இன்று காலை திடீரென்று தலைவர் கலைஞர் அண்ணா சமாதி முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை 4.30 க்கு வீட்டிலிருந்து புறப்பட்ட கலைஞர் வழக்கமாக யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்லமல் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்றார்.அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் கலைஞரின் வீட்டிற்குத் தகவல் தர அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவரும் (தமிழ்குடி தாங்கி அல்ல) விரைந்து வந்தார்.மருத்துவர் கலைஞரின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு சொன்னதற்கு அதை சாப்பிட மறுத்து விட்டார்.
இதையடுத்து முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். உடணடி உண்ணாவிரதம் இருக்க வசதியாக பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.வெயிலிலிருந்து காக்க அவருக்கு ஏர் கூலர்களும் பேன்களும் வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே கலைஞரின் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான உடன்பிறப்புகள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர சாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன. கலைஞரின் மனைவியார் தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கலைஞரின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுத்துக்க்க்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி , முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.. இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கலைஞரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.ஆனால் அதை ஏற்க கலைஞர் மறுத்துவிட்டார். அதன் பின்னர் நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உண்ணாவிரதம் குறித்து நிறுபர்களிடம் கூறிய கலைஞர்
புலிகள் நேற்று போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இதனால் நேற்று இலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். நேற்று இரவுமுழுவதும் கண்விழித்து இலங்கையில் இருதரப்பிலும் போர் நிறுத்த அறிவிப்பு வந்துவிடாதா என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், அதைக் கூட ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.அப்பாவிகளைக் காக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளையும் ஏற்கவில்லை. இதனால் அங்கு தீவிரமான நடவடிக்கையில் இந்தியா இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதை வலியுறுத்தியே நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார்.
போர் நிறுத்தம் கோரித்தான் இந்த உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளேன். என்னைப் பின்பற்றி யாரும் இவ்வாறு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். இந்த பிரச்னையில் என்னை மட்டும் நான் பலிகொடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்ற என் கோரிக்கையை திமுகவினர் கட்டளையாக மேற்கொள்ள வேண்டும்.இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அதிபர் ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். அதே போல என்னையும் பலி கொடுக்க நான் தயார் என்றார்.
இந்த நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கலைஞரிடம் உறுதியளித்தார். இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கலைஞர் அறிவித்தார்.
தனது உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவை அறிவித்து கலைஞர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடி தமிழர்களுக்கு எதிரான போர் நடவடிக்கைளை நிறுத்துவது என்ற முடிவை எடுத்துள்ளது. மேலும், இனிமேல் தமிழர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.எனவே இந்த அளவோடு உண்ணாநோண்பு திரும்பப் பெறப்படுகிறது என்றார்.
கலைஞர் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அண்ணா சமாதியில் குவிந்தனர். அவர்கள் இலங்கை அதிபருக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டபடி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கலைஞர் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த மதுரை நாடாளுமன்ற வேட்பாளரான அவரது மகன் அழகிரியும் மதுரை மேலமாசி வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலும், வேலூரில் துரைமுருகன் தலைமையிலும், கோவையில், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும், திண்டுக்கல்லில் பெரியசாமி தலைமையிலும், திருவாரூரில் அமைச்சர் மதிவாணன் தலைமையிலும், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், பட்டுக்கோட்டையில் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தலைமையிலும், தஞ்சையில் அமைச்சர் உபயதுல்லா தலைமையிலும் திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைஞர் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டவுடன் இவர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ? ஒன்னுமே புரியல ஒலகத்திலே! என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
அடுத்து வருவது: ஞாயிறு அதிரடி அட்சய திருதியை சிறப்புப் பதிவு படிக்கத்தவறாதீர்கள்
10 கருத்துகள்:
உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள். அதிலும் ஒரு சிலர்தான் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு நடிகர்கள். கலைஞர் அதில் ஒருவர்.
அதான் நீங்களே சொல்லீட்டிங்க. அறிவாலயத்துக்கு யோகா கிளாஸ் போனாஅவர பெண்டு நிமித்துடுவாங்ன்னுதான் கிளாசுக்கு போகாம மட்டம் தட்டிட்டாறு நம்ம ஐயா. இதுகூட தெரியாம இருக்கீங்களே!!! அய்யோ! அய்யோ!!
கலைஞர் தன் கடைசிக்காலத்தில் அரங்கேற்றிய சிறந்த நாடகங்களில் இதுவும் ஒன்று சரியான திட்டமிடப்பட்ட கதைவசனங்கள், சீன்கள்...
உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா ...?
எண்டா முகிலா... 85 வயசுல நீ எல்லாம் உயிரோட யாவது இருப்பியா...? அவர் வயசையும் உடல் நலத்தையும் பத்தி கவலை படாம உணர்வோட இருந்த ஒரு செயல இப்படி கொட்சை படுத்துறீங்க ளே ... உங்களுக்கு இதயம் இருக்குற இடத்துல கல்லா இருக்கு...?
இது நாடகமாட...? அவர் முதல்வர் பதவியில இருந்து விலகி இருந்தா மட்டும் உங்களுக்கெல்லாம் சந்தோசமா இருந்திருக்குமா...?
அவரும் இல்லேன்னா நீங்க எப்பயும் அனாதை தாண்டா....!
ஏண்டா ஜெயகணபதி, உனக்கு மனசாட்சியே இல்லியா?. இந்த எழவெடுத்த உண்ணாவிரதத்த ஒரு மாசம் முன்னாடியே பண்ணியிருந்தால் இந்த ஒரு மாசத்துல பலியான எத்தன குழந்தைகள, மக்களை காப்பாத்தியிருக்கலாம்?. தயாநிதி, பாலுக்கு நல்ல வரும்படியான துறை ஒதுக்கலைன்னா மட்டும் கோபமா ஆட்சிய கவுத்திடுவேன்னு மிரட்ட தெரியுது. ஆனா ஈழமக்கள் சாவுறதுக்கு தந்தி மட்டும்தான் குடுக்கத்தெறியும் உன் தலைவனுக்கு. ஒருவேளை உங்களுக்கெல்லாம் மக்களை சாகறதவிட பணம்தான் முக்கியமா போச்சோ?. அது ஏண்டா டாண்ணு எலக்சனுக்கு 3 வாரத்துக்கு முன்னாடி உண்ணாவிரதம் இருக்கணும்னு உங்களுக்கெல்லாம் தோணுது?. ஆனா ஒன்னு சொந்த மூளைய உபயோகிக்காம, தலைவன் என்ன சொன்னாலும் தலையாட்டற உன்மாதிரி முட்டாள் தொண்டர்கள் இருக்கும்வரை உங்க தலைவர யாராலும் அசச்சுக்க முடியாதுடா.
லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன் இன்றுடன் இருபத்தியொரு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
பிரான்சில் நான்கு தமிழ் இளைஞர்கள் பதினெட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்கள் ஆறாம் நாளிலிருந்து நீராகாரம் மட்டும் அருந்துகிறார்கள்,
கருணாநிதி அவர்கள் முதியவர் ,அவர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை
ஆனாலும் அவர் ஒரு உலக ரெகார்டை முறியடித்துள்ளார் என்று நினைக்கிறேன்
சாகும் வரை உண்ணவிரதத்தை ஆறு மணி நேரத்தில் முடித்தது ஒரு ரெகார்ட் தானே
///உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா ...?
எண்டா முகிலா... 85 வயசுல நீ எல்லாம் உயிரோட யாவது இருப்பியா...? அவர் வயசையும் உடல் நலத்தையும் பத்தி கவலை படாம உணர்வோட இருந்த ஒரு செயல இப்படி கொட்சை படுத்துறீங்க ளே ... உங்களுக்கு இதயம் இருக்குற இடத்துல கல்லா இருக்கு...?
இது நாடகமாட...? அவர் முதல்வர் பதவியில இருந்து விலகி இருந்தா மட்டும் உங்களுக்கெல்லாம் சந்தோசமா இருந்திருக்குமா...?
அவரும் இல்லேன்னா நீங்க எப்பயும் அனாதை தாண்டா....!///
வெ.ஜெயகணபதிக்கு அறிவுதான் இல்லையென்று நினைத்தேன்..ஆனால் மூளையே இல்லாத முட்டாள்போலும்....
மானங்கெட்டுப்போய் 85 வயது வரை இருப்பதைக் காட்டிலும்,மானத்தோடு இருப்பது வாழ்வதுதான் முக்கியம்....கருணாநிதி பெரிய வென்று..அந்த ஆள் இல்லாவிட்டால் அனாதையாடா...அந்த ஆள் இதுவரை கிழித்தது என்னவோ...
காங்கிரஸுக்கு அகில இந்திய அளவில் ஆதரவு தொய்ந்து வருகிறது. சோனியா காந்திக்கும் மற்ற காங்கிரஸ்காரர்களுக்கும் 'புலிகள்; மீது கன்னா பின்னாவென்ற கோபம் உண்டு. ராஜீவ் காந்தியைத் தூக்கியவர்கள் ஆயிற்றே புலிகள்.
இருந்தாலும், கலைஞர் ஒரு மாதம் முன்பு உண்ணாவிரதம் இருந்து இலங்கைப் போர் முடிந்து விட்டிருந்தால் இப்போது உள்ள பரபரப்பு வாக்கு வங்கிகளில் ஓட்டாக மாறாது. எனவேதான், தமிழினத்தலைவர் கலைஞர் இந்த உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, தான் ஏதோ பலி யாவதற்குத் தயார் என்ற பிரமையை உருவாக்கியிருக்கிறார்.
காங்கிரஸ் மேலிடமும், அகப்பட்டது வரை சுருட்டினால் போதும் என்று போர் நிறுத்த நாடகத்தை இப்போது அம்பலமேற்றுகின்றனர்.
புலிகளும் சாமானியப் பட்டவர்கள் அல்லர். தங்களுக்கு 'ஆப்பு' நிச்சயம் என்ற நிலை வந்த பின் தான் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று போரை நிறுத்துவதாகக் கூறிக் கொள்கின்றனர். 10 வருடமாக இவர்களுடன் பேசாத உலகத் தூதுவர்கள் இல்லை, போரை நிறுத்துமாறு வேண்டாத தலைவர்கள் இல்லை. இதுவரை போரை நிறுத்தாத புலிகள் இன்றுதான் உலக நாடுகளின் கோரிக்கைக்கு மரியாதை தருகின்றார்களாம். வேடிக்கை.
அதே போல், இலங்கை அரசாங்கமும் லேசுப்பட்டதில்லை. தங்கள் கை தற்போது ஓங்கியிருப்பதால் தற்போது அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது. இவர்கள் கை தாழுப் போது புலிகள் அவர்கள் கழுத்தையே வெட்டி விடுவார்கள் என்பது நிச்சயம்.
ஜெயகணபதி ....
பச்ச மண்ணா இருக்கீங்களே ... பாலு எது பீர் எது ன்னு கூட தெரியாம வளந்துடீங்கலே ... ஆத்தா .... ஜெயகணபதி நல்ல புத்திய குடு ஆத்தா ....
கருத்துரையிடுக