை கையில் எடுத்துக் கொண்டு கேட்கவும். அதற்கு அவர் பரவால்ல சாரு.அப்பாலிக்க வந்து குட்துக்கோ, அப்டின்னு சொல்வார். ரொம்ப தேங்ஸ் சார் என்று சொல்லி அப்படியே நழுவி விடலாம்.,உசார் தற்போது சில பழவண்டிகளில் கிரடிட் கார்டு மிசின் வைத்திருக்கிறார்கள் கவணம்.
பின்குறிப்பு: இதனால் வரும் பின்விளைவுகளுக்கு கபாலி பொருப்பாக மாட்டார்
UPDATE TODAY : அதிசய உலகம் "குறையாத அழகுக் குமரி"

22 கருத்துகள்:

கிரி சொன்னது…

//சேல்ஸ் மேனும் உங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த கஸ்டமரை டீல் பண்ண போய் விடுவார்//

:-))))))))

Mohan சொன்னது…

//அரசு அலுவலகங்களில் இருக்கும் மின் விசிறிகளும் அரசு ஊழியர்களைப் போல வேலையே செய்யாது//

அண்ணே! நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கீங்க! இப்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஏ.சி. இருக்கிறது- எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகி வருவதால்!

Senthil சொன்னது…

eppadinne ungalaale mattum mudiyuthu?

Karthikeyan G சொன்னது…

கபாலி சார், இன்னுமொரு ஐடியா இருக்கு..

போலீசிடம் Unwanted ஆக சென்று "நான் ISI உளவாளி, என் கூட்டாளிகள் காஷ்மீரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒளிந்திருக்கிறார்கள். நான் அவர்கள் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்க தயார்." என்று ஹிந்தியில் சொல்லலாம். கடமை தவறாத காவல்துறை உங்களை காஷ்மீர் அழைத்து செல்லும், நாமும் அவர்களை அங்கு இங்கு என அலைகழித்துவிட்டு சம்மர்' முடிந்ததும் "நான் சும்மா தமாசுக்கு சொன்னேன்" என சொல்லி விடலாம்.

:)

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// கிரி கூறியது...
//சேல்ஸ் மேனும் உங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த கஸ்டமரை டீல் பண்ண போய் விடுவார்//

:-))))))))//

;-(((((((((((
அண்ணே அப்டின்னா தேங்ஸூன்னு அர்த்தம்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Mohan கூறியது...
//அரசு அலுவலகங்களில் இருக்கும் மின் விசிறிகளும் அரசு ஊழியர்களைப் போல வேலையே செய்யாது//

அண்ணே! நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கீங்க! இப்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஏ.சி. இருக்கிறது- எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகி வருவதால்//

மோகன் சார் இன்னும் எங்க ஊரு தாசில்தார் ஆபிஸ்லயெல்லாம் பழய ஹைதர்காலத்து ஃபேன் தான் ஓடுது.ஆனா அவுங்க தினம் பாக்குற காசுக்கு தமிழ் நாட்டுக்கே ஓப்பன் ஏசி போடலாம்.வருகைக்கு நன்றி சார்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Senthil கூறியது...
eppadinne ungalaale mattum mudiyuthu?//

அதுவா ஃபுலோவுல வருது. வருகைக்கு நன்றிண்ணே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G கூறியது...
கபாலி சார், இன்னுமொரு ஐடியா இருக்கு..

போலீசிடம் Unwanted ஆக சென்று "நான் ISI உளவாளி, என் கூட்டாளிகள் காஷ்மீரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒளிந்திருக்கிறார்கள். நான் அவர்கள் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்க தயார்." என்று ஹிந்தியில் சொல்லலாம். கடமை தவறாத காவல்துறை உங்களை காஷ்மீர் அழைத்து செல்லும், நாமும் அவர்களை அங்கு இங்கு என அலைகழித்துவிட்டு சம்மர்' முடிந்ததும் "நான் சும்மா தமாசுக்கு சொன்னேன்" என சொல்லி விடலாம்.//

கார்த்தி சார்! சூப்பர் கமாண்டு. வெரிவெரி குட். என் மேட்டரயெல்லாம் தூக்கி சாப்பிட்டுடிச்சி. அருமை. தொடர்ந்து இணைந்திருங்கள்

நாமக்கல் சிபி சொன்னது…

நைஸ் போஸ்ட்!

விகடனுக்கு அனுப்பவும்!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// நாமக்கல் சிபி கூறியது...
நைஸ் போஸ்ட்!

விகடனுக்கு அனுப்பவும்!//

நன்றிண்ணே! நம்ம போஸ்டயெல்லாம் விகடனுல எடுத்துக்குவாகலா????

நாமக்கல் சிபி சொன்னது…

//நன்றிண்ணே! நம்ம போஸ்டயெல்லாம் விகடனுல எடுத்துக்குவாகலா????//

:)

ஐய! ஏன் மாட்டாங்க!

அனுப்புமைய்யா!

நாமக்கல் சிபி சொன்னது…

youthful@vikadan.com,av@vikatan.com
இந்த மெயில் ஐடிக்கு உங்க பதிவை அப்படியே மெயில்ல காப்பி பண்ணி போட்டுட்டு, சப்ஜெக்ட்லே "படைப்புகள்" னு போட்டு இந்த பதிவோட லிங்கையும் சேர்த்து அனுப்புங்க!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//நாமக்கல் சிபி

//


தகவலுக்கு நன்றிண்ணே! முயற்சி செய்றேன்

நாமக்கல் சிபி சொன்னது…

முயற்சியெல்லாம் கிடையாது!

அனுப்பிட்டு எனக்கு சொல்லுங்க1

அனுப்பிட்டேன்னு!

பனங்காட்டான் சொன்னது…

இன்னும் விகடனுக்கு அனுப்பலையா?

நாமக்கல் சிபி சொன்னது…

//இன்னும் விகடனுக்கு அனுப்பலையா?//

நானே அனுப்பிட்டேன்!

ஹிஹி!

பட்டாம்பூச்சி சொன்னது…

Ideas ellam supero super :))

Karthikeyan G சொன்னது…

//சூப்பர் கமாண்டு. வெரிவெரி குட். என் மேட்டரயெல்லாம் தூக்கி சாப்பிட்டுடிச்சி. அருமை. //

இப்படி வஞ்சனை இல்லாமல் பாராட்டும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. :)

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// பனங்காட்டான் கூறியது...
இன்னும் விகடனுக்கு அனுப்பலையா?//

எங்க அண்ணன் நாமக்கல்காரரு அனுப்பிட்டாருய்யா அனுப்பிட்டாரு.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// நாமக்கல் சிபி கூறியது...
//இன்னும் விகடனுக்கு அனுப்பலையா?//

நானே அனுப்பிட்டேன்!

ஹிஹி!//

அண்ணன்! உதவிக்கி நன்றி.என் அடுத்த போஸ்டயும் நீங்களே அனுப்பிடுறீங்களா? ஹி.,ஹி., சும்மா வெளயாட்டுக்கு சொன்னேன்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// பட்டாம்பூச்சி கூறியது...
Ideas ellam supero super :))//

Thanks so thanks

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Karthikeyan G கூறியது...
//சூப்பர் கமாண்டு. வெரிவெரி குட். என் மேட்டரயெல்லாம் தூக்கி சாப்பிட்டுடிச்சி. அருமை. //

இப்படி வஞ்சனை இல்லாமல் பாராட்டும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. :)//


நன்றியெல்லாம் வேனாம் நைனா! தொடந்து நம்ம கடைக்கி வாங்க அது போதும்