திங்கள், 20 ஏப்ரல், 2009

கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை, காவல்துறையும் இல்லை

மக்கள் வெள்ளத்தில் நீந்தி ஒவ்வொரு ஊரிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிரசார யுக்தியே தனி தான். அலைபோல கூட்டம் என்பார்கள் ஆனால் அங்கே மக்கள் தலைகளாக கூடுகிறது கூட்டம். வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதியை வெல்லப் போவது அதிமுக தான் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இன்றி நிறுபிக்கிறது இந்த மக்கள் வெள்ளம். ஒவ்வொரு ஊர்களுக்கும் என்ன என்ன தேவை, அவர்களின் எதிர்பார்ர்பு என்ன என்பதைப் பற்றியெல்லாம் முன்கூட்டியே பட்டியல் தயார் செய்து மக்களை சந்திக்கப் போகும் அம்மா அவர்கள் பேசும் பேச்சுக்கள் அங்கு கூடியிருக்கும் அதிமுகவினரை மட்டுமின்றி அங்குள்ள மக்களை மிகக் கவர்ந்து விடுகிறது

இந்த நிலையில் தூத்துக்குடியில் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரச்சாரக்கூட்டம் நடந்தது. அங்கு பேசிய ஜெயலலிதா கலைஞரை ஒரு பிடி பிடித்து விட்டார். அதாவது கலைஞரின் கட்டுப்பாட்டில் அவரது குடும்பமும் இல்லை, காவல்துறையும் இல்லை, திமுக கட்சியும் இல்லை என ஒரு நச் உதாரணத்தைக் கொடுத்து அனைத்து தொண்டர்களையும் உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டார்

சமீபத்தில் காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்கள் நீதிபதிகள் என்று பாராமல் 'டின்' கட்டிய சம்பவத்திலிருந்து அதற்கான காரணம் யார் என்பதை இதுவரை தமிழகத்தின் முதலமைச்சரும் காவல்துறை அமைச்சருமான கலைஞர் விளக்கம் கொடுக்கவே இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது அவரது கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. அதை அவரது பரந்து விரிந்த குடும்பத்தில் உள்ளவர்கள் யாரோ தான் இயக்குகிறார்கள்

அதுமட்டுமின்றி கலைஞரின் கட்டுப்பாட்டில் அவரது குடும்பமும் இல்லை. ஒருவர் ஒன்று சொன்னால் மற்றொருவர் அதைச் செய்யாமல் அதற்கு மாற்றமாகச் செய்து மகிழ்சியடைவார். இதிலிருந்தே தெரிகிறது அவரது குடும்பமும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை

அதே போல திமுக கட்சியும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அவரே வாக்குமூலமாகக் கொடுத்து இருக்கிறார். அதாவது சமீபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அந்தமேடையின் மீது உதயசூரியன் சின்னம் மட்டும் தான் வைக்கப்பட்டிருந்ததாம். உடனே அங்கிருந்த மாவட்டச் செயலாளருக்கு போன் போட்டு அந்த மேடையில் கை சின்னம் வைக்கச் சொன்னாராம்

பின்னர் சிறிது நேரம் கழித்து தொலைக்காட்சியில் பார்த்த போது அங்கே கை சின்னம் வைக்கப்படவில்லையாம். உடனே மீண்டும் மாவட்டச்செயலாளருக்கு போன் போட்டு அங்கே கை சின்னம் வைக்காவிட்டால் நான் அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். உடனே ஆற்காட்டார் மற்றும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் சென்று கலைஞரை சமாதானம் செய்து அழைத்து வந்தார்களாம்

பாருங்கள் நிலையை! ஒரு கட்சியின் தலைவர் சொல்வதை அந்தக் கட்சியின் ஒரு மாவட்டச் செயலாளரே நிராகரிக்கிறார் என்றால் அவரது கட்டுப்பாட்டிலா கட்சி இருக்கிறது? காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைக்கமுடியாத, குடும்பத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கமுடியாத ஏன் தனது கட்சியையே தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாத கலைஞருக்கு இனியும் முதலமைச்சர் பதவி ஒரு கேடா

எனக்கு சுய நலம் இல்லை. எனக்கு குடும்பம் இல்லை. என்வே செயல்பட முடியாமல் வெறும் சாவி கொடுக்கும் பொம்மையாக உள்ள கலைஞரை அடியோடு நிராகரித்து புரட்சித் தலைவர் தந்த சின்னமாம் மக்கள் சின்னமாம் ஏழைகளின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திலே வாக்களிப்பீர். வெற்றி பெறச் செய்வீர்,. என பொழிந்து தள்ளிவிட்டார். பார்க்கலாம்  மக்களின் மன நிலையை,,.

4 கருத்துகள்:

krishnaaleelai சொன்னது…

நிறைய வடுக்கள் தமிழக வாக்காளர்களிடத்தில் இருக்கிறது. எம் ஜி ஆர் காலத்து வெற்றி கிடப்பது இப்போது மிகவும் சிரமம்தான்

ttpian சொன்னது…

உங்கள் கட்டுரை சம்பந்தமாக....
நாம் முக்கியமாக செய்யவேண்டியது...டெல்லியில் உள்ள மலயாலிகலின் கைகலை முடக்க வேண்டும்:இந்த கைகல்தான்,நமக்கு எதிராக எல்லா கெடுதிகளையும் செய்கிறது!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// krishnaaleelai கூறியது...
நிறைய வடுக்கள் தமிழக வாக்காளர்களிடத்தில் இருக்கிறது. எம் ஜி ஆர் காலத்து வெற்றி கிடப்பது இப்போது மிகவும் சிரமம்தான்//

ஆமாண்ணே! உண்மைதான்

பெயரில்லா சொன்னது…

///நாம் முக்கியமாக செய்யவேண்டியது...டெல்லியில் உள்ள மலயாலிகலின் கைகலை முடக்க வேண்டும்:இந்த கைகல்தான்,நமக்கு எதிராக எல்லா கெடுதிகளையும் செய்கிறது///

உண்மைதான்