புதன், 25 மார்ச், 2009

ஓய்ந்த கூட்டணி, பாய்ந்த கலைஞர்

நேத்து நம்ம அறிக்கையை கலைஞர் படிச்சிருப்பாரோ என்னவோ,இன்னிக்கு அவர் எழுதியிருக்கிற கேள்வி‍-பதில் அறிக்கை ரொம்பவே சூடாக சுவையாக இருக்கிறது. கலைஞரிடம் இருந்து வரும் மொக்கை அறிக்கைகள்,மொக்கை கடிதங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் இது போன்ற ரசனையான அறிக்கைகளும் வெளியாகும். அந்த வகையில் கலைஞர் இன்று வெளியிட்டுள்ள கரம் மசாலா அறிக்கை.

கேள்வி: இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை இந்திய அரசு தட்டிக் கழிப்பதைப் போல- இப்போது தமிழக முதல்-அமைச்சரும் அந்த பிரச்சினையை கைகழுவி விட்டார் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

 பதில்: இறையாண்மையைக் காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை மறுக்கவோ, மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ நானும் சரி- என் தலைமையிலே உள்ள தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை. டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கை பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள- காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள சேனாதிபதிகள் சமீப காலமாக முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா? இவைகளைப் பற்றித்தான் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் அல்லும், பகலும் ஆராய்ச்சி செய்து- அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அலையில் நம்மைப் பார்த்து இலங்கை தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.

அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே அவர்கள் தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

எச்சரிக்கை: அவர் தவறிப்போய் 2002-ம் ஆண்டு சட்டமன்றத்திலே முதல்-அமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம்- தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவோமென்று- அதை நினைத்து ராஜபக்சேவுக்கு பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார். எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: மேடையேறி இலங்கை தமிழர்களைப் பற்றி பேசினால் இந்த அரசு அவர்களை கைது செய்து விடுகிறது என்று ஒரு பிரசாரம் நடைபெறுகிறதே?

பதில்:காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் "வேசி மக்கள்'' என்றும் - இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.

கேள்வி: அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை டெல்லியில் தான் இருந்தது. இப்போது சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்-அமைச்சரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்: அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற நேரத்தில்- தம்பி பரிதி இளம்வழுதி இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு கவனஈர்ப்பு தீர்மானத்தை அவையிலே எழுப்ப முனைந்தபோது- அதற்கு அனுமதி மறுத்து அ.தி.மு.க. அரசின் சார்பில் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா- இலங்கை பிரச்சினையிலே இந்தியா தலையிட முடியாது- அது ஒரு அயல் நாட்டு பிரச்சினை என்று பேசி அது இன்றும் நடவடிக்கை குறிப்பிலே இருக்கிறதே, அதை டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விடலாமா? என்று கூறியுள்ளார்.

தேர்தல் பயிற்சிகளில் (?) முழுமூச்சாய் ஈடுபட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு இந்த கடிதம் மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் ஐய்யமில்லை.

கடைசியா ஒரு சந்தேகம் தலீவரே: இந்த அறிக்கையில் கல்லத்தோணி,சேனாதிபதிகள் போன்ற “கீவேர்ட்ஸ்  வைக்கோவையும் சேர்த்துத் தானே குறிக்கிறது தலீவரே?

தென்னமரத்துல தேள் கடிச்சா பன மரத்துல நெரிகட்டிச்சாம்

15 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

சரக்கை அடிசிபுட்டு... ஹான் சாரி படிச்சிபுட்டு வாறேன்

நையாண்டி நைனா சொன்னது…

நல்லா கீதே கதை...

நிஜாம் கான் சொன்னது…

கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும் செய்தி உண்டா?

பெயரில்லா சொன்னது…

கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும், ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

***கரிமேடு கருவாயன் கூறியது...
கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும்***

இதுக்கெல்லாம் எங்க அண்ணாத்தே கபாலி வோணாம்... நானே சொல்லிகிறேன்.
நாற்பதும் அவங்களுக்குதான்.

*** ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.***

சீ எம்மு போஸ்டுக்குத்தான் நிப்பாங்களாம்.

இன்னா அண்ணாத்தே கரீட்டா நான் சொன்னது.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//நையாண்டி நைனா கூறியது...
சரக்கை அடிசிபுட்டு... ஹான் சாரி படிச்சிபுட்டு வாறேன்//


//நையாண்டி நைனா கூறியது...
நல்லா கீதே கதை...//

இது என்ன மாமே கத! இனிமே பாரு நீ அத.பாத்து நைனா இன்னிக்கி கொஞ்சம் சாஸ்த்தியா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Nijam Khan கூறியது...
கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும் செய்தி உண்டா?//

//கரிமேடு கருவாயன் கூறியது...
கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும், ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.//

கேள்விகளுக்கு நன்றி.பதில்களை கபாலியாண்ட கேளுங்க பகுதியில் பாருங்க ராசாக்களா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//குவாட்டர் கோயிந்தன் கூறியது...
***கரிமேடு கருவாயன் கூறியது...
கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும்***

இதுக்கெல்லாம் எங்க அண்ணாத்தே கபாலி வோணாம்... நானே சொல்லிகிறேன்.
நாற்பதும் அவங்களுக்குதான்.

*** ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.***

சீ எம்மு போஸ்டுக்குத்தான் நிப்பாங்களாம்.

இன்னா அண்ணாத்தே கரீட்டா நான் சொன்னது.//

ரொம்ப கரீக்கிட்டு மாமே....,
மாமே பேசாம இந்த கேள்வி பதில் பகுதிய ஒன்னாண்ட லீசுக்கு உட்றாலாமான்னு பாக்குறேன்.சோக்கு ஆன்ஸுவருபா. நம்ம கடக்கி வர்ர கச்டமர் அல்லாருமே நம்பர் ஒன்னுதேன்,

Karthikeyan G சொன்னது…

Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

***Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?***

கரீட்டுசார், இது மட்டுமா,
இன்னும் தமிழகத்திலும், வடக்கையும் தெற்கையும் சேர்த்தது, அப்பாலிக்கா "இதயம் இடிஞ்சது, கண்கள் பஞ்சடைந்தது" போன்ற சம்பவங்களுக்கும் சேர்த்து, ரகுமான் அண்ணாத்தேக்கு ரெண்டு ஆஸ்கார் கொடுத்தாம்மேரி, நோபெல்லும் ரெண்டா கொடுதுரலாமா என்று கழக கண்மணிங்க டாஸ்மாக்காண்டே பேசிக்கினு இருந்தாங்க...

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G கூறியது...
Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?//

உடன்பிறப்பே உன் கேள்விக்கு பதிலை அங்கு சென்று பார்த்துக்கொள்.அப்படியே கண்மனி கோயிந்தன் பதிலையும் படித்துக்கொள்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// குவாட்டர் கோயிந்தன் கூறியது...
***Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?***

கரீட்டுசார், இது மட்டுமா,
இன்னும் தமிழகத்திலும், வடக்கையும் தெற்கையும் சேர்த்தது, அப்பாலிக்கா "இதயம் இடிஞ்சது, கண்கள் பஞ்சடைந்தது" போன்ற சம்பவங்களுக்கும் சேர்த்து, ரகுமான் அண்ணாத்தேக்கு ரெண்டு ஆஸ்கார் கொடுத்தாம்மேரி, நோபெல்லும் ரெண்டா கொடுதுரலாமா என்று கழக கண்மணிங்க டாஸ்மாக்காண்டே பேசிக்கினு இருந்தாங்க...//



மாமே! இன்னிக்கி எங்க சரக்கு உட்டுகினே. நான் அப்பவே சொன்னேன் கலீஙரு அறிக்கய சாஸ்தி படிக்காதன்னு

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

கார்த்தி அண்ணாத்தேக்கு கொடுத்த, நம்ம ஜவாபு கரீட்டு தானே,

***மாமே! இன்னிக்கி எங்க சரக்கு உட்டுகினே. ***

இன்னாபா இப்படி கேட்டுகீரே........நானெல்லாம் ராமதாசு மேரி இல்லம்மே. உங்கடை சரக்குதான் நமக்கு எப்பவும்.

***நான் அப்பவே சொன்னேன் கலீஙரு அறிக்கய சாஸ்தி படிக்காதன்னு***

அதை நான் என்ன வோணும்னா படிச்சேன். நேத்து என் வூட்டாண்டே ஒரு கழுதை எதையோ தின்னுப்புட்டு வந்துடுச்சு. அதுக்கு சீரனமே ஆவுலே போலே, சும்மா களிஞ்சிகினே இருந்துச்சி, இன்னாடா இது இப்படி களிஞ்சிகினே இருக்கேன்னு ஒரு டாக்டரை இட்டாந்து பார்த்தா, அது எங்கியோ போய் கலீங்கறு அறிக்கை பேபரை தின்னுருக்கு. செறிக்களே, களிஞ்சிகினே இருந்துருக்கு. அப்பத்தான் அதையே நான் பட்சேன்.

கழுதை அதுக்கும் செறிக்களே அதை பட்ச எனிக்கும் செறிக்களே.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//குவாட்டர் கோயிந்தன் கூறியது...
கார்த்தி அண்ணாத்தேக்கு கொடுத்த, நம்ம ஜவாபு கரீட்டு தானே, //


** கரீக்கிட்டுபா

//***மாமே! இன்னிக்கி எங்க சரக்கு உட்டுகினே. ***

இன்னாபா இப்படி கேட்டுகீரே........நானெல்லாம் ராமதாசு மேரி இல்லம்மே. உங்கடை சரக்குதான் நமக்கு எப்பவும்.

***நான் அப்பவே சொன்னேன் கலீஙரு அறிக்கய சாஸ்தி படிக்காதன்னு***

அதை நான் என்ன வோணும்னா படிச்சேன். நேத்து என் வூட்டாண்டே ஒரு கழுதை எதையோ தின்னுப்புட்டு வந்துடுச்சு. அதுக்கு சீரனமே ஆவுலே போலே, சும்மா களிஞ்சிகினே இருந்துச்சி, இன்னாடா இது இப்படி களிஞ்சிகினே இருக்கேன்னு ஒரு டாக்டரை இட்டாந்து பார்த்தா, அது எங்கியோ போய் கலீங்கறு அறிக்கை பேபரை தின்னுருக்கு. செறிக்களே, களிஞ்சிகினே இருந்துருக்கு. அப்பத்தான் அதையே நான் பட்சேன்.

கழுதை அதுக்கும் செறிக்களே அதை பட்ச எனிக்கும் செறிக்களே.//


மாமே குஜால் காமெடி இத்து கண்ணு.கலீனரு கடிதம்னாலே கய்த எல்லாம் இப்ப காண்டாயிடுதுங்க நைனா

பெயரில்லா சொன்னது…

//நாளைக்கே அவர்கள் தோணிகளை தயார் செய்யட்டும்.//

கருணாநிதியை கடலில் தூக்கிப்போட்டால் கட்டுமரமாக மிதப்பார். எல்லோரும் ஏறிப்போய்விடலாம். தமிழர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். இது செய்யமாட்டாரா என்ன.