திங்கள், 6 ஏப்ரல், 2009

ஞாயிறு அதிரடி:”வேட்பாளர்களுக்கு சில ஆலோசனைகள்”

வரப்போகிற தேர்தல்ல போட்டியிட நீங்க மனுச்செஞ்சிருக்கீங்களா? அப்டின்னா கீழே உள்ள யோசனைகளைப் படிச்சி அதன்படி செயல்பட்டால் மக்கள் மனசைக் கவர்பண்ணி ஓட்ட அள்ளிடலாம்.அதன்படி நடந்து  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

1)  வரப்போற எலக்சனுக்கு ஓட்டு வாங்கனும்னா சும்மா போய் கும்பிடு போட்டா சுத்தமா கதைக்கு ஆவாது. இப்ப இருக்கிற வாக்காளரெல்லாம் ஆட்டோ மாதிரி. அவங்களுக்கு மீட்டர் போட்டாத்தான் வண்டி ஓடும்.

2) முன்னயெல்லாம் 50 ரூவாய்க்கே 100 ஓட்டுப் போடும் வாக்காளப்பெருங்குடி மக்கள் தங்களுடைய‌ ரேட்ட ஏத்தி ரொம்ப நாளாச்சி.இப்ப மினிமம் சார்ஜ் அப்டிங்கிறது 1000 ரூபாய் தான்.கருப்பு வச்சிக்கிறவங்க‌ இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி கருப்புகளைக் கஞ்சிபோட்டு வெளுத்துவிடலாம். தப்பித்தவறி சேசாத்ரி பவன்ல (Income Tax) வேல பாக்குற ஆபிஸர் வீட்டுக்கும் இப்டி செஞ்சிங்கன்னா, அவரு உள்ளாரக் கூப்பிட்டு  உங்கள வெளுத்துடுவாறு.

3) கருப்புக்கு வசதியில்லாதவங்க சிவகாசில ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு ஆர்டர்கொடுக்கலாம். நீங்க ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது கும்பலோட கும்பலா இந்த நோட்டயும் வச்சி தள்ளிவிட்டுடலாம். நீங்கபாட்டுக்கு ஆர்வக்கோளாறுல 2000 ரூபாய் நோட்டு அடிச்சி வினியோகம் செஞ்சிங்கன்னா மக்கள் உங்கள குணியவச்சி குமுறிவிடுவார்கள்.

4)  நான் வெற்றியடைந்தால் சிட்டிபஸ்ஸில் சீட்டுப் புடிச்சித் தருவேன், எலக்டிரிக் டிரைன்ல எடம் புடிச்சித் தருவேன், தண்ணீர் லாரில தண்ணி புடிச்சித்தருவேன் அப்டின்னு வாக்குறுதிகளை அள்ளி விடலாம்.

 5) அமெரிக்கா,லண்டன் போக விசா வேனுமா இல்லாகாட்டி உங்க புள்ளைக்கு LKG சீட்டு வேனுமான்னு கேட்டா எல்லாரும் கஷ்டமானத அதாவது LKG சீட்டத்தான் வேனும்னு கேட்பாங்க. நீங்களும் நான் ஜெயிச்சிட்டா உங்க எல்லாரு புள்ளிங்களுக்கும் LKG சீட்ட கியூவுல நின்னு  வாங்கித்தாரேன்னு வாக்குறுதி தரலாம். (சென்னை வேட்பாளர்களுக்கு மட்டும்)

6)  குடம்,வாளி,சோப்புடப்பா குடுத்து ஓட்டுகேக்குறதெல்லாம் பழய மெத்தட். இப்ப உள்ள டிரண்டுக்கு ஏத்த மாதிரி நீங்க புதுப்பட DVD களைக் கொடுத்து வாக்குகேட்கலாம். தப்பித்தவறி விஜய் நடித்த வில்லுபட DVD யை கொடுத்தீங்கன்னா நீங்க அவ்ளோதான். அந்த படத்த பாத்த கடுப்புலயும் அதக்குடுத்த உங்க மேல உள்ள கடுப்புலயும் உங்க‌ ஆப்போஸிட் வேட்பாளருக்கு ஓட்ட குத்தி தீத்துருவாங்க, ஜாக்கிரதை.

7)  நீங்க ஏற்கனவே ஜெயிச்ச வேட்பாளரா இருந்தா உங்கத் தொகுதிக்கு ஓட்டு கேட்டுப் பொகும் போது சிட்டிசன் படத்துல வர்ர அஜீத் மாதிரியோ இல்லன்னா தசாவதாரம் கமல் மாதிரியோ வேசம் போட்டுகினு போங்க. ஏன்னா 5 வருசம் கழிச்சி ஓட்டுக்கேட்க நீங்க தொகுதிக்கு வந்திருக்கிற தகவல் கிடைச்சா மக்கள் உங்கள குனியவச்சி குமுறிடுவாங்க கவணம்.

8)  பெண்களின் வாக்கினைக் கவர புதியதாக‌ ஒரு 24 மணி நேர முழுக்க முழுக்க மெகா சீரியல் மட்டுமே ஒளிபரப்பாகும் ஒரு சேனலை "ஒப்பாரித் தொலைக்காட்சி" என்ற பெயரில் ஆரம்பித்து அழுது கண்ணீர் வடிக்கும் சீரியல்களுக்கு இடையிடையே நீங்களும் கண்ணீரும் கம்பலையுமாகத் தோன்றி தேம்பித்தேம்பி கதறக் கதற‌ அழுதபடியே வாக்குக்கேட்டால் உங்கள் மேல் பரிதாபப் பட்டு ஓட்டுக்களை அள்ளித்தெளித்து விடுவார்கள்.

9)  தமிழ் ஆதரவாளர்களைக் கவரணும்னா  நீங்க‌  புலிவேசம் போட்டுக்கொண்டு தெருத்தெருவாய் போய் "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, சிரிலங்கா வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ" அப்டின்னு ஒரு ஆட்டத்த போட்டிங்கன்னா அதப் பாக்குற மக்கள் நீங்க ஈழ ஆதரவாளர்னு நெனச்சி உங்களுக்கு ஓட்டுப்போட்டுடுவாங்க, தப்பித் தவறி போலீஸ் கண்ணுல மாட்டுனா அப்பறம் உங்களுக்கு புழல்ல தான்  எலக்சன் நடக்கும் உசாரு.

10) வறுமையை ஒழிக்கிறேன்னு வாக்குறுதி குடுத்தாலும் மக்கள் நம்புவாங்க, தப்பித்தவறி மின்வெட்ட ஒழிக்கிறேன்னு வாக்குறுதி குடுத்தீங்கன்னா நீங்க காலி. அப்றம் மக்கள் உசாராகி உங்கள படுக்கவச்சி பம்படிச்சிடுவாங்க ஜாக்கிரத.

பின்குறிப்பு: இந்த அட்வைஸ்கள பாலோ பண்ணி கிடைக்கிற‌ பின்விளைவுகளுக்கு கபாலி பொருப்பாக மாட்டார்.

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

1 கருத்து:

கிரி சொன்னது…

ஐடியா நல்லா இருக்கு :-))