திங்கள், 13 ஏப்ரல், 2009

சென்னை நகரவாசிகளுக்கு ஓர் அவசர‌ அறிவிப்பு

என் நண்பர் ஒருவர் வருகிற 15ம் தேதி வேலைதேடி துபாய் செல்ல இருக்கிறார். அதன் காரணமாக அவரிடம் உள்ள பொருட்களை விற்பதற்கு அலைந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் உள்ள ஒரு பிளக்ஸிபல் கம்ப்யூட்டரை (Flexible Computer) விற்க வேண்டும் என என்னிடம் கோரியிருந்தார். அதனால் இந்த பதிவில் அவருடைய பிளக்ஸிபல் கம்ப்யூட்டரை இணைத்திருக்கிறேன். ஒரே விலை 1,000 ரூபாய். பேரம் பேசக்கூடாது. எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது.

இந்த வகை Flexible Computer  க‌ள் லேப்டாப்களை விடச் சிறந்தது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக எடுத்துச்செல்லாம். மடிக்கணினி என்னும் லேப்டாப்களை உக்கார்ந்து கொண்டு மடியில் அல்லது டேபிள் மேல் வைத்துத் தான் இயக்கமுடியும்.ஆனால் இது போன்ற பிளக்ஸிபல் கம்பியூட்டர்களை நீங்கள் நடந்துகொண்டே இயக்கலாம். 

அவசரத் தேவையாதலால் அவருக்கு உதவி செய்யும் பொருட்டு புதிதாக கம்ப்யூட்டர் தேவைப்படுபவர்கள் உடனே என் மெயிலில் தொடர்பு கொள்ளவும். அதன் காண்ஃபிகிரேசன் பின்வருமாறு 

Brand: hp 

System Configuration: - 

         Pentium IV  1.6 G H z (Intel Pentium 2 duo core)

         1 GB  DDR Ram

         15.4 inch widescreen opengl x2AGP

         Video Card (32 MB )

         Nvidia AGP graphics card

         120 GB SCSI HDD

         DVD writer

         SBlive SoundBlaster

         2x Fire Wire

         3xUSB ports

         Complete with accessories & Easy comfort carry-case. 

தயவு செய்து தேவை உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

அந்த Flexible Computer ஐக் காண இங்கே கிளிக்கவும்

UPDATE TODAY : அதிசய உலகம் "நம்ப‌ முடியாத அதிசயங்கள்"

 

20 கருத்துகள்:

வெங்கடேசன் சொன்னது…

எடை போட்டு தர்ராயங்க வேன்னா வாங்க

நாமக்கல் சிபி சொன்னது…

:)

எனக்கு வேணாம்!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Venkatesan கூறியது...
எடை போட்டு தர்ராயங்க வேன்னா வாங்க//

எடை போட்டா! என்ன வார்த்த சொல்லிட்டீயண்ணே என்னோட பிளெக்ஸிபல் கம்பியூட்டர பத்தி.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

டாஸ்மாக் கபாலி கூறியது...
// நாமக்கல் சிபி கூறியது...
:)

எனக்கு வேணாம்!//



500 ரூவாய்க்கு கேட்டுப்புட்டு இப்ப எனக்கு வேணாம்னு டபாய்க்கிறியலா.,1000 ரூவா இருந்தா வாங்க‌

நாமக்கல் சிபி சொன்னது…

250?

இராகவன் நைஜிரியா சொன்னது…

கபாலியைக் கேளுங்க அப்படின்னு ஒரு பத்தி ஆரம்பிச்சுட்டு பதில் சொல்லாம இருந்தா என்னா மேட்டர் நைனா?

கேள்வி கேட்டு 13 நாளாச்சு.....

வடுவூர் குமார் சொன்னது…

குசும்பன் பதிவை படிச்ச பிறகுமா துபாய்க்கு வருகிறார்?
என்னிடம் அதே மாதிரி கணினி இங்கு இருக்கு வேனுமா?

பெயரில்லா சொன்னது…

1000 is too cost for this computer, Machchanukku aasaiya paaru...........

kanavugalkalam சொன்னது…

address soluka naan vanthu purchase seikeryan.

பெயரில்லா சொன்னது…

டுபுக்கு வேலை இல்லையா

பெயரில்லா சொன்னது…

ரொம்ப பழசு மச்சான், நீ வளர வேண்டும்

அன்பரசு சொன்னது…

1000 ரூபாயெல்லாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாதுங்னா... வெணும்ன.. 2 கிலோ பேரிச்சம்பழம் எடுத்துக்கங்க..

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// நாமக்கல் சிபி கூறியது...
250?//

ஓக்கேண்ணே! அந்த ஸ்டாண்ட மட்டும் எடுத்துக்கோங்க‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// இராகவன் நைஜிரியா கூறியது...
கபாலியைக் கேளுங்க அப்படின்னு ஒரு பத்தி ஆரம்பிச்சுட்டு பதில் சொல்லாம இருந்தா என்னா மேட்டர் நைனா?//

இந்த நைஜிரியாக்காரரு எப்போதுமே பெரிய கோவக்காரரு தான். அண்ணே! அடியில ஒரு அறிவிப்பு குடுத்திருக்கேன் பாக்கலயா? அட! அங்க இல்லண்ணே! கீழே பாருங்க. எலக்சன் பிசியால கொஞ்சம் ஒத்தி வச்சிருக்கு அதான் மேட்டரு.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// வடுவூர் குமார் கூறியது...
குசும்பன் பதிவை படிச்ச பிறகுமா துபாய்க்கு வருகிறார்?
என்னிடம் அதே மாதிரி கணினி இங்கு இருக்கு வேனுமா?//

அண்ணே! ஏற்கனவே ஒன்ன வச்சி விக்கமுடியல. அத நீங்களே வச்சிக்கிருங்க.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//m bala கூறியது...
address soluka naan vanthu purchase seikeryan.//

எழுதிக்குங்க. அறிவாலயம்,அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// பெயரில்லா கூறியது...
டுபுக்கு வேலை இல்லையா//

இல்லயே ராசா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// பெயரில்லா கூறியது...
ரொம்ப பழசு மச்சான், நீ வளர வேண்டும்//

நன்றி மாமே

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//பனங்காட்டான் கூறியது...
1000 ரூபாயெல்லாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாதுங்னா... வெணும்ன.. 2 கிலோ பேரிச்சம்பழம் எடுத்துக்கங்க..//

என்னது பேரிச்சம் பழமா.,,,சரிய்யா வேனும்னா 3 கிலோவா குடுங்க‌

அன்பரசு சொன்னது…

//டாஸ்மாக் கபாலி கூறியது... என்னது பேரிச்சம் பழமா.,,,சரிய்யா வேனும்னா 3 கிலோவா குடுங்க‌//

பரவால்லண்ணே...! கம்பெனில இருக்கறதே மொத்தம் 2 கிலோ தான். அதுக்கு என்னென்ன வருமோ பாத்து போட்டு கொடுங்க!