புதன், 15 ஏப்ரல், 2009

மதுரையில் நடந்த‌ அதிசயம்

மதுரைன்னு சொன்னாலே முன்ன அழகர் தான் ஞாபகத்துக்கு வருவார்.ஆனா இப்ப மதுரைன்னு சொன்னாலே அண்ணன் அழகிரி தான் ஞாபகத்துக்கு வர்றார். இதுவும் மதுர சம்பந்தமான அண்ணன் அழகிரி சம்பந்தமான மேட்டருதான்.அதுக்கு முன்னாடி ஒரு சின்ன முன்னோட்டத்த பாத்துறலாம்

இந்தியாவின் தேசியக்கட்சிகளில் கம்னியூஸ்டு கட்சிகள் இன்றியமையாதவை. உலக அளவில் கம்னியூஸ்டுகள் இருந்தாலும் ஒன்றை மற்றொன்றுடன் லிங்க் வைத்துக்கொளவதில்லை. முன்னர் ஒருதடவை பாராளுமன்ற விவாதத்தின் போது  பாஜகவின் முன்னனித் தலைவர் ஒருவர், கம்னியூஸ்டுகள் தான் முதன்முதலில் உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று அவர்களைப் பார்த்து கிண்டல் செய்யும் நோக்கத்தோடு கூறிச்சிரித்தார், அதற்கு கம்னியூஸ்டின் ஒரு முன்னனி தலைவர் உடன் எழுந்து " நாங்கள் தான் உண்டியலைக் கண்டுபிடித்தோம் என்பதை ஒத்துக்கொள்கிறோம், ஆனால் பாஜகவினர் தான் அந்த உண்டியலை உடைப்பதை கண்டிபிடித்தவர்கள் என்று ஒரு போடு போட சபையே "ஹோ" என சிரித்தது. அந்த பாஜக தலைவருக்கு மிகமிக நோஸ்கட் ஆகிவிட்டது

நமது ஊர்களில் யார் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்தாலும் அவர்களை உடனே கைது செய்து நமது காவல்துறை எதாவது கல்யாண மண்டபத்தைப் பிடித்து அடைத்துவைக்கும். மதியவேளை வந்தவுடன் அந்த கட்சியின் சார்பில் அந்த மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிரியாணி முதல் பீடி சிகெரெட் வரை அனைத்தும் அவர்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சார்பில் அங்கே வழங்கப்படும். நெல்லுக்குப் பாய்வது புல்லுக்கும் பாயும் என்பது போல அங்கே காவலுக்கு இருக்கும் காவல்துறை நண்பர்களுக்கும் கவணிப்புக்கு குறை இருக்காது. ஆனால் கம்னியூஸ்டு கட்சியினர் மறியலோ ஆர்ப்பாட்டமோ செய்தால் காவல்துறையினர் அவ்வளவு சீக்கிரம் அவர்களை கைது செய்யமாட்டார்கள். அப்படியே கைது செய்தாலும் அவர்களுக்கு மண்டபமெல்லாம் கிடையாது.ஏதாவது ஒரு பள்ளிக்கட்டிடம் அல்லது அரசுக் கட்டிடத்தில் அவர்களை அடைத்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு காவல்புரிய எந்த அதிகாரியும் முன்வரமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு காவல் இருந்தால் அவர்களோடு சேர்ந்து காவல் இருப்பவரும் பட்டினி கிடக்கவேண்டியது தான். பசிக்குது என்று ஒரு பன்'னை (Bun) வாங்கித்தின்றாலும் அதிலே பாதியை அவர்கள் கேட்பார்கள். அந்தளவிற்கு ஏழைக்கட்சி என்றால் அது நிச்சயமாக கம்னியூஸ்டுகள் தான்

மற்ற கட்சிகள் பொதுக்கூட்டம் போடுவதென்றால் மேடை,டியூப்லைட்டு முதல் அந்த கூட்டத்திற்கு ஆட்கள் வரை கூலிக்கு பிடித்து அந்தக் கட்சியின் மாவட்டச்செயலாளரின் தாலியை அறுத்து விடுவார்கள். போதாக்குறைக்கு அந்த சிறப்புபேச்சாளருக்கு கறிச்சோறு,பேட்டா என ஒரு பெரிய தொகை தொலைந்து போய்விடும். ஆனால் கம்னியூஸ்டு கட்சியின் கூட்டத்திற்கு மேடை, லைட்டு,ஆடியன்ஸ் என எதுவுமே தேவையில்லை . அவர்களுக்கு தேவை ஒரு மைக்செட் மற்றும் கொஞ்சம் சோடா பாட்டில்கள் . இது இரண்டும் இருந்தால் போதும் அவர்களின் கூட்டம் இரண்டு நாட்கள் கூடத் தொடர்ந்து நடக்கும். பார்வையாளர்களை விட பேச்சாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். கம்னியூஸ்டு கட்சியில் யாருமே பணக்காரர்கள் கிடையாது. அப்படியே தப்பித்தவறி ஒரு சில பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களிடம் நிதி வசூல் பண்ணியே அவர்களை ஏழையாக்கிவிடுவார்கள் தோழர்கள். காரணம் முதலாளித்துவத்தையும், முதலாளிகளையும் ஒழிக்கவேண்டும் என்பதே அவர்களின் முக்கிய குறிக்கோள்

இப்ப என்ன மேட்டருன்னா மதுரையில மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்டு சார்பாக தோழர் மோகன் போட்டியிடுவது தெரிந்த விசயம்.இந்த முறை அவரை எதிர்த்து அண்ணன் அஞ்சாநெஞ்சன் அழகிரியும் போட்டியிடுகிறார். யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். இந்த நிலையில் இன்று கலைஞர் தொலைக்காட்சி செய்திகளில் மதுரை திமுகவின் காரியாலயம் மீது கம்னியூஸ்ட்டு கட்சியினர் வெறியாட்டம், பேனர்கள் எரிப்பு என படங்களோடு காட்டினார்கள். மதுரையைப் பொருத்தவரை தோழர் திரு.மோகன் அவர்கள் மிகச்சிறந்த சமூக ஆர்வலர் மற்றும் சிறந்த சிந்தனையாளர். இவர் இன்னமும் வாடகை வீட்டில் தான் இருக்கிறார் (பொழக்கத் தெரியாத மனுசன்) தனக்கென்று சொந்தமாக ஒரே ஒரு பஜாஜ் M80  மட்டும் தான் வாகனமாக பயன்படுத்துகிறார். இவருக்கென்று அங்கே அல்லக்கைகள் ஜால்ராக்கள் எல்லாம் கிடையாது. சாதரணமாக சாலையிலே நடமாடக்கூடியவர். இப்பேர்பட்ட ஒருத்தோழரின் தொண்டர்கள் இந்த வேலைகளைச் செய்திருப்பார்களா என்பது சந்தேகத்துக்குறியது தான்

ஒருவேளை அவர்கள் இதைச்செய்திருந்தால் அது அண்ணன் அஞ்சா நெஞ்சருக்கே மிகச்சாதகமாக முடியும். தேர்தல் வரை அண்ணன் அடக்கிவாசிக்கிறார் என்பதற்காக கம்னியூஸ்டுகளே பலான பலான வேலைகளைச் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.அதுவும் மதுரை திமுகவினரே இவ்வளவு அமைதியா இருக்கும் போது மற்றவர்கள் அராஜகம் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது

அதான் சொன்னாங்க "பூனை எலச்சா எலி எதுக்கோ கூப்புடுமாம்" அந்த கதையில எங்க அண்ணன் கொஞ்சம் லூஸூ வுட்டதும் யாராரெல்லாம் கெளம்பிட்டாய்ங்கே! இருக்குடி உங்களுக்கு எலக்சன் முடிஞ்சி

பின்குறிப்பு: மற்றபடி செய்திக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கம்னியூஸ்டுகள் தகரம் கண்டுபிடிக்கும் முன்னே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் !

ஹரிகரன் சொன்னது…

“கம்னியூஸ்டுகள் தகரம் கண்டுபிடிக்கும் முன்னே உண்டியல் கண்டுபிடித்தவர்கள்”

உண்டியலைக் குலுக்கியவர்களால் நமது மக்களின் பெரிய உண்டியலான வங்கிகள் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து காப்பாற்றப்பட்டது. ஆனால் துரதிஷ்ட்ம் வங்கிகளை தாரைவார்க்க(பாராளுமன்றத்தில்மசோதா தாக்கல்) முயன்று தோற்றுப்போன ப சி க்கள் இந்தியாவில் மக்கள் சேமிப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என பீற்றிக்கொள்கிறார்கள். எல்லாம் விளம்பரம் தான்..

saamakodanki சொன்னது…

என்ன கொடும சார் இது? திமுக கார பாசக்கார பயலுக எல்லாம் சாதுவா மாறிட்டாங்கன்னா நீங்க நம்பித்தான் ஆகணும்். அண்ணன் புண்ணியத்துல இப்ப அட்டாக் பாண்டி தீ வெக்கறத எல்லாம் நிறுத்திபுட்டு, அஞ்சாநெஞசன் குடுத்த மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலீவர் பதவிய பொறுப்ப கவனிச்சுட்டு இருக்காரு. இப்பிடி கழக தலயின் எவருக்கும் பயப்படாத, ஈ, எறும்புக்கும் தொல்ல குடுக்காத தினகரன் தீவைப்பு போன்ற நல்ல காரியங்கள செஞ்ச அட்டாக் பாண்டி போன்ற அஞ்சாநெஞ்சரின் உடன்பிறவா தம்பிகள் இருக்கும் போது, தீவைப்பில் அனுபவமே இல்லாத கம்யூனிஸ்டுகள் பாவம் எப்படி இப்படிலாம் தீவைப்பாங்க.....?
யார்ட்டயும் சொல்லாதீஙக கழுத...ஒரு விஷயத்த காதுல போடுறேன். மதுரயில் தேர்தல் பிரச்சாரம் முடியுற வர தெனமும் ஏதாவது ஒரு எடத்துல கழக தேர்தல் அலுவலக அலுவலகங்கள( கீற்று கொட்டகைகள) தீ வெச்சு பரபரப்பாக்குறது...திமுக வுல இருக்குற இளிச்சவாய் பேச்சாளர்கள..மேடையில் நல்ல ஏத்திவிட்டு எதிர்க்கட்சிகாரங்கள பத்தி பேச வெச்சுட்டு,,,,கொஞ்ச நேரம் கழிச்சு கூட்டம் முடிஞ்ச பின்னால, அந்த பேச்சாளர் வீட்டுக்கு போகும் போது பின்னாலயே அட்டாக் பாண்டி போன்ற உடன்பிறப்புகள அனுப்பி அந்த பேச்சாளர் மண்டயில் சோடா பாட்டிலால ஒரே போடு........மண்டய ஒடச்சுட்டு ஆஸ்பத்திரியல் படுக்க போடுறது.
அடுத்த நாள் பேப்பர் செய்தி என்ன தெரியுமோ? திமுக பேச்சாளருக்கு அடி, உதை.மண்டை உடைப்பு
கருணாநிதி கண்டனம்

satheshpandian சொன்னது…

அழகிரியாவது திருந்துறதாவது??

கம்யூனிஸ்ட் மேல ஏதாவது பிரச்சினைகள் கொண்டு வரணும்னு சொல்லி அழகிரி செஞ்ச ஏற்பாடுங்க இதெல்லாம்

பெயரில்லா சொன்னது…

கொலைஞர் மகன் கொலகிரி ரொம்ப சாது. என் வாய்க்கு பதிலாக பின்பக்கம் உள்ள கீழ்பாகம் சிரிக்கிறது.