தேர்தல் அறிவித்து விட்டால் போதும் அப்போது தான் கலைஞருக்கு ஏழைகள் படும் கஷ்டங்கள் தெரியவரும். அதுவும் இந்தத் தேர்தலில் மக்கள் ஆப்பினைத் தீட்டிக்கொண்டு தயாராக இருப்பதைத் தாமதமாக உணர்ந்த தலைவர் கலைஞர் விதவிதமான கதைகளையும், தாலாட்டுகளையும் பாடி தமிழர்களைத் தூங்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அது என்னதுன்னு பொறவு பாக்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கதய பாத்திரலாம். 16 வயசு பூர்த்தியான ஒரு பருவ மங்கையை அழைத்த அவளது தாயார் மிகவும் தயங்கி தயங்கி அவளிடம் பேச முயற்சித்தால். அந்தப் பெண்ணும் தன் அம்மா ஏதோ சொல்லவருவதை மிகக் கவணமாக கேட்கத் தொடங்கினாள்.
"ரீத்து உணக்கு இப்ப என்ன வயசு"
"ஏம்மா எனக்கு இப்ப 16 கம்பிளீட் ஆயிடுச்சி"
"குட். இந்த நேரத்தில தான் அதப் பத்தி பேச முடியும், அதான் உன்னக் கூப்பிட்ட்டேன், அது வந்து அது வந்து"
"சீக்கிரம் சொல்லும்மா நான் வெளயாடப் போவனும்"
"அது வேற ஒன்னுமில்லடா கண்ணு, என்னட அம்மா இப்படி கேக்கிறாளேன்னு நீ தப்பா நினச்சிக்க கூடாது,என்ன?"
"சொல்லும்மா நான் தப்பா நினைக்கல"
"அது வந்து அது வந்து உனக்கு 16 வயசு பூர்த்துயாயிட்டதால் இந்த நேரத்துல தான் ஒரு அம்மாங்கிற முறையில செக்ஸ பத்தி உன்கிட்ட சில விளக்கங்கள் தரலாம்னு தான்..,,,உன்ன கூப்பிட்டேன்"
"ப்பூ.., இவ்ளோ தானா! நான் வேற என்னமோ விசயம்னு நெனச்சேன். சரி கேளும்மா உனக்கு எந்தெந்த பொஸிசனில என்னென்ன டவுட்?"
கத எப்டி. இந்த மாதிரி இப்ப இருக்கிற ஒலகம் ரொம்ப பாஸ்டா போயிக்கிட்டு இருக்கு. கரகாட்டக்காரன் படத்துல கவுண்டர் செந்திலிடம் சொல்லுவார்."டேய் தெரியும்டா உன்னப்பத்தி, நீ எந்தெந்த நேரத்துல எந்தெந்த டைப்பா முழிய மாத்துவேன்னு" அந்த மாதிரி மக்களுக்கு எதுவுமே தெரியாது என நினைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக அறிவித்துக் கொண்டிருக்கும் கலைஞரின் நிலையை என்னவென்று சொல்வது?
கலைஞரைப் பொருத்த வரை தேர்தலுக்கு முன் ஒரு மாதிரி உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். தேர்தல் முடிந்து வேரு மாதிரி வேறு மாதிரி விளக்கம் கொடுத்து கடிதம் எழுதுவார். சென்னை மாநகரத்தில் ஓடிக்கொண்டிருந்த நகரப் பேருந்துகளில் குறைந்த பட்சக் கட்டணம் 2 ரூபாயாகத் தான் இருந்தது.கலைஞர் ஆட்சியிலும் இதே நீடித்தது.பின்னர் பாம்பும் சாககூடாது கொம்பும் உடையக்கூடாது என்ற கதையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப் படவில்லை. ஆனால் பழைய பஸ்கள் எல்லாம் மாற்றப்பட்டு புது பஸ்கள் விடப்பட்டன. அதிலே 50 சதவிகிதம் உண்மை. அப்ப மீதி. ஆமாம் மீண்டும் பழைய தகரடப்பாக்களுக்கே புது பெயிண்டை அடித்து அதற்கு மாலை போட்டு சந்தனம் குங்குமம் அடிச்சி பொண்ணுபாக்க அலங்காரம் பண்ணுன புதுப்பொண்ணு மாதிரி மாலை போட்டு தலைவர் கலைஞர் தலைமையிலே விடியக்காலையிலேயே விழா எடுத்து வெளியே விடப்பட்டது. அந்தப் பேருந்துகளில் செய்யப்பட்ட ஒரே மாற்றம் என்னவென்றால் வெள்ளை போர்டு மஞ்சல் போர்டாக மாற்றம் கண்டது. இந்த செய்திகளை முழுக்க முழுக்க ஜெயா டிவி படம்பிடித்து வெளியிட்டிருந்தது.அது என்னவோ கலைஞருக்கு மஞ்சல் பிடிக்கும் என்பதற்காக வெள்ளை போர்டுகளை எல்லாம் மஞ்சலாக மாற்றினார் தலைவர் கலைஞர்.
அது மட்டுமின்றி தாழ்தள சொகுசுப் பேருந்து, தவழ்ந்து வரும் பவுசுப் பேருந்து, தகரமில்லா தங்கரதம், எம் போர்டு, டி போர்டு,கீ போர்டு என விதவிதமான கலர்களைக் கொடுத்து காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய மக்களை நோட்டு கொடுத்து டிக்கெட் வாங்க வைத்தார் தலைவர் கலைஞர். இந்த டகால்டி வேலைகளைச் சரியாக கண்டறிந்து வாதம் செய்தவர்கள் செல்வி ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மட்டும் தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் பதிலறிக்கையை அள்ளி விட்டு கட்டண உயர்வு என்பதெல்லாம் பொய் மறுவாதம் செய்தார் கலைஞர்.
சொகுசுப் பேருந்து, தாழ்தள சொகுசுப் பேரூந்து, விரைவுப் பேருந்து, எல்எஸ்எஸ், எம் போர்ட், பாயிண்ட் டூ பாயிண்ட் என கலர் கலராக பஸ்களை விட்டு அதில் கட்டணமும் விதவிதமாக வசூலிக்கப் பட்டது.
சாதாரண பஸ்களை குறைத்துவிட்டு மேற்படி பலான பஸ்களே அதிகமாக இயக்கப்பட்டன. இவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3 முதல் ரூ. 5 வரை போக்குவரத்து அதிகாரிகளின் மனத்துக்குத் தக்கபடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த நிலை நீடித்து ஆட்டோக்களுக்கு கொடுக்கும் காசை விட அதிகமாகவே கொடுத்த மக்கள் கலைஞரின் கட்டண தந்திரத்தை நன்கு புரிந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் இப்போது எலக்சன் அறிவிக்கப் பட்டுள்ளதால் விதவிதமான வித்தை காட்டியும் மக்களுக்கு கலைஞரைப் பார்த்து சிரிப்பு வந்ததே தவிர அனுதாபம் வரவில்லை. இதோ மறுபடியும் ஒரு அந்தர் பல்டியை அடித்திருக்கிறார் கலைஞர்.தமிழகத்தில் மறைமுகமாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான டவுன் பஸ்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி தாழ்தளமோ, சாதா பஸ்சோ அனைத்திலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இன்னும் என்னென்ன அறிவிப்பு வருமோ?
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோன்றுவது சாத்தியமே! காத்திருந்து தலைவருக்கு தேர்தலில் வேட்டு வைப்பது கண்ணான தமிழர்களின் லட்சியமே!
1 கருத்து:
உணர்ச்சி வசப்படும் உடன் பிறப்பு இருக்கும் வரையில் குள்ள நரிக்கு கொண்டாட்டமே.
கருத்துரையிடுக