வரும் தேர்தலில் திமுக தோல்வியடைந்தால் அதற்கு நானே காரணம் (அதான் நடக்கப்போவுது) என முன்னொரு மேடையில ஆற்காட்டார் பேசியிருந்தது பலருக்கு ஞாபகமிருக்கும். இப்ப என்ன மேட்டர்னா நேத்து அண்ணா அறிவாலயத்துல அவர் தம்பி அதாங்க வெளம்பர கம்பெனிக்காரருக்கு கல்யாணம் நடந்திச்சில்ல , அதில கலந்து கொண்டு பேசிய நம்ம கவிஞரம்மா கணிமொழி நம்ம மின்வெட்டு வீராசாமிய புகழ்ந்த புகழ்சியக் கேட்டு கூட்டத்திலேயே பலர் ரகசியமாக வாயப்பொத்தி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கலாம். கவிஞர்.கணிமொழி பேசும்போது "தலைவருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஒரு உறவுப்பாலமாக இருந்து வருபவர் ஆற்காட்டார்(ஆமா கரெண்டு கட் ஆனவுடனே கலைஞரத்தானே எல்லாம் திட்டுவாங்க.அப்ப திணமும் மக்களுக்கும் கலைஞருக்கும் இடையே ஒரு பாலம் ஏற்படும் இல்லயா? அதத்தான் சொல்றாங்க) . தலைவர் இடும் கட்டளைகளை அருகில் இருந்து செய்யக்கூடியவர்(கட்டப் பஞ்சாயத்தும் தலைவர் இடும் கட்டளையா?). நாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆற்காடு வீராசாமி அருகில் இருப்பதை கலைஞர் மகிழ்ச்சியாக கருதுவார் (ஆமா திருஷ்டிபடாம இருக்க அவருதான் கரிக்கிட்டு) என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இப்ப நாடு இருக்கிற நெலமைல இதெல்லாம் தேவையா? கடைசியா ஒரு கேள்வி. நேற்று தேனாம்பேட்டை வட்டாரத்தில் சுத்தமா கரெண்டு கட்டே இல்லயாமே? உண்மையா சார்.
ஞாயிறு அதிரடி: இந்த வாரம் "அதிமுக வேட்பாளர்களுக்கு சில டிப்ஸ்" படிக்கத்தவறாதீர்கள்
13 கருத்துகள்:
கபாலி, அப்புறமா மின்துறை அமைச்சரின் பேச்சு "விக்ரமன் பட ஹீரோ" ரேஞ்சுக்கு இருந்ததே. அதையும் கேட்டீர்களா?
Also need details of his speech & comments abt his speech.
COMMENT MODERATION PLS..
கபாலி மாமு... சும்மா பின்னுறியே எப்படி?
//Karthikeyan G கூறியது...
கபாலி, அப்புறமா மின்துறை அமைச்சரின் பேச்சு "விக்ரமன் பட ஹீரோ" ரேஞ்சுக்கு இருந்ததே. அதையும் கேட்டீர்களா?
Also need details of his speech & comments abt his speech.//
கார்த்திண்ணா, நான் ஆற்காட்டார் பேச்சை கேட்கவில்லை.அந்த டேப் கிடைத்தால் அதை வெளியிடுகிறேன்.,ஆனா ஆறுன கஞ்சி பழங்கஞ்சி ஆயிடும். நம்ம செய்தில்லாம் பாஸ்ட்புட் ரேஞ்சிக்கு ஒன் யூஸ் தான்(தற்பெறுமையல்ல,இது தான் இயந்திர வாழ்க்கை மக்களின் விருப்பம்)அன் துரோ தான்.
//நையாண்டி நைனா கூறியது...
கபாலி மாமு... சும்மா பின்னுறியே எப்படி//
எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்க தர்ர ஆதரவு மாமே! அப்பறம் உங்க படம் சூப்பர். எந்த ஸ்டூடியோல எடுத்திங்க நைனா.
தோஸ்து.... உன்னோட சரக்கு, பட்டையை கெளப்புது....
மாமு.... அப்பாலிக்கா... உன்னியை கூட்டனிலே சேர்த்து உனக்கு ரெண்டு சீட்டு கொடுத்தா, எனக்கும் ஒரு சீட்டு கொடுமாமே....
( உன்னிஎல்லாம் சீட்டு கொடுத்து தான் அடக்க முடியும்....., இல்லாங்காட்டி நீ இப்படிதான் போட்டு பின்னி பெடலேடுப்பே)
//குவாட்டர் கோயிந்தன் கூறியது...
மாமு.... அப்பாலிக்கா... உன்னியை கூட்டனிலே சேர்த்து உனக்கு ரெண்டு சீட்டு கொடுத்தா, எனக்கும் ஒரு சீட்டு கொடுமாமே....
( உன்னிஎல்லாம் சீட்டு கொடுத்து தான் அடக்க முடியும்....., இல்லாங்காட்டி நீ இப்படிதான் போட்டு பின்னி பெடலேடுப்பே)//
கரிக்கிட்டு பங்காளி குவாட்டரும் டாஸ்மாக்கும் கூடவே பிறந்தது,டாஸ்மாக் இல்லாம குவாட்டர் இல்லை,குவாட்டர் இல்லாம டாஸ்மாக் இல்லை என்பது தானே உண்மை.பாக்கலாம் சீட்டு கெடச்சா ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுக்கலாம்.
இன்றைய மூன்று பதிவும் கலக்கல் !
கார்ர்ட்டூனும் அமர்க்களம் !
அண்ணே! பாஸ்கர் அண்ணே! கண்ணாடிய கழட்டிட்டு நல்லா பாருங்க.இன்னிக்கி போட்ட பதிவு 2 தான்
எனாவது இளிச்சவாயன் மாட்டினால் போதுமே... மொத்த உலக கரண்டுக்கு அற்காட்டார்தான் காரணமா....? விட்டால் ஒரு ஏமாந்தவன் தலையில் எல்லாத்தையும் போட்டு பலிகடா ஆக்கிடுவிங்களே... மற்ற அரசியல் வாதி மாதிரி என்றைக்காவது சவடால் அடித்தோ.. எல்லாந் தெரிந்த மேதாவின்னோ அவரு சொல்லியிருக்காரா...? என்னைக்காவது அதிர்ந்து பேசிப் பாத்துருக்கிங்களா... அவரு ஏதோ கரண்ட, அவரு வூட்ல சேமிச்சு வச்சுகிட்டு கொடுக்காத மாதிரி பேசாதிங்க.. கரண்டு கொறைவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பாடு. நகரமயமாக்கல்னு பல காரணங்கள்... ஒரு அப்பாவியை பலிகடா ஆக்காதீர்கள்,
கந்தசாமி
கருத்துரையிடுக