புதன், 22 ஏப்ரல், 2009

தலீவரு கலீஞரு வூட்டுல டெலிபோனு இல்லியா?

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்யும் மருத்துவர் ராமதாஸ் ஒவ்வொரு இடங்களிலும் கலைஞரை கரும்பு மிசினுக்குள் விட்டு பிழிந்து விடுகிறார். அந்த வகையில் ஆரணி அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மருத்துவர் பேசுகையில்

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். நாங்கள் சொந்தம்பந்தம்பாசத்துற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம்இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமிராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லைஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 

(அய்யா வைத்தியரே! என்ன தான் இருந்தாலும் அவரு ஒங்க சம்பந்தி. இப்புடி பேசலாமாநான் நெனக்கிறேன் அன்புமணி சாருக்கு ஏதும் வரதட்சணை பாக்கி கொடுக்க வேண்டியது இருக்கோஇந்த வாரு வாருறீயலே தலைவரே!)

கருணாநிதி தானாகவே கேள்வி கேட்டு பதிலும் எழுதிக் கொள்வார். அதில் என்னைப் பற்றிய கேள்விதான் அதிகம் இருக்கும்

(ஆமா சாரு! முன்னாடியெல்லாம் முழுக்க முழுக்க அம்மாவையும் அண்ணன் வைக்கோவையும் பத்தித்தான் கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கிட்டு இருந்தார். நீங்க அதிமுக பக்கம் பாஞ்ச பொறவு இப்ப சிலபஸ் (Syllabus) மாறிடிச்சி. நல்லா கண்டு புடிச்சாருய்யா கேள்வி பதில.)

வட இந்திய தொலைக் காட்சிகள் தமிழீழத்துக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வருகின்றன. 

(அப்ப நேத்திக்கி வந்த NDTV  மேட்டரும் அப்புடி பட்டது தானாஇந்த மேட்டரு கலைஞருக்கு சாதகமா வருதே! ஆஹா ஒரு டவுட்டுநீங்க அதிமுக கூட்டணில இருக்கியலாஇல்ல திமுக கூட்டணில இருக்கியலா?அடிக்கடி கூட்டணி மாறுனா இது தான் நெலம‌) 

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் இலங்கையுடனான தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பும் கருணாநிதிசோனியாவுக்கு தந்தி அனுப்பும் கருணாநிதி,போனில் பேசினால் என்ன?.

(உங்களுக்குத் தெரியாதா? கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் இன்னமும் கிராம‌த்து தீப்பெட்டி போன் தான் யூஸ் பன்றாங்க. அதுல வெறும் LAN (Local) கனெக்சன் தான் குடுக்க முடியும். STD யெல்லாம் பேச முடியாது. இன்னொரு மேட்டரு கொஞ்ச நாள் முன்னாடி நஷ்டமாச்சின்னு சொல்லிதந்தி சேவைய நிறுத்தி வச்சிருந்த தபால் துறைஇப்ப கலைஞர் தந்தி கொடுக்க ஆரம்பிச்ச பொறவு நல்ல இலாபமா ஓடுதாம். ஆனாக்க போன எலக்சனுல 40 சீட்டு ஜெயிச்ச பொறவு கப்பல் மந்திரி பதவியும் தொலைதொடர்பு துறையும் கொடுத்தா தான் ஆதரவு தருவோம்னு மத்திய அரசுக்கு தந்தி குடுத்தாராஇல்லாட்டி டெல்லிக்கே நேர்ல போயி பேசினாரான்னு எனக்கு ஞாபகம் இல்லப்பா)

உலகில் உள்ள தமிழர்களின் மனசாட்சி முத்துக்குமரன். அவரை யார் என்று கேட்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர். தேர்தலில் அவருக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.

(இதுல என்ன மேட்டருன்னா உங்க ஆபிஸ்ல வேல பாத்துகிட்டு ஒரு ஆளு இவ்ளோ அப்பாவியா, இளிச்சவாயனா இருப்பாருன்னு யாரு கண்டா?இத்தன நாளு முத்துக்குமரண பத்திபேசாத நீங்க இப்ப ஏன் திடீர்னு பேசுறீங்கன்னு எனக்கு புரியல ஐய்யா)

கருணாநிதியை மக்கள் கண்டிக்கும் நேரம் வந்துவிட்டது. திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றார் ராமதாஸ். (தலைவரே! கொஞ்சம் பாத்து பேசுங்க. ஏன்னா இந்த எலக்சனுல‌ காங்கிரஸ் ஜெயிச்சா நீங்க ஏதாவது ஒரு புதுக் கதய சொல்லிப்புட்டு மறுபடியும் திமுக கூட்டணில தலைவர் கலைஞரோட சேர்ந்து அன்புமணிக்கு மறுபடியும் பதவி கேப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன?) 

பாவம் தலைவர் கலைஞர் இந்த வயசுலயும் எப்டியெல்லாம் சமாளிக்கிறாரு.,, அவ்..., .....

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தயாநிதி மாறன் கொண்டு வந்த திட்டத்தில் ஒரு ரூபாயில் காஷ்மீர் வரை பேசலாமே. தயாளு அம்மாவிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி போனில் பேச முடியாதா என்ன?

பெயரில்லா சொன்னது…

வலைப்பதிவாளர்கள் ஆளுக்கு ஐந்து பைசா போட்டு ஒரு ரூபாயை கலைஞருக்கு அனுப்பி வைக்கலாமா ?

சுட்டி குரங்கு சொன்னது…

sooper..u r cartoons are also great !

பெயரில்லா சொன்னது…

This man's credibility? Until a month or two ago his party was part of the UPA govt and son a minister,now he accuses the govt of fighting the war against tamils in srilanka.The same is true of CPI CPM etc How convenient for them to withdraw support for the UPA 6 months ago and blame them for all of the problems?

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

http://kaludai.blogspot.com/2009/03/blog-post_3928.html

தங்களின் இந்த பதிவு இந்த தளத்தில் உள்ளது..
\((http://tucklasssu.blogspot.com/2009/04/100.html)))