திங்கள், 2 மார்ச், 2009

பாராட்டு விழாவுக்கு தயாராகிய கலைஞர்

நானும், கழுதை துவங்கிய நாள்முதலா கலைஞரையே போட்டுத் தாளிக்கவேணாம், வேறு ஏதாவது செய்தி போடாலாம்னு முயற்சி பண்றேன். ஆனா கலைஞரை நான் விட்டாலும் கலைஞர் விடமாட்டார் போலத் தெரியுது, நான் என்ன செய்ய.,, நேத்து தான் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கலைஞர் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காம மக்கள் தொண்டாற்ற மீண்டும் கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு., ஆமாம் நேத்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு சுடசுட ஒரு கடிதம் எழுதி மக்களை கண்ணீர் விட வச்சிட்டாரு. "இனி என் உயிர் உங்கள் உயிர்" என்ற தலைப்பில் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு வரைந்த கடிதத்தில் நான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனா முதுகுல ஆப்பரேசன் பண்ணும் போது தவறுதலா கத்தியை செங்குத்தாக சொருகினாலன்றி மற்ற வகையில் உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது என்பது கிராமத்து உடன்பிறப்புகளுக்கு கூட தெரியும் போது கலைஞர் எழுதிய அந்த கடிதத்தில் "மறுபிறவி" என்பதற்கான அர்த்தம் நமக்கு புரியவில்லை.
ஒருவேளை ஆபரேசன் தியேட்டருக்குள் நுழையும் போது ஆற்க்காடு வீரசாமியை நெனச்சி பயந்திருப்பாருன்னு நெனக்கிறேன். ஆமாங்க கலைஞருக்கு ஆபரேசன் நடக்கும் போது ஆற்காட்டார் வழக்கம்போல மின்வெட்டாராகி தனக்கு வேட்டுவைத்து விடுவாரோ என கலைஞர் பயந்திருக்கிறார். அதனால் தான் மறுபிறவி என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.
இப்ப இன்னா மேட்டருன்னா நம்ம இவ்ளோ சொல்லியும் முதல்வர் கலைஞர் தலைமையில் மார்ச் 28-ம் தேதி AR. ரஹ்மானுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா என்று அறிவிக்கப்பட்டுளது. அறிவிக்க சொன்னதே கலைஞர் தான் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ., நீங்க வேணுமினா பாருங்க ரஹ்மானுக்கு பாராட்டுவிழா என்று சொல்லி அங்க பேசுறவர்கள் எல்லாம் சூரியனே, சந்திரனே, உலகமே, தமிழே, தமிழகமே, வள்ளலே, பாரியே, காரியே, ஓரியே, (சோ)மாரியே என வாய்ல வந்ததெல்லாம் சொல்லி கலைஞரை மட்டுமே வாழ்த்துவார்கள். ரஹ்மான் வெறும் கறிவேப்பிலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை நமக்கு.அது ஏன் 28 வரை தள்ளிப்போடனும், கலைஞர் ரெஸ்ட் எடுப்பதற்காகவா என்றால் அதுதான் இல்லை. கவிஞர் வாலிக்காக கொடுக்கப் பட்ட காலம் அது. ஏனென்றால் கலைஞரை ஒபாமா வரை ஒப்பிட்டாகிவிட்டது. இனிவேறு யாருடன் ஒப்பிடுவது என்பதை கவிஞர் வாலி யோசிப்பதற்க்காகத் தான் அந்த காலக்கெடு.மற்றபடி இன்னிக்கே பாராட்டு விழா என்றாலும் கலைஞர் படுத்துக்கொண்டாவது கலந்து கொள்வார். 
ஈழம் ஒருபுறம் எரிய, தமிழகம் மறுபுறம் எரிய,கொத்துக்கொத்தாய் தமிழினம் அழியும் நேரத்தில் இது போன்ற பாராட்டு விழாவெல்லாம் தேவையா என கலைஞர் எப்போது தான் சிந்திப்பார்?????
மலரும் பதிவுகள் :"கலைஞரை கவுத்திய கவிஞர் வாலி" படிக்க கிளிக்குங்க.

6 கருத்துகள்:

ttpian சொன்னது…

we should not bother about FALLEN HAIR?
O.K?

பெயரில்லா சொன்னது…

உங்க அம்மாவுக்கு அல்லது அப்பாவுக்கு இதுபோல ஆபரேஷன் நடந்தால் அப்படித்தான் சொல்வியளா. மடக்கழுதை.

ரமேஷ் வைத்யா சொன்னது…

kazhuthai,
asaththal thodaratum.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இவருக்கு எப்போ மறுபிறவியில் நம்பிக்கை வந்தது.
மகா நடிகர்.
நடக்கப் போவதை அப்படியே கூறியுள்ளீர்...
மிக ரசித்தேன். அதுவும் ஆற்காட்டார் விமர்சனம் அருமை...
பெயரிலி காரணமின்றிக் கோவப்படுகிறார். உண்மை உறுத்துதோ.
பெயரிலி போன்றோரை நம்பியே சுயநல அரசியலை இலகுவாக நகர்த்துகிறார் ,முதல்வர்.

ரமேஷ் வைத்யா சொன்னது…

கபாலி,
மன்னிக்கவும். முந்தைய கமென்டில் கழுதை என்று இருப்பதை கபாலி என்று வாசிக்கவும்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

மன்னிப்பெல்லாம் வேண்டாமுன்னே, கழுதையும் கபாலியும் ஒன்னு தான்