புதன், 1 ஏப்ரல், 2009

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

அரசியல் என்பதை ஒரு  சேவையாகக் கருதி கக்கன்,காமராஜர்,அய்யா பெரியார் போன்றவர்கள் அந்தக் காலங்களில் மிகமிக நேர்மையாக இருந்து சாகும் போதுகூட தங்களுக்கென எதையுமே விட்டுச்செல்லாமல் நல்லவர்கள் என்ற பெயரை மட்டும் சரித்திரத்தில் இடம்பெறச் செய்து விட்டு சென்றனர்.ஆனால் இன்றைய சரித்தம் கைநிறையக் காசு இருந்தால் போதும் நரேந்திரமோடியைக்கூட‌  நல்லவர் பட்டியலில் சேர்த்துவிடும் அளவிற்கு மிக மோசமாகிவிட்டது.

அரசியல் சேவையாக இருந்து பின் தொழிலாக மாறி இப்போது சூதாட்டமாக ஆகி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.அதிலே லாபமடைந்தவர்கள் நிறையப்பேர், நஷ்டமடைந்தவர்கள் வெகுசிலர். இரண்டுக்குமிடையே தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்த பட்டியலில் உள்ளவர் தான் புயல் தலைவர் வைகோ.

என்னமோ தெரியவில்லை வைகோ அவர்களை யார் புயல்தலைவர் என அழைக்க ஆரம்பித்தாரோ  அவருடைய அரசியல் வாழ்வும் புயலில் சிக்கிய  வாழைத்தோட்டமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறது. ஒன்றும் இரண்டும் மூன்றுதானே தம்பி என்ற தலைவர் கலைஞரின் கதை வசணமானது  தன்னை  சிறையிலடைத்து சித்திரவதை செய்த தலைவியின் பக்கமே மீண்டும் தள்ளிவிட்டு விட்டது. தன்மானத் தலைவர் என அழைக்கப்படும் வைகோவுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை

சீசன் சுற்றுலா பயணியான மருத்துவர் அய்யாவுக்கு ராசின்னா ராசி அப்டியொரு ராசி. அவர்  எங்கு சென்றாலும் ராஜ மரியாதை செவப்புக்கம்பள வரவேற்பு  என தடல்புடல் விருந்து தான்.விருந்தும் மருந்தும் 3 நாள் என்பார்கள்.அதே போல நம்ம தலைவர் தமிழ்க்குடிதாங்கி அய்யாவின் சீசனும் வெறும் 3 மாதம் தான்.அதற்கு மேல் அவர் எங்குமே தங்கமாட்டார். ஆனால் அவருக்கு கிடைக்கும் ராஜமரியாதை, துன்பத்திலும் துயரத்திலும் கூடவே இருந்து ஆறுதல் சொல்லும் உறவினர் போன்ற வைகோவிற்கு கிடைக்காததற்கு யார் காரணம்

சமீபத்திய கூட்டனி பேச்சிவார்த்தையில் சீசன் டிக்கெட் எடுத்துள்ள மருத்துவருக்கு அவர் கேட்ட சீட்டுக்களை கிளி எடுத்துக்கொடுப்பது போல அள்ளிக் கொடுத்த புரட்சித்தலைவி, துயரத்தின் தோழன் புயல் தலைவருக்கு ஏழாகி  ஆறாகி இப்போது நாலாகி நாறிப்போய் நிற்கிறது. அந்த நான்கு தொகுதியும் அவர் கேட்ட  தொகுதிகிடையாது. ஜவுளிக்கடையில் தீபாவளிக்கு யாருமே எடுக்காமல் கழித்துப் போட்டத் துணிகளைத்  தள்ளுபடியில் விற்பார்களே! அதேபோல‌ அனைவரும்  கழித்துப்போட்ட மிச்சமீதி தான் இப்போ வைகோ அவர்களுக்கு ஒதுக்கிய தொகுதிகள். என்ன செய்வார் வைகோ பாவம்.அவர் வாழ்க்கை ஆகிவிட்டது கூவம்.

ஏற்கனவே உள்ள இம்ச போதாதுன்னு அத்வானி வேற இன்னிக்கி பாசகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வைகோவை அழைத்துள்ளார்.இதக் கேட்டுக் கடுப்பாகிய வைகோ ஏற்கனவே அந்த அம்மா 4 தொகுதின்னு சொல்லியிருக்காஙக இப்ப இவங்க வேற நம்மள கூட்டனிக்கு கூப்பிட்டதக் கேட்டு அந்தம்மா  4 தொகுதிய 2 தொகுதி ஆக்கிருவாங்களோன்னு உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறார் புயல் தலைவர்.

ஒரு பக்கம் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதைப் போல மதிமுகவின் முக்கிய தலைவர்களை தலைவர் கலைஞர் பிடித்துக்கொண்டிருக்கிறார்.அவர்களும் கரும்பைக் கண்ட எரும்பு போல காந்தத்தைக் கண்ட இரும்பு போல பசக்கென்று ஒட்டிக்கொள்கிறார்கள்.இன்னொரு பக்கம் புலிகளின் ஆதரவுப் பிரசாரத்தால் என்னேரமும் கைதாகக் கூடிய நேரத்தை சோலி போட்டுப் பார்த்து கணித்துக் கொண்டிருக்கிறது காவல்துறை.இந்த நிலையில் புரட்சித்தலைவியும் புயல் தலைவரைப் பொறிச்சி எடுத்தால் பாவம் அவர் என்னதான் செய்வார்???? 

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. 

நாளைய நினைவுகள்: "துள்ளாத மனமும் துள்ளும்"

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வைகோ 5 சீட்டுக்கு ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனா அதுக்கு முன்னாடி கட்சியில 5 பேராவது மிச்சம் இருக்காங்களான்னு பாக்கனுமில்லியா? இல்லின்னா பிரபாகரனத்தான் எம்.பி. சீட்டுக்கு நிக்கச்சொல்லனும்.

பெயரில்லா சொன்னது…

பிரபாகரனை எதுக்குப்பா உங்கட அரசியல் சாக்கடைக்கே இழுக்கிறீங்க.. உந்த சாபம் தமிழ்நாட்டோடு போகட்டும். தமிழீழத்திற்கு வேண்டாம். கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள் இருக்கும்வரை தமிழகம் உருப்படாது.

மெய்பொருள் சொன்னது…

எப்பொருள் யார்யாருடையதாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதே நல்லறிவாகும்.

குடுகுடுப்பை சொன்னது…

பாவம் சார் வைக்கோ

முகமது பாருக் சொன்னது…

உங்கள் பதிவு அருமை தோழா, என்ன வைகோ கதிதான்.....

//அரசியல் என்பதை ஒரு சேவையாகக் கருதி கக்கன்,காமராஜர்,அய்யா பெரியார் போன்றவர்கள் //

யப்பா!! தந்தை பெரியாரின் வாழ்வு முழுக்க சமுதாயப் பணிதான் ..அவரிடம் இருந்து வந்தவர்கள் ஏற்கனவே அரசியலில் இருந்தவர்கள் நட்புடனும் கொள்கையுடனும் ஒத்துப் போயினர்..தயவுசெய்து வரலாற்றை திரிக்காதீர்...



தோழமையுடன்

முகமது பாருக்

பெயரில்லா சொன்னது…

Pirabhakaran moothirathai kudichalum, karunanithoyoh,J.J voh,ramadaso,vijayakantho,yevanum thiruntha porathillai, avara yen vambukku ilukkanum

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

பிரசுரத்துக்கல்ல!
//கணைப்புகள்//

கனைப்புகள் என்பதையே இப்படி கணைப்பு என எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
ஆனால் கழுதை ,கனைப்பதில்லை. குதிரையே கனைக்கும்.
கழுதை எழுப்பும் ஒலியை எக்காளமிடுதல் எனக் கூறுவர். அல்லது கத்தியது எனப் பொதுவாகக்
கூறுவார்கள்.

பெயரில்லா சொன்னது…

//பெயரில்லா -
பிரபாகரனை எதுக்குப்பா உங்கட அரசியல் சாக்கடைக்கே இழுக்கிறீங்க..//

உங்களுடைய பிரபாகரனை சர்வாதிகாரியாக்குவதற்காக தமிழீழம் காணவேண்டும் என்ற நிறைவேற முடியாத ஆசைக்காக இலங்கை தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாடு, வைகோவையும் நாசப்படுத்துகிறீர்கள்.

Kannan சொன்னது…

மதிமுக வையும் வைகோ அவர்களையும் பலவாறு விமர்சித்து செய்திகள் வருகிறதே ?

அவர்களுக்கெல்லாம் கீழே உள்ளதுதான் பதில்.

வைகோ தன் வாரிசுகளுக்காக கட்சியை நடத்தவில்லை.
வைகோ ,தனது சொந்தங்களுக்கும் பிள்ளய்களுக்கு மட்டுமே சிந்தனை அறிவு உள்ளது மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லவில்லை.
வைகோ ,அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை குவிக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பதை எல்லாம் பயப்படுத்தி மந்திரி ஆகத்தான் வேண்டும் என்று நினைக்கவில்லை.
வைகோ ,தனது சொந்த கட்சி கீழ்மட்டத் தலைவனையே ஆள் வைத்து கொள்ளவில்லை.
வைகோ ,பேருந்தையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ எரித்து மூன்று பேரை கொன்றது போல் தனது தொண்டர்களை தயார்படுத்தவில்லை.
தனிமனித ஒழுக்கத்தை எப்பொழுதும் மீறியதில்லை.
வைகோ ,ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை எனக்கு பதவிதான் முக்கியம் என்று அவனை கொள்ள கூட்டு சதி செய்யவில்லை.
வைகோ, தன் பிள்ளையின் அமைச்சர் பதிவிக்காக ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை என்று கொள்கை வைக்கவில்லை.vaiko

ஈழத்தமிழனுக்காக உண்ணாவிரதம் இருந்து , அதே ஈழதமிலனை போர் கொண்டு அளிக்கும் கட்சியோடும் அதற்க்கு துணை நின்ற கட்சியோடும் கூட்டு சேரவில்லை.

www.mdmkonline.com

nethi adi சொன்னது…

வை.கோபாலசாமி என திமுக வில் அறியப்பட்ட வைகோ.திமுகவை விட்டு விலகி தனி இயக்கம் கண்டவுடன் இளைஞர் மத்தியில் ஒரு பரபரப்பும் தமிழகத்தில் ஒரு எதிர் பார்ப்பும் உருவானது இது மறுக்க முடியாத உண்மை. அவர் நடத்திய மகாநாடு தமிழ் நாட்டின் இருபெரும் கட்சிகளுக்குமே ஒருவித அச்சத்தையும் தன் தொண்டைகளை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டு பண்ணியது . அதை சரியாக பயன்படுத்தாமல் காற்றாட்டு வெள்ளம் போல் புறப்பட்டு நல்ல ஒரு மாற்று இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக சென்று சேர்த்த இடம் அதிமுக. இதை அப்போதே யாரும் ரசிக்க வில்லை. அங்கே துவங்கியது மதிமுகவின் சரிவு பாதை. அது இன்றுவரை தொடர்கிறது, மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவால்விடுகிற இயக்கமாக வளர்த்திருக்க வேண்டிய மதிமுக இன்றைய நிலையில் தன்மானத்தை காப்பற்றியகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது . தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் தமிழகம் எதிர்கொள்ளும் தொலைநோக்கு பிரச்சனைகள் வரை தெரிந்த ஓரிரு தலைவர்களுள் வைகோவும் ஒருவர். தமிழக மக்கள் எதிர் பார்க்கும் நல்ல தலைவர்களின் பட்டியலில் வைகோவிற்க்கும் இடம் இருக்கின்றது. அரசியல் பற்றியே தெரியாத கத்துக்குட்டிகள் எல்லாம் இன்று சவால் விடுகின்றன.எந்த தொகுதியில் என்ன மக்கள் பிரச்சனையை இருக்கிறது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்ற தெரியாமல் யாராவது எழுதிகொடுத்ததை மேடைகளிலே பேசி என்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சவால்விடும் அளவிற்கு வளர்த்துவிட்ட இந்தகாலத்தில் .அரசியல் அறிவில் யாருக்கும் சற்றும் சளைக்காத வைகோ தொடங்கிய மதிமுக , அரசியலிலே முக்கிய திருப்பு முனையாக அறியப்பட்ட மதிமுக இன்று அடுத்த கட்ட முடிவிற்கு கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் மதிமுக எடுக்க கூடிய முடிவு வருகின்ற சட்டசபை தேர்தலுக்கும் , மதிமுக எதிர்காலத்திற்கும் மிக மிக முக்கியமானது இதை மதிமுக பொது செயலாளர்,கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எவ்வாறு கையாளுகிறார்களோ அதை பின்னோற்றிதான் மதிமுக வின் எதிகாலம் இருக்கும்.தனிமனித எதிர்ப்பை கைவிட்டு மதிமுக எதிர் காலத்தை முன்னிறுத்தி முடிவை அறியப்பட்டால் எதிர் காலத்தில் மதிமுக தவிர்த்து தேர்தலை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகும், காலம் கனியுமாயின் ஆழுமைதன்மையுடைய அளும்கட்சியாக வரும், மதிமுக விற்கும் அதன் பொது செயலாளர்க்கும் அந்த தகுதி இம்மி அளவும் குறைவில்லை முன்போலவே முடிவுகள் அறியப்பட்டால் மதிமுக பத்தோடு ஒன்றாக ஒரு அரசியல் கட்சியாக வலம் வரும் அதில் யாருக்கும் சந்தேகமில்லை.